IND Vs ENG 2nd ODI: இங்கிலாந்து பவுலர்களுக்கு டஃப் கொடுத்த பேட்ஸ்மென் - ODI கிரிக்கெட் தொடரை வென்ற இந்தியா!
IND Vs ENG 2nd ODI: இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், இந்திய அணி வெற்றி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.
இங்கிலாந்து - இந்தியா ஒருநாள் கிரிக்கெட் தொடர்:
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 ஒரு நாள் போட்டி தொடரில் பங்கேற்கிறது. இந்திய அணி டி-20 தொடரை 4-1 என கைப்பற்றியது. இரு அணிகளுக்கும் இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.
இந்தியா - இங்கிலாந்து 2-வது ஒருநாள் போட்டி:
ஒடிசா மாநிலத்தில் உள்ள பராபடி மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இங்கிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங்க் தேர்வு செய்தது. இங்கிலாந்து அணி 49.5 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 3034 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரரன பென் டெக்கட் 56 பந்துகளில் 10 பவுண்ட்ரிகளும் 65 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.
சால்ட் 26 ரன்கள், ஜோ ரூட் 72 பந்துகளில் 6 பவுண்ட்ரிகளுடன் 69 ரன்களை எடுத்தார். கேப்டன் ஜாஸ் பட்லர் 34 ரன்கள் எடுத்தார். அதிரடி ஆட்டக்காரரான லேம் லிவிங்ஸ்டோன் 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி என 27 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார். ஆட்டத்தின் இறுதிகட்ட ஒவர்களில் அடில் ரஷித் மூன்று பவுண்டரிகளுடன் 5 பந்துகளில் 14 ரன்கள் எடுத்தார்.
இங்கிலாந்து பேட்ஸ்மென் ஒருபுறம் நிதானமாக விளையாடி வந்தாலும் இந்திய பவுலர்கள் விக்கெட் எடுக்க தவறவில்லை. முகமது ஷமி, ஹர்ஷித் ராணா, ஹர்திக் பாண்டியா, வருண் சக்கரவர்த்தி, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். ஸ்ப்பினர் ரவீந்திர ஜடேஜா 35 ரன் கொடுத்து மூன்று விக்கெட்களை எடுத்தார். இந்தியாவுக்கு 305 ரன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி அதிரடி வெற்றி:
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் ஷர்மா, கில் இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி முதல் விக்கெட்டுக்கு 136 ரன் சேர்ததனர். இந்திய அணி 48- ரன் எடுத்திருந்தபோது, 6.1 ஓவர்களில் ஆட்டம் திடீரனெ மைதானத்தில் ஒருபுறத்தில் இருந்த மின் விளக்குகளில் ஏற்பட்ட பழுது காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது. சிறிது நேரத்திற்கு பிறகு ஆட்டம் தொடங்கியது.
ரோஹித் ஷர்மா 12 பவுண்ட்ரிஸ் 7 சிக்ஸர் உடன் 90 பந்துகளில் 119 ரன்களுக்கு 29.4 ஓவரில், லிவின்ஸ்டோன் பந்தில் ரஷித்திடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் ரோஹித் ஷர்மாவின் 32-வது சதம் இது. அதிரடியாக விளையாடிய கில் 9 பவுண்டிர்கள், 1 சிக்ஸ் உடன் 52 பந்துகளில் 60 ரன் எடுத்து அரைசதம் அடித்தார். அதற்கு அடுத்து களமிறங்கிய விராட் கோலி 5 ரன்னுக்கு ஆட்டமிழந்தார்.ரோஹித் ஷர்மாவுடன் களமிறங்கிய ஸ்ரேயாஸ் 3 பவுண்ட்ரி, 1 சிக்ஸ் உடன் 47 பந்துகளில் 44 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.
கே.எல் ராகுல் 10 ரன்னும் ஹர்திக் பாண்டியா 11 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அக்சார் படேல் 4 பவுண்டிகளுடன் 43 பந்துகளில் 41 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.ஜடேஜா 2 பவுண்ட்ரிஸ் 7 ரன்னில் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்திய அணி 44.3 ஓவருக்கு 6 விக்கெட்கள் இழப்புக்கு 308 ரன் எடுத்து வெற்றி பெற்றது. 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தத் தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஷுப்மன் கில் அதிரடியாக பேட் செய்தது மட்டுமல்லாமல், ஃபீல்டிங்கிலும் அசத்தி மூன்று கேட்ச்களைப் பிடித்தார். அதில்ம் இங்கிலாந்து பேட்ஸ்மென் ஹாரி ப்ரூக், ஜாஸ் பட்லர் இருவரின் விக்கெட்டுகளையும் எடுத்து அசத்தினார். ஆட்டநாயகனாக ரோஹித் ஷர்மா தேர்வு செய்யப்பட்டார்.
இங்கிலாந்து - இந்தியா இடையேயான மூன்றாவது மற்றும் கடைசிப் போட்டி வருகிற 12 ஆம் தேதி நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது.
மேலும் வாசிக்க..
Rohit Sharma: அடி.. அடி.. மரண அடி! ரோகித் சர்மா மிரட்டல் சதம்! வாயடைத்துப் போன ஹேட்டர்ஸ்!
Rohit Sharma: ஹிட்மேன் இஸ் பேக்! இடியாய் இடிக்கும் ரோகித் சர்மா - இடிந்து போன இங்கிலாந்து

