மேலும் அறிய

Virat Kohli: அச்சச்சோ! இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்டில் இருந்து விராட் கோலி விலகல் - என்னாச்சு?

இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட்கோலி. ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் முடிந்த பிறகு சிறிய ஓய்வுக்கு பிறகு தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் மூலம் மீண்டும் அணிக்கு திரும்பினார். தென்னாப்பிரிக்க தொடர், ஆப்கானிஸ்தான் டி20 தொடரில் தற்போது விராட் கோலி ஆடி முடித்துள்ளார்.

விராட் கோலி விலகல்:

இந்த நிலையில், இந்திய அணி இங்கிலாந்து அணியுடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. இங்கிலாந்து அணி இதற்காக இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இரு அணிகளும் மோதும் முதல் டெஸ்ட் போட்டி ஹைதரபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி மைதானத்தில் ஆடுகின்றனர்.

இந்த நிலையில், இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டியில் ஆடமாட்டார் என்ற அதிர்ச்சிகரமான செய்தி வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக, அவர் இந்திய கேப்டன் ரோகித்சர்மா மற்றும் இந்திய கிரிக்கெட் நிர்வாகத்திடம் ஆலோசித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

என்ன காரணம்?

தனது தனிப்பட்ட சொந்த காரணங்களுக்காக விராட் கோலி முதல் 2 டெஸ்ட் போட்டியில் ஆடுவதில் இருந்து ஓய்வு கேட்டிருப்பதாக பி.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது. விராட் கோலி முதல் 2 டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியிருப்பது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. ஏனென்றால் இங்கிலாந்து போன்ற பலமிகுந்த அணியை எதிர்கொள்ள விராட் கோலி போன்ற ஒரு அனுபவமிக்க பேட்ஸ்மேன் இல்லாதது இந்திய அணியை பாதிக்கும். விராட் கோலி இந்தியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிராக அசத்தலான பேட்டிங்கை வெளிப்படுத்தியுள்ளார்.

குறிப்பாக, 2016ம் ஆண்டு நடந்த உள்நாட்டு டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிராக விராட் கோலி 5 டெஸ்ட் போட்டியில் 2 சதங்கள், 2 அரைசதங்கள் உள்பட 655 ரன்கள் குவித்து அந்த தொடரிலே அதிக ரன்கள் விளாசிய வீரராக திகழ்ந்தார். விராட் கோலி இதுவரை இங்கிலாந்து அணிக்கு எதிராக 28 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 5 சதங்கள், 9 அரைசதங்கள் உள்பட 1991 ரன்களை எடுத்துள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிராக விராட் கோலியின் அதிகபட்ச ஸ்கோர் 235 ரன்கள் ஆகும். இதில் 3 முறை நாட் அவுட்டாக திகழ்ந்துள்ளார். விராட் கோலி 113 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 29 சதங்கள், 7 இரட்டை சதங்கள், 30 அரைசதங்களுடன் 8 ஆயிரத்து 848 ரன்களை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: IND vs ENG: இந்திய மண்ணில் 12 ஆண்டுகால வறட்சியை முறியடிக்குமா இங்கிலாந்து..? புள்ளிவிவரங்கள் சொல்வது என்ன?

மேலும் படிக்க: Cheteshwar Pujara: முதல் தர போட்டியில் 20,000 ரன்கள்.. கவாஸ்கர், சச்சின், டிராவிட்டின் சிறப்பு கிளப்பில் நுழைந்த புஜாரா!

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Seeman:
Seeman: "நீதான் கெஞ்சனும்.. சேட்டைக்காரன் நான்.." சீமான் ஏன் ஆவேசப்பட்டார்?
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
Crime news: காதல் வலை.. ரகசிய வீடியோ.. 13 லட்சம் பறிப்பு! தெலுங்கானாவை அதிரவைத்த ஹனிட்ராப் தம்பதி
Crime news: காதல் வலை.. ரகசிய வீடியோ.. 13 லட்சம் பறிப்பு! தெலுங்கானாவை அதிரவைத்த ஹனிட்ராப் தம்பதி
ABP Premium

வீடியோ

Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்
Alanganallur Jallikattu TVK flag | ஜல்லிக்கட்டில் தவெக கொடி! ”பரிசு கிடையாது வெளிய போ” கண்டித்த கமிட்டி
Soori vs Vijay | ”தவெகவை மீறி படம் ஓடுமா” வம்பிழுத்த நெட்டிசன்! சூரி தரமான பதிலடி!
ESCAPE ஆன விழா குழுவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman:
Seeman: "நீதான் கெஞ்சனும்.. சேட்டைக்காரன் நான்.." சீமான் ஏன் ஆவேசப்பட்டார்?
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
Crime news: காதல் வலை.. ரகசிய வீடியோ.. 13 லட்சம் பறிப்பு! தெலுங்கானாவை அதிரவைத்த ஹனிட்ராப் தம்பதி
Crime news: காதல் வலை.. ரகசிய வீடியோ.. 13 லட்சம் பறிப்பு! தெலுங்கானாவை அதிரவைத்த ஹனிட்ராப் தம்பதி
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி! ஏடிஎம்-ல் பணம் எடுப்பதில் மாற்றம்: இனி எவ்வளவு கட்டணம்?
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி! ஏடிஎம்-ல் பணம் எடுப்பதில் மாற்றம்: இனி எவ்வளவு கட்டணம்?
பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் !! திருமணம் செய்த மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்
பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் !! திருமணம் செய்த மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்
Seeman Vs EPS: “ஆண்களுக்கு இலவச பேருந்து யார் கேட்டா.?; இபிஎஸ்-ன் தேர்தல் வாக்குறுதிகளை வறுத்தெடுத்த சீமான்
“ஆண்களுக்கு இலவச பேருந்து யார் கேட்டா.?; இபிஎஸ்-ன் தேர்தல் வாக்குறுதிகளை வறுத்தெடுத்த சீமான்
மும்பையில் அமோக வெற்றி: பாஜகவின் எழுச்சிக்கு பிறகு ராஜ் தாக்கரேவின் ரசமலாய் கிண்டலுக்கு அண்ணாமலை பதில்!
மும்பையில் அமோக வெற்றி: பாஜகவின் எழுச்சிக்கு பிறகு ராஜ் தாக்கரேவின் ரசமலாய் கிண்டலுக்கு அண்ணாமலை பதில்!
Embed widget