Ind vs Eng Test : ஆர்ச்சர் உள்ளே.. பும்ரா வெளியே? சிக்கலில் இந்தியா அணி.. பரபரப்பான பர்மிங்காம் டெஸ்ட்
ஜூலை 2 ஆம் தேதி பர்மிங்காமில் தொடங்கும் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து வேகப்பந்து அணியில் வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சரைச் சேர்த்தது .

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சளாரான ஜோஃப்ரா ஆர்ச்சர் சேர்க்கப்பட்டுள்ளார்
ஆண்டர்சன் - டெண்டுல்கர் தொடர்:
இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஏற்கனவே 1-0 என பின்தங்கிய நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா புதிய சவாலை எதிர்கொள்ள வேண்டிய சூழலில் உள்ளது.
ஜோஃப்ரா ஆர்ச்சர் சேர்ப்பு:
ஜூலை 2 ஆம் தேதி பர்மிங்காமில் தொடங்கும் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து வேகப்பந்து அணியில் வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சரைச் சேர்த்தது . கடந்த சில ஆண்டுகளாக ஆர்ச்சர் தனது முழங்கை தொடர்பான காயத்தால் அவதிப்பட்டு வந்தார். கடைசியாக நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அகமதாபாத்தில் இந்தியாவுக்கு எதிரான டெஸ்டில் விளையாடினார். அதன் பிறகு சிகிச்சை மேற்க்கொண்டு வந்தார்.
காயம் குணமடைந்த நிலையில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் மட்டும் விளையாடி வந்தார், இந்த நிலையில் தான் அவர் தற்போது இங்கிலாந்து டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
4 ஆண்டு இடைவெளி:
"30 வயதான வலது கை வேகப்பந்து வீச்சாளர் பிப்ரவரி 2021 க்குப் பிறகு முதல் முறையாக இங்கிலாந்து டெஸ்ட் போட்டிக்கு திரும்புகிறார், அடுத்த வாரம் எட்ஜ்பாஸ்டனில் நடைப்பெறும் போட்டியில் அவர் கலந்துக்கொள்வார் " என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஆர்ச்சர் இதுவரை 12 டெஸ்ட் போட்டியில் விளையாடி 31.04 சராசரியில் 42 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார், சிறந்த பந்துவீச்சு 6/45 ஆகும்.
முன்னிலை வகிக்கும் இங்கிலாந்து:
லீட்ஸில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இங்கிலாந்து ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
இந்த வார தொடக்கத்தில் செஸ்டர்-லெ-ஸ்ட்ரீட்டில் டர்ஹாமுக்கு எதிரான நான்கு நாள் போட்டியில் சசெக்ஸ் அணிக்காக ஆர்ச்சர் களமிறங்கியபோது, நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு தனது முதல் ரெட்-பால் போட்டியில் விளையாடினார்.
1,501 நாட்களில் முதல் முறையாக ரெட் பாலில் பந்து வீசிய அவர் கூறியதாவது "ஆமாம். அப்படித்தான் நினைக்கிறேன். நான் ஆட்டத்தை முடிக்க விரும்புகிறேன். நான்கு நாள் கிரிக்கெட்டின் ஒரு நாளை முடித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்." என்று தெரிவித்தார்.
இங்கிலாந்து அணி:
இங்கிலாந்து அணி: பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஓலி போப் (கேப்டன்), ஹாரி புரூக் , ஜோ ரூட் , பென் டக்கெட் , ஜாக் கிராலி , ஜேமி ஸ்மித் (வீடியோ), சாம் குக் , ஜேக்கப் பெத்தேல் , ஜோஃப்ரா ஆர்ச்சர், ஷோயப் பஷீர், பிரைடன் கார்ஸ் , ஜேமி ஓவர்டன் , ஜோஷ் டோங், கிறிஸ் வோக்ஸ் .
பும்ரா இல்லையா?
மறுப்புறம் இந்திய அணியை பார்க்கையில் பணி சுமையை குறைக்கும் வகையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. அவருக்கு பதிலாக அர்ஷ்தீப் சிங் அல்லது ஆகாஷ் தீப் சேர்க்கப்படலாம் என்று தெரிகிறது.





















