மேலும் அறிய

IND vs ENG: இந்திய மண்ணில் 12 ஆண்டுகால வறட்சியை முறியடிக்குமா இங்கிலாந்து..? புள்ளிவிவரங்கள் சொல்வது என்ன?

இங்கிலாந்து அணி கடைசியாக 2012ம் ஆண்டு இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறவுள்ளது. இந்த டெஸ்ட் தொடரானது வருகின்ற ஜனவரி 25-ம் தேதி முதல் தொடங்குகிறது. வெற்றி தொடரை தக்க வைக்கும் முனைப்புடன் களமிறங்குகிறது இந்திய அணி. அதே சமயம் இந்திய மண்ணில் 12 ஆண்டுகால வறட்சியை முடிவுக்கு கொண்டு வர இங்கிலாந்து அணி விரும்புகிறது.  இங்கிலாந்து அணி கடைசியாக 2012ம் ஆண்டு இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வாரம் தொடங்கும் இந்தியா - இங்கிலாந்து அணிக்கு இடையேயான தொடரில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் ‘பேஸ்பால்’ முறையை தொடர்வார்களா? அல்லது நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடரை வெல்வார்களா? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். 

புள்ளிவிவரங்கள் என்ன சொல்கிறது..? 

இந்தியாவும் இங்கிலாந்தும் இதுவரை 131 முறை டெஸ்ட் போட்டியில் நேருக்குநேர் மோதியுள்ளன. இதில், அதிகபட்சமாக இங்கிலாந்து அணி 50 போட்டிகளில் வெற்றி பெற்றது. அதே நேரத்தில், இந்திய அணி 31 போட்டிகளில் இங்கிலாந்தை வீழ்த்தியுள்ளது. இது தவிர, இரு அணிகளும் இதுவரை 50 டெஸ்ட் போட்டிகள் டிரா செய்துள்ளனர். இதன்மூலம், இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணி முன்னிலை பெற்றிருந்தாலும், கடந்த சில ஆண்டுகளாக நிலைமை மாறியுள்ளதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, இங்கிலாந்து அணி இந்திய மண்ணில் வெற்றிக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட 12 ஆண்டுகளாக இந்திய மண்ணில் இங்கிலாந்து டெஸ்ட் தொடரை வென்றதில்லை.

இந்திய மண்ணில் இங்கிலாந்து அணி எப்படி..? 

கடந்த சில ஆண்டுகளாக இந்திய மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணி திணறி வருகின்றனர். புள்ளிவிவரங்களும் இதையே சொல்லுகிறது. இதுவரை இந்திய மண்ணில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் 64 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் இந்திய அணி 22 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. அதே சமயம் இங்கிலாந்து அணி இந்திய அணியை 14 போட்டிகளில் தோற்கடித்துள்ளது. மேலும் 28 டெஸ்ட் போட்டிகள் டிரா செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம், இந்திய மண்ணில் இங்கிலாந்துக்கு டெஸ்டில் வெற்றி பெறுவது அவ்வளவு எளிதாக இருக்காது என தெரிகிறது. அதிலும் குறிப்பாக, இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு பெரும் சவாலை கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, இங்கிலாந்து அணி தொடர்ந்து 'பேஸ்பால்' பாணியில் விளையாடுகிறதா அல்லது அதன் வியூகத்தை மாற்றுகிறதா என்பது சுவாரஸ்யமாக இருக்கும்.

இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் அட்டவணை:

1வது டெஸ்ட்: 25-29 ஜனவரி, ஹைதராபாத்
2வது டெஸ்ட்: 2-6 பிப்ரவரி, விசாகப்பட்டினம்
3வது டெஸ்ட்: 15-19 பிப்ரவரி, ராஜ்கோட்
4வது டெஸ்ட்: 23-27 பிப்ரவரி, ராஞ்சி
5வது டெஸ்ட்: 7-11 மார்ச், தர்மஷாலா

முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல் (விக்கெட் கீப்பர்), கே.எஸ்.பாரத் (விக்கெட் கீப்பர்), துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகேஷ் குமார், ஜஸ்பிரித் பும்ரா (துணை கேப்டன்), அவேஷ் கான்

இங்கிலாந்து அணி:

பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ரெஹான் அகமது, ஜேம்ஸ் ஆண்டர்சன், கஸ் அட்கின்சன், ஜானி பேர்ஸ்டோ, ஷோயப் பஷீர், ஹாரி புரூக், ஜாக் கிராலி, பென் டக்கெட், பென் ஃபாக்ஸ், டாம் ஹார்ட்லி, ஜாக் லீச், ஆலி போப், ஆலி ராபின்சன், ஜோ ரூட், மார்க் வுட் .

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
TN Rain: மழை வருமா, வராதா? ;  தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
மழை வருமா, வராதா? ; தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
"ஒரு ஆணுக்கு இரண்டு மனைவிகள்.. லிவ் இன் ரிலேஷன்ஷிப் தவறு" நிதின் கட்காரி பரபர கருத்து!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Embed widget