மேலும் அறிய

IND vs ENG 2nd Test: இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்; இளம் வீரர்களுக்கு விக்ரம் ரத்தோர் வைத்த முக்கிய கோரிக்கை!

டெஸ்ட் போட்டிகளில் குறைந்த அனுபவத்தை மட்டுமே கொண்ட இந்திய அணியின் இளம் வீரர்களுக்கு பொறுமையின் முக்கியத்துவத்தை விக்ரம் ரத்தோர் எடுத்துரைத்துள்ளார்.

IND vs ENG 2nd Test: 

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வந்துள்ள இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. கடந்த 25 ஆம் தேதி ஹைதராபாத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது. இதன்மூலம் 1-0 என்ற புள்ளி கணக்கில் இங்கிலாந்து அணி தொடரில் முன்னிலையில் உள்ளதுமுன்னதாக, முதல் டெஸ்ட் போட்டியில் சுப்மன் கில் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் இங்கிலாந்து அணியினரின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறினார்கள். அதன்படி முதல் இன்னிங்ஸில் சுப்மன் கில் 66 பந்துகள் களத்தில் நின்று 23 ரன்கள் மட்டுமே எடுத்தார். அதேபோல், இரண்டாவது இன்னிங்ஸில் டக் அவுட் ஆகி வெளியேறினார். அதேபோல், மற்றொரு வீரரான ஷ்ரேயாஸ் ஐயர் முதல் இன்னிங்ஸில் 63 பந்துகள் களத்தில் நின்றார். ஆனல், அவர் எடுத்த ரன்கள் 35 மட்டுமே. இரண்டாவது இன்னிங்ஸில் 31 பந்துகள் களத்தில் நின்று 13 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

பொறுமையை கடைபிடியுங்கள்:

அதேநேரம் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் முதல் இன்னிங்ஸில் அதிரடியாக விளையாடினார். 74 பந்துகள் களத்தில் நின்ற அவர் 80 ரன்களை குவித்தார். ஆனால், இரண்டாவது இன்னிங்ஸில் அவரால் சிறப்பாக விளையாட முடியவில்லைஇதனிடையே ஆந்திர மாநிலம் விசாகப்பட்டிணத்தில் பிப்ரவரி 2 ஆம் தேதி இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்க உள்ள சூழலில், டெஸ்ட் போட்டிகளில் குறைந்த அனுபவத்தை மட்டுமே கொண்ட இந்திய அணியின் இளம் வீரர்களுக்கு பொறுமையின் முக்கியத்துவத்தை விக்ரம் ரத்தோர் எடுத்துரைத்துள்ளார்.

இந்நிலையில் இன்று (ஜனவரி 31) செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “எங்கள் அணியில் அதிக டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாத இளம் பேட்டர்கள் இருக்கின்றனர்.  எனவே அவர்கள் சற்று பொறுமையை கடைபிடிக்க வேண்டும். சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் போன்ற பேட்டர்கள் இனி வரும் போட்டிகளில் பெரிய ரன்களை எடுப்பார்கள். இதை நான் உறுதியாக நம்புகிறேன். அவர்கள் கடந்த போட்டியிலேயே சிறப்பாக பேட்டிங் செய்திருக்க முடியும். அதற்கான திட்டங்களை அவர்கள் கொண்டு வர வேண்டும். பேட்டிங் என்பது எப்போதும் ரன்களை எடுப்பதில் இருக்க வேண்டும். இது அவுட் ஆகாமல் இருப்பது பற்றியது அல்ல. நாம் எத்தனை ரன்களை அணிக்காக பெற்றுக்கொடுத்திருக்கிறோம் என்பது பற்றியதுஎன்று இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளரான விக்ரம் ரத்தோர் கூறினார்.

மேலும் படிக்க: Viral Video: கையில் பீர்.. உற்சாக நடனம்.. இங்கிலாந்து வீரர் டாம் ஹார்ட்லியின் வைரல் வீடியோ!

