IND vs ENG: நாளை தொடங்கும் 4வது டெஸ்ட்! இந்தியாவிற்கு எதிராக களமிறங்கப் போகும் இங்கிலாந்து டீம் இவங்கதான்!
இந்திய அணிக்கு எதிராக நாளை தொடங்கும் ராஞ்சி டெஸ்ட் போட்டியில் களமிறங்கும் இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடரில் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது மற்றும் 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.
இந்த நிலையில், இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் நான்காவது டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது. இந்த போட்டிக்கான இங்கிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டது.
இங்கிலாந்து அணி விவரம்:
ஜாக் கிராவ்லி, பென் டக்கெட், ஒல்லி போப், ஜோ ரூட், ஜானி பார்ஸ்டோ, கேப்டன் பென் ஸ்டோக்ஸ், பென் போக்ஸ் ( விக்கெட் கீப்பர்), டாம் ஹார்ட்லி, ஒல்லி ராபின்சன், ஜேம்ஸ் ஆண்டர்சன், சோயிப் பஷீர்.
இங்கிலாந்து அணி கடந்த 2 டெஸ்ட் போட்டிகளில் தோற்றதால் அவர்கள் இந்த போட்டியில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய நெருக்கடியில் உள்ளனர். இந்த போட்டியில் தோற்றால் அவர்கள் தொடரை இழந்து விடுவார்கள். ராஞ்சி மைதானமானது சுழலுக்கு ஒத்துழைக்கும் என்பதால் இரு அணிகளும் சுழலை எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
சுழல் பலம்:
இங்கிலாந்து அணியின் சுழல் பலமாக டாம் ஹார்ட்லி, சோயிப் பஷீர் மற்றும் ஜோ ரூட் ஆகியோர் உள்ளனர். முக்கிய சுழற்பந்துவீச்சாளராக டாம் ஹார்ட்லி மற்றும் சோயிப் பஷீர் உள்ளனர். பஷீர் ஏற்கனவே விசாகப்பட்டினம் டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா மற்றும் சுப்மன்கில் விக்கெட்டை கைப்பற்றியிருந்தார். இங்கிலாந்து அணியுடன் ஒப்பிடும்போது இந்தியா சுழற்பந்துவீச்சில் பலமாக உள்ளது. அஸ்வின், ஜடேஜா, குல்தீப் யாதவ் என பலமாக உள்ளனர்.
இங்கிலாந்து அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவரை யாரிடமும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தாது பெரும் பின்னடைவாக உள்ளது. ஜாக் கிராவ்லி, பென் டக்கெட், ஒல்லி போப் சிறப்பாக ஆட வேண்டியது அவசியம்.
ஜானி பார்ஸ்டோ பேட்டிங் பரிதாபம்:
ஜானி பார்ஸ்டோ இந்த டெஸ்ட் போட்டியில் கண்டிப்பாக சிறப்பாக ஆட வேண்டியது அவசியம் ஆகும். அவர் இதுவரை ஆடிய 3 டெஸ்ட் போட்டிகளிலும் சொதப்பியது அந்த அணிக்கு பின்னடைவாக உள்ளது. அதேபோல, இங்கிலாந்து அணியின் பலமான ஜோ ரூட் இதுவரை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.
இந்திய அணியில் நாளைய டெஸ்ட் போட்டியில் பும்ரா ஆடமாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனால், அவருக்கு பதிலாக களமிறங்கப் போவது யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்திய அணியில் கே.எல்.ராகுல் மீண்டும் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜெய்ஸ்வால், சர்பராஸ் கான் தொடர்ந்து சிறப்பாக ஆடுவார்கள் என்று நம்பலாம். கேப்டன் ரோகித் சர்மாவின் அனுபவம் இந்த டெஸ்ட் போட்டியிலும் தொடரும் என்று கருதப்படுகிறது.
மேலும் படிக்க: Most Ducks in IPL: ஐ.பி.எல் தொடரில் தினேஷ் கார்த்திக் படைத்த மோசமான சாதனை! அதிர்ச்சியில் ரசிகர்கள்
மேலும் படிக்க:Mohammed Shami: ஐபிஎல்-லில் இருந்து விலகும் முகமது ஷமி; குஜராத் அணிக்கு புதிய சிக்கல்; காரணம் என்னனு தெரியுமா?