மேலும் அறிய

IND vs IRE 1st T20: முதல் போட்டி மழையால் பாதிப்பா..? இந்தியா vs அயர்லாந்து இடையேயான போட்டியை எங்கே காணலாம்..?முழு விவரம்!

IND vs IRE 1st T20 Live Streaming: இந்தியா vs அயர்லாந்து இடையேயான போட்டி குறித்த விவரங்களை இங்கே காணலாம்..

இந்திய கிரிக்கெட் அணி ஆகஸ்ட் 18ம் தேதி முதல் அயர்லாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட இருக்கிறது. இந்த 3 போட்டிகளும் அயர்லாந்தில் உள்ள டப்ளினில் நடைபெறுகிறது. முற்றிலும் இளம் அணியாக உள்ள இந்திய அணிக்கு ஜஸ்பிரித் பும்ரா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். காயம் காரணமாக விலகிய பும்ரா சுமார் 10 மாதங்களுக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட்டுக்கு திரும்புகிறார்.

இந்தநிலையில், இந்தியா vs அயர்லாந்து இடையேயான போட்டி குறித்த விவரங்களை இங்கே காணலாம்..

போட்டிகள் தேதி/நாள் இடம் நேரம் (இந்திய நேரப்படி)
IRE vs IND 1st T20I ஆகஸ்ட் 18 (வெள்ளிக்கிழமை) கிராமம், டப்ளின் 7:30 PM
IRE vs IND 2வது T20I ஆகஸ்ட் 20 (ஞாயிறு) கிராமம், டப்ளின் 7:30 PM
IRE vs IND 3வது T20I ஆகஸ்ட் 23 (புதன்) கிராமம், டப்ளின் 7:30 PM

பிட்ச் எப்படி..?

இந்தியா மற்றும் அயர்லாந்து இடையேயான முதல் டி20 போட்டி நடைபெறும் தி வில்லேஜ், டப்ளின் பிட்ச் பேட்ஸ்மேன்கள் அதிக ரன்களை குவிக்க உதவும். இந்த மைதானம் ரன் மழைக்கு பெயர் பெற்றது. முதல் இன்னிங்ஸின் சராசரி ஸ்கோர் 151 ஆகும்.

இந்த மைதானத்தில் இதுவரை மொத்தம் 17 டி20 போட்டிகள் நடந்துள்ளன. இதில் முதலில் பேட்டிங் செய்த அணி 7 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இரண்டாவதாக பேட்டிங் செய்த அணி 8 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

மழையால் போட்டி பாதிப்பா..? 

டப்ளினில் நாளை அதிகபட்ச வெப்பநிலை 18 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 15 டிகிரியாகவும் இருக்கலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  மழை பெய்ய 100 சதவீதம் வாய்ப்புள்ளதால், முதல் டி20 போட்டி மழையால் பாதிக்கப்படலாம்.  

அயர்லாந்துக்கு எதிரான டி20 போட்டிக்கான இந்திய அணி: ஜஸ்பிரித் பும்ரா (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ரிங்கு சிங், வாஷிங்டன் சுந்தர், ஷிவம் துபே, ஷாபாஸ் அகமது, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), ரவி பிஷ்னோய், பிரசித் சிங், அர்ஷ்தீப் கிருஷ்ணா, அர்ஷ்தீப் கிருஷ்ணா, குமார், அவேஷ் கான்.

இந்தியாவுக்கு எதிரான டி20க்கான அயர்லாந்து அணி: பால் ஸ்டிர்லிங் (கேப்டன்), ஆண்ட்ரூ பால்பிர்னி, ராஸ் அடேர், ஹாரி டெக்டர், கரேத் டெலானி, கர்டிஸ் கேம்பர், ஜார்ஜ் டோக்ரெல், ஃபியோன் ஹேண்ட், லோர்கன் டக்கர் (விக்கெட் கீப்பர்), மார்க் அடேர், ஜோஷ்வா லிட்டில், பேரி தியோக் வான் வொர்காம், பெஞ்சமின் ஒயிட், கிரேக் யங்.

அயர்லாந்து vs இந்தியா T20 தொடரை டிவியில் எப்படி பார்க்கலாம்..?

இந்தியா vs அயர்லாந்து தொடரினை ஸ்போர்ட்ஸ் 18 சேனலில் நேரடியாக பார்க்கலாம். 

அயர்லாந்து vs இந்தியா T20 தொடரை எந்த ஓடிடி தளத்தில் நேரடியாக பார்க்கலாம்..?

