BazBall: முதலில் BazBall அப்படின்னா என்ன? செய்தியாளர் கேள்விக்கு பதில் கேள்வி கேட்ட ராகுல் டிராவிட்
இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக முன்னாள் நியூசிலாந்து வீரர் பிரண்டன் மெக்கலம் செயல்பட்டு வருகிறார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அத்துடன் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் 2-2 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இந்திய அணியின் தோல்விக்கு பிறகு அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் சில முக்கியமான கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு அவர் தன்னுடைய பதில்களை அளித்தார்.
அதில் பேஸ்பால்(BazBall) தொடர்பான கேள்வியும் கேட்கப்பட்டது. அதற்கு டிராவிட், “எனக்கு அப்படியென்றால் முதலில் என்னவென்றே தெரியாது. கடந்த சில மாதங்களாக இங்கிலாந்து அணி சிறப்பான கிரிக்கெட் விளையாடி வருகிறது. குறிப்பாக இலக்குகளை சேஸ் செய்வதில் இங்கிலாந்து அணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 4வது இன்னிங்ஸில் இலக்கை சேஸ் செய்வது அவ்வளவு எளிதான காரீயம் அல்ல. அவர்களுடைய வீரர்கள் சிறப்பான ஃபார்மில் இருக்கும் போது அவர்கள் பாசிட்டிவ் கேமை வெளிப்படுத்துவார்கள். அதை தாம் நாமும் முதல் இன்னிங்ஸில் செய்தோம்” எனத் தெரிவித்திருந்தார்.
Three of our top ten chases achieved in our last three Test matches 😅
— England Cricket (@englandcricket) July 5, 2022
Scorecard/Clips: https://t.co/jKoipFmvoB
🏴 #ENGvIND 🇮🇳 pic.twitter.com/LJDQjJmAk2
BazBall என்றால் என்ன?
இங்கிலாந்து டெஸ்ட் அணி ஆஷஸ் தொடரில் தோல்வி அடைந்த பிறகு அந்த அணியின் புதிய பயிற்சியாளராக மெக்கலம் நியமிக்கப்பட்டார். அவர் வந்த பிறகு இங்கிலாந்து அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை ஒயிட்வாஷ் செய்தது. அந்தத் தொடரில் இங்கிலாந்து அணி 4வது இன்னிங்ஸில் இலக்குகளை சேஸ் செய்து அசத்தியது. அதன்பின்னர் தற்போது இந்திய அணிக்கு எதிரான போட்டியிலும் 378 ரன்களை எளிதாக சேஸ் செய்து அசத்தல் வெற்றி பெற்றது. இதன்காரணமாக மெக்கலம் இங்கிலாந்து டெஸ்ட் அணியில் ஒரு புரட்சியை கொண்டு வந்துள்ளதாக பலரும் குறிப்பிட்டு வருகின்றனர். அந்தப் புரட்சிக்கு BazBall என்று பெயர் வைத்துள்ளனர். Baz என்பது பிரண்டன் மெக்கலம் கிரிக்கெட் களத்தில் அழைக்கப்படும் செல்ல பெயர்களில் ஒன்று.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்