மேலும் அறிய
Advertisement
IND VS ENG 4th Test Day 1 Highlights: விறுவிறுப்பாக தொடங்கிய 4வது டெஸ்ட் போட்டி; முதல் நாளில் நடந்தது என்னென்ன?
IND VS ENG 4th Test Day 1 Highlights: இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 302 ரன்கள் சேர்த்துள்ளது.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது. இதில் முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்தும் இரண்டாவது மற்றும் மூன்றாவது டெஸ்ட்டில் இந்தியாவும் வெற்றி பெற்றது. இதனால் 5 போட்டிகள் கொண்ட சுற்றில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றது. இந்நிலையில் இன்று அதாவது பிப்ரவரி 23ஆம் தேதி இரு அணிகளுக்கும் இடையிலான 4வது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் உள்ள ஜே.எஸ்.சி.ஏ மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியின் முதல் நாள் ஆட்டத்தின் ஹைலைட்ஸ் குறித்து இங்கு காணலாம்.
- இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
- இந்திய அணி சார்பில் வலது கை மிதவேகப் பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் சர்வதேச போட்டியில் அறிமுகமானார்.
- ஆகாஷ் தீப் இந்தியா சார்பாக சர்வதேச டெஸ்ட் போட்டியில் களமிறக்கப்பட்ட 313வது வீரர் ஆவார்.
- இந்திய அணி சார்பில் மிகவும் முக்கியமான மாற்றமாக அணியில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.
- ஆகாஷ் தீப் இதுவரை 17 ஓவர்கள் பந்து வீசி 70 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார்.
- ஆகாஷ் தீப் கைப்பற்றிய மூன்று விக்கெட்டுகளும் இங்கிலாந்து அணியின் டாப் மூன்று பேட்ஸ்மேன்களான ஜாக் கார்வ்லே, பென் டக்கெட் மற்றும் ஒல்லிப் போப் ஆவர்.
- இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 90 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 302 ரன்கள் குவித்துள்ளது.
- இங்கிலாந்து அணியின் ஆஸ்தான பேட்ஸ்மேனான ஜோ ரூட் 226 பந்துகளில் 106 ரன்கள் குவித்து களத்தில் உள்ளார். இவருடன் ஒல்லி ராபின்சன் 31 ரன்களில் களத்தில் உள்ளார்.
- இந்த சதம் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் ஜோ ரூட்டின் 31வது சதமாக பதிவாகியுள்ளது.
- இந்திய அணி சார்பில் மொத்தம் 14 ஓவர்கள் மெய்டனாக வீசப்பட்டுள்ளது. இதில் ஜடேஜா 27 ஓவர்கள் பந்து வீசி அதில் 7 ஓவர்கள் மெய்டனாக வீசியுள்ளார்.
- இந்திய அணி தன்னிடம் இருந்த மூன்று ரிவ்யூக்களையும் வீணடித்துவிட்டது.
சமீபத்திய விளையாட்டு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் விளையாட்டு செய்திகளைத் (Tamil Sports News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
அரசியல்
இந்தியா
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion