Virat Kohli: ”விராட் கோலி தொடர்ந்து சொதப்பக் காரணம் ஈகோ தான்.” - பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் விமர்சனம்..
விராட் கோலி அழுத்தத்தில் இருப்பதால் தான் அவரால் சரியாக விளையாட முடியவில்லை என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் மிஸ்பா உல் ஹக் தெரிவித்துள்ளார்.
விராட் கோலி அழுத்தத்தில் இருப்பதால் தான் அவரால் சரியாக விளையாட முடியவில்லை என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் மிஸ்பா உல் ஹக் தெரிவித்துள்ளார்.
பார்ஃம் அவுட்டில் கோலி:
ஒருநால், டி20, டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளின் கேப்டனாக இருந்த விராட் கோலி அப்பொறுப்பில் இருந்து விலகிய நிலையில் அனைத்துத் தரப்பு போட்டிகளுக்கும் ரோகித் ஷர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆனால், பல்வேறு காரணங்களால் எந்த தொடரிலும் பங்கேற்க முடியாமல் போன நிலையில், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா உள்ளிட்டோர் அணியை வழிநடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஜஸ்ப்ரிட் பும்ரா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அவரது தலைமையிலான அணியில் விராட்கோலியும் இடம்பெற்றுள்ளார். விராட் கோலி கடந்த 2019ம் ஆண்டுக்குப் பிறகு சதங்களே அடிக்காத நிலையில் பெரும்பாலான போட்டிகளில் சொற்ப ரன்களில் அவுட்டாகி வருவது அவர் மீது அவர்மீதான விமர்சனத்திற்கு வழிவகுத்துள்ளது.
ஃபார்ம் அவுட்டுக்குக் காரணம்:
இரண்டரை ஆண்டு காலமாக விராட் கோலி ஃபார்ம் அவுட் ஆனதற்கு காரணம் என்னவென்பது தொடர்பாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் மிஸ்பா உல் ஹக் யூடியூப் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். அதில் பேசியுள்ள அவர் “எப்போது தலைக்குள் ஏகப்பட்ட இரைச்சல் இருக்கிறதோ, அதன்பின்னர் உடலும் மூளையும் கிரிக்கெட் விளையாடுவதற்கு ஒத்துழைக்காது. நீங்கள் எவ்வளவு சிறந்தவராக இருந்தாலும் சரி அந்த முறை பாதிக்கப்பட்டுவிடும். இது இயற்கையானது தான். சிறந்தவர்களாக இருந்தாலும் கூட மக்கள் இதை சிக்கலாக்கிவிடுவார்கள். பொதுவாக, விராட் கோலி ஆஃப் ஸ்டெம்ப்பில் இருந்து விளையாடுவார். நான்காவது அல்லது ஐந்தாவது ஸ்டம்புகளில் பந்தை அடிப்பது பற்றி நாங்கள் பேசுகிறோம். இதில் நாம் தொழில்நுட்பக் கோளாறைப் பார்க்கிறோம். ஆனால் ஏன் அவர் அப்படி செய்கிறார்? ஏனெனில் அதன் பின்னால் மன அழுத்தம் இருக்கிறது” என்று கூறியுள்ளார்.
மிஸ்பா உல் ஹக் அட்வைஸ்:
விராட்கோலி ஆதிக்கம் செலுத்த முயற்சி செய்கிறார். விராட் கோலிக்கு “நான் ஆதிக்க செலுத்த வேண்டும்” என்ற ஈகோ இருக்கிறது. ஆனால் என்ன நடக்கிறது என்றால் நீங்கள் அதீத முயற்சி செய்கிறீர்கள். நீங்கள் உங்கள் எல்லையை விட்டு வெளியே போய்விடுகிறீர்கள். இதிலிருந்து விடுபட ஒரே ஒரு வழி இருக்கிறது. இந்த அழுத்தமான சூழ்நிலையில் இருந்து வெளியேறுவது. எனது அனுபவத்தில் இருந்து இதை சொல்ல முடியும். இது போன்ற சூழ்நிலி எனக்கும் ஒன்றிரண்டு முறை வந்திருக்கிறது. நான் உள்ளூர் கிரிக்கெட் விளையாடச் சென்றுவிட்டேன். நீங்கள் எவ்வளவு தரமான பந்துவீச்சாளர்களை சந்திக்கிறீர்கள் என்பது ஒரு விஷயமில்லை. நீங்கள் ரன்கள் அடிக்கத் தொடங்கும் போது உங்களுக்கு பழைய நிலை திரும்பி விடும்” என்று மிஸ்பா உல் ஹக் கூறியுள்ளார்.
விராட் கோலி சதமடித்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் தற்போது விளையாடி வரும் டெஸ்ட் போட்டி தான் இந்த ஆண்டின் கடைசி டெஸ்ட் போட்டியாக இருக்கிறது. இந்த ஆண்டும் விராட் கோலி சதம் அடிக்கவில்லை என்றால், விராட் கோலி சதம் அடிக்காத மூன்றாவது ஆண்டாக இது இருக்கும்.