மேலும் படிக்க: Ind vs Eng 2 Test: இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்.. முறியடிக்கப்படும் சாதனை! முழு விவரம் உள்ளே!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

PAK vs IRE T20 World Cup 2024: டி20 உலகக் கோப்பை.. அயர்லாந்துக்கு எதிராக கடைசி போட்டி.. போராடி ஜெயித்த பாகிஸ்தான்!
PAK vs IRE T20 World Cup 2024: டி20 உலகக் கோப்பை.. அயர்லாந்துக்கு எதிராக கடைசி போட்டி.. போராடி ஜெயித்த பாகிஸ்தான்!
ஜம்மு காஷ்மீர் பாதுகாப்பு நிலவரம்.. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா எடுத்த முக்கிய முடிவு!
ஜம்மு காஷ்மீர் பாதுகாப்பு நிலவரம்.. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா எடுத்த முக்கிய முடிவு!
Phoenix Veezhan Teaser: விஜய் சேதுபதி மகன் சூர்யாவின் பீனிக்ஸ் விழான்! டீசர் எப்படி இருக்குது? குட்டி விமர்சனம்!
Phoenix Veezhan Teaser: விஜய் சேதுபதி மகன் சூர்யாவின் பீனிக்ஸ் விழான்! டீசர் எப்படி இருக்குது? குட்டி விமர்சனம்!
நெல்லை ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. போதை ஆசாமி கைது!
நெல்லை ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. போதை ஆசாமி கைது!
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

G.O.A.T Release Issue | G.O.A.T ரிலீஸில் சிக்கல்! அப்செட்டில் விஜய் FANSKN Nehru Lalkudi MLA | ADMK Vikravandi Bypoll | அதிமுக புறக்கணிப்பு ஏன்? யாருக்கு லாபம்? விக்கிரவாண்டி இடைத்தேர்தல்ADMK Boycotts Vikravandi By election | விக்கிரவாண்டி இடைத்தேர்தல்அதிமுக புறக்கணிப்பு!EPS அதிரடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PAK vs IRE T20 World Cup 2024: டி20 உலகக் கோப்பை.. அயர்லாந்துக்கு எதிராக கடைசி போட்டி.. போராடி ஜெயித்த பாகிஸ்தான்!
PAK vs IRE T20 World Cup 2024: டி20 உலகக் கோப்பை.. அயர்லாந்துக்கு எதிராக கடைசி போட்டி.. போராடி ஜெயித்த பாகிஸ்தான்!
ஜம்மு காஷ்மீர் பாதுகாப்பு நிலவரம்.. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா எடுத்த முக்கிய முடிவு!
ஜம்மு காஷ்மீர் பாதுகாப்பு நிலவரம்.. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா எடுத்த முக்கிய முடிவு!
Phoenix Veezhan Teaser: விஜய் சேதுபதி மகன் சூர்யாவின் பீனிக்ஸ் விழான்! டீசர் எப்படி இருக்குது? குட்டி விமர்சனம்!
Phoenix Veezhan Teaser: விஜய் சேதுபதி மகன் சூர்யாவின் பீனிக்ஸ் விழான்! டீசர் எப்படி இருக்குது? குட்டி விமர்சனம்!
நெல்லை ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. போதை ஆசாமி கைது!
நெல்லை ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. போதை ஆசாமி கைது!
பற்றி எரியும் EVM விவகாரம்.. OTP வைத்து ஹேக் செய்ய முடியாது: தேர்தல் ஆணையம் விளக்கம்!
பற்றி எரியும் EVM விவகாரம்.. OTP வைத்து ஹேக் செய்ய முடியாது: தேர்தல் ஆணையம் விளக்கம்!
நெல்லை அருகே ஊருக்குள் புகுந்த  கரடி..! மரத்தின் மீது தஞ்சமடைந்ததால் பொதுமக்கள் பீதி..!
நெல்லை அருகே ஊருக்குள் புகுந்த கரடி..! மரத்தின் மீது தஞ்சமடைந்ததால் பொதுமக்கள் பீதி..!
சமையல் ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற சென்னைஸ் அமிர்தா மாணவர்கள்!
சமையல் ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற சென்னைஸ் அமிர்தா மாணவர்கள்!
T20 World Cup 2024: டி20 உலகக் கோப்பை: குறுக்கே வந்த மழை.. பாகிஸ்தான் - இலங்கைக்கு எமனாய் மாறிய போட்டிகள்!
T20 World Cup 2024: டி20 உலகக் கோப்பை: குறுக்கே வந்த மழை.. பாகிஸ்தான் - இலங்கைக்கு எமனாய் மாறிய போட்டிகள்!
Embed widget