(Source: ECI/ABP News/ABP Majha)
IND vs ENG: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி.. அணி தேர்வில் இந்தியாவுக்கு சிக்கலா?
இந்தியா-இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.
இங்கிலாந்து-இந்தியா அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் கடந்த ஞாயிற்றுக்கிழமை முடிந்தது. டி20 தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்றது. இதைத் தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று தொடங்குகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டி இன்று லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது.
இந்நிலையில் இந்தப் போட்டியில் காயம் காரணமாக விராட் கோலி பங்கேற்க மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்திய அணிக்கு ஷிகர் தவான், முகமது ஷமி ஆகியோர் திரும்பியுள்ளனர். ஆகவே இந்திய அணி கூடுதல் பலமாக இருக்கும் என்று கருதப்படுகிறது. பந்துவீச்சில் பும்ரா,ஷமி வருவது கூடுதல் வலு சேர்க்கும் வகையில் இருக்கும். அவர்கள் தவிர சுழற்பந்துவீச்சாளராக சாஹல் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
On to the #ENGvIND ODIs, starting tomorrow! 👍 👍#TeamIndia pic.twitter.com/NWz3UBc2m9
— BCCI (@BCCI) July 11, 2022
இவர்களுடன் ரவீந்திர ஜடேஜா மற்றும் ஹர்திக் பாண்ட்யா ஆல் ரவுண்டராக களமிறங்க உள்ளனர். எனவே பேட்டிங் மற்றும் பவுலிங் ஆகிய இரண்டிலும் இந்திய அணி நன்றாக செயல்படும் என்று கருதப்படுகிறது.
இந்தியா-இங்கிலாந்து ஒருநாள் ரெக்கார்டு:
இந்தியா-இங்கிலாந்து அணிகள் இதுவரை 103 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளது. அவற்றில் 43 போட்டிகளில் இங்கிலாந்து அணியும், 55 போட்டிகளில் இந்திய அணியும் வெற்றி பெற்றுள்ளன. 2 போட்டிகளில் டையில் முடிவடைந்துள்ளன.
ஓவல் மைதானத்தில் இந்தியா:
லண்டன் ஓவல் மைதானத்தில் இந்திய அணி 8 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளது. அவற்றில் 5 போட்டிகளில் இங்கிலாந்து அணியும், 2 போட்டிகளில் இந்திய அணியும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளது.
இங்கிலாந்து மண்ணில் இந்தியாவின் ஒருநாள் ரெக்கார்டு:
இங்கிலாந்து நாட்டில் இந்திய அணி தற்போது வரை 42 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளது. அவற்றில் இங்கிலாந்து அணி 22 போட்டிகளிலும், இந்தியா 16 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டி டையில் முடிவடைந்துள்ளது.
2023-ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக இந்திய அணிக்கு சரியான வீரர்களை தேர்வு செய்ய ஒவ்வொரு ஒருநாள் தொடரும் மிகவும் முக்கியமானதாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்