அயர்லாந்து vs இந்தியா டி20 தொடரின் நேரடி ஒளிபரப்பு ஜியோ சினிமாவில் இலவசமாக பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேருக்கு நேர்: 

 இந்தியா மற்றும் அயர்லாந்து இடையே இதுவரை மொத்தம் 5 டி20 போட்டிகள் நடந்துள்ளன. அதில், ஐந்து போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. கடைசியாக 2022ம் ஆண்டு விளையாடிய இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்திலும், இரண்டாவது போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

 “பிரபஞ்சம் இருக்கும் வரை... இதில்தான் கேப்டனின் ஆன்மா சந்தோஷமடையும்” - மனம் உருகி பேசிய பிரேமலதா விஜயகாந்த்
 “பிரபஞ்சம் இருக்கும் வரை... இதில்தான் கேப்டனின் ஆன்மா சந்தோஷமடையும்” - மனம் உருகி பேசிய பிரேமலதா விஜயகாந்த்
பெற்றோர் அச்சமடைய வேண்டாம்: அண்ணா பல்கலை நிர்வாகத்துக்கு ஆளுநர் போட்ட முக்கிய உத்தரவு!
பெற்றோர் அச்சமடைய வேண்டாம்: அண்ணா பல்கலை நிர்வாகத்துக்கு ஆளுநர் போட்ட முக்கிய உத்தரவு!
TNPSC Free coaching: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுக்கு இலவசப் பயிற்சி: கலந்துகொள்வது எப்படி?
TNPSC Free coaching: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுக்கு இலவசப் பயிற்சி: கலந்துகொள்வது எப்படி?
குடி குடியை கெடுக்குமா? அதுனால என்ன பயன்? - கடிந்து கொண்ட நீதிமன்றம் - என்ன நடந்தது?
குடி குடியை கெடுக்குமா? அதுனால என்ன பயன்? - கடிந்து கொண்ட நீதிமன்றம் - என்ன நடந்தது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
 “பிரபஞ்சம் இருக்கும் வரை... இதில்தான் கேப்டனின் ஆன்மா சந்தோஷமடையும்” - மனம் உருகி பேசிய பிரேமலதா விஜயகாந்த்
 “பிரபஞ்சம் இருக்கும் வரை... இதில்தான் கேப்டனின் ஆன்மா சந்தோஷமடையும்” - மனம் உருகி பேசிய பிரேமலதா விஜயகாந்த்
பெற்றோர் அச்சமடைய வேண்டாம்: அண்ணா பல்கலை நிர்வாகத்துக்கு ஆளுநர் போட்ட முக்கிய உத்தரவு!
பெற்றோர் அச்சமடைய வேண்டாம்: அண்ணா பல்கலை நிர்வாகத்துக்கு ஆளுநர் போட்ட முக்கிய உத்தரவு!
TNPSC Free coaching: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுக்கு இலவசப் பயிற்சி: கலந்துகொள்வது எப்படி?
TNPSC Free coaching: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுக்கு இலவசப் பயிற்சி: கலந்துகொள்வது எப்படி?
குடி குடியை கெடுக்குமா? அதுனால என்ன பயன்? - கடிந்து கொண்ட நீதிமன்றம் - என்ன நடந்தது?
குடி குடியை கெடுக்குமா? அதுனால என்ன பயன்? - கடிந்து கொண்ட நீதிமன்றம் - என்ன நடந்தது?
Chennai Rain: சென்னைக்கு மழை இருக்கா, இல்லையா.! வானிலை மையம் தெரிவித்தது என்ன?
Chennai Rain: சென்னைக்கு மழை இருக்கா, இல்லையா.! வானிலை மையம் தெரிவித்தது என்ன?
உடைகிறது பாமக? மேடையில் மோதிக்கொண்ட தந்தை - மகன்!  காரணமான முகுந்தன் யார்?
உடைகிறது பாமக? மேடையில் மோதிக்கொண்ட தந்தை - மகன்!  காரணமான முகுந்தன் யார்?
PMK Meeting: மேடையிலேயே வாக்குவாதம்.. அன்புமணி-ராமதாஸ் மோதல்! பரபரப்பில் பாமக!
PMK Meeting: மேடையிலேயே வாக்குவாதம்.. அன்புமணி-ராமதாஸ் மோதல்! பரபரப்பில் பாமக!
Anna University Issue: அண்ணா பல்கலை. மாணவிக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு; கல்வி கட்டணமில்லை- நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Anna University Issue: அண்ணா பல்கலை. மாணவிக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு; கல்வி கட்டணமில்லை- நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Embed widget