IND Vs Bang Test: 92 ஆண்டு கால ஏக்கம் - தீர்த்து வைத்த ரோகித் படை - சென்னை டெஸ்டில் வங்கதேசத்தை வீழ்த்தி சாதனை
IND Vs Bang Test: வங்கதேசத்தை வீழ்த்தியதன் மூலம் 92 ஆண்டுகால இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், இதுவரை இல்லாத புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.
IND Vs Bang Test: 92 ஆண்டுகால இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், முதல்முறையாக தோல்விகளை காட்டிலும் அதிக வெற்றிகளை இந்திய அணி பதிவு செய்துள்ளது.
வங்கதேச அணியை வீழ்த்திய இந்தியா:
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் போட்டி கடந்த 19ம் தேதி சென்னை சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 376 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. அதிகபட்சமாக அஷ்வின் 100 ரன்களை குவித்தார். இதையடுத்து களமிறங்கிய வங்கதேச அணி, இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 149 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. அதிகபட்சமாக பும்ரா 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.
தொடர்ந்து, இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா 287 ரன்களை சேர்த்து டிக்ளேர் செய்தது. கில் மற்றும் பண்ட் சதமடித்து அசத்தினர். 515 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய வங்கதேசம், வெறும் 234 ரன்களுக்கு சுருண்டது. அஷ்வின் 6 விக்கெட்டுகளை சாய்த்து வெற்றிக்கு வித்திட்டார். இதனால் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.
92 ஆண்டுகால ஏக்கத்தை தீர்த்த இந்திய அணி:
சென்னை டெஸ்ட் வெற்றியின் மூலம் இந்திய அணி புதிய சரித்திரம் படைத்துள்ளது. அதன்படி, 1932 ஆம் ஆண்டு முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுகமான இந்தியா, சென்னை டெஸ்ட் போட்க்கு முன்பு வரை 579 போட்டிகளில் விளையாடி இருந்தது. அதில், தலா 178 ஆட்டங்களில் வெற்றி மற்றும் 178 ஆட்டங்களில் தோல்வியை சந்தித்துள்ளது. அதேநேரம், 222 ஆட்டங்கள் டிராவில் முடிந்துள்ளன. இந்த சூழலில் சென்னை போட்டியில் வங்கதேச அணியை இந்தியா வீழ்த்தியதால், ரோகித் சர்மா தலைமையிலான அணி டெஸ்ட் வரலாற்றில் இந்தியாவிற்கான 179வது வெற்றியை பதிவு செய்தது. அதாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானதிலிருந்து முதல்முறையாக, இந்திய அணி தோல்விகளின் எண்ணிக்கையை காட்டிலும், அதிக வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்த வரலாற்று சாதனை படைத்த இந்திய அணிக்கு, சமூக வலைதளங்களில் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
ராசியான சென்னை மைதானம்:
1932 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக சி.கே.நாயுடு தலைமையிலான இந்திய அணி, லார்ட்ஸில் தனது முதல் டெஸ்ட் போட்டியை விளையாடியது. இங்கிலாந்திற்கு எதிரான அந்த போட்டியில்158 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியடைந்தது. இந்தியாவின் முதல் டெஸ்ட் வெற்றியானது, 1952 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக இதே சென்னை மைதானத்தில் தான் கிட்டியது. இந்நிலையில், வரலாற்று சிறப்புமிக்க 179வது வெற்றியும் சென்னையிலேயே கிடைத்துள்ளது.
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக, தோல்வியை விட அதிக வெற்றிகளை பெற்றுள்ளது. சென்னையில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் 4-வது நாளில் வங்கதேசத்தை வீழ்த்தி இந்தியா 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வரலாற்று சிறப்பு மிக்கது. இந்த வெற்றியின் மூலம் 580 போட்டிகளுக்குப் பிறகு 179 வெற்றிகள் மற்றும் 178 தோல்விகள் என இந்தியாவின் சாதனையை கொண்டு வந்துள்ளது.
இந்த மல்டி ஃபார்மட் தொடரின் முதல் டெஸ்டில், இந்தியா சிவப்பு-பந்து வடிவத்தில் சம எண்ணிக்கையிலான வெற்றிகளையும் தோல்விகளையும் பெற்றுள்ளது.
1932 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக சி.கே.நாயுடு தலைமையிலான லார்ட்ஸில் இந்தியா தனது முதல் டெஸ்ட் போட்டியை விளையாடியது, இருப்பினும் அது 158 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்தியாவின் முதல் டெஸ்ட் வெற்றியை 1952 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக சென்னையில் அதே மைதானத்தில் பெற்றது, இப்போது அது தனது 179வது வெற்றியைக் கொண்டாடியது.
தோல்விகளை விட அதிக டெஸ்ட் வெற்றிகளை பெற்ற அணிகள்:
- ஆஸ்திரேலியா: 414 வெற்றி; தோல்வி 232
- இங்கிலாந்து: வெற்றி 397; தோல்வி 325
- தென் ஆப்பிரிக்கா: வெற்றி 179; தோல்வி 161
- இந்தியா: வெற்றி 179; தோல்வி 178
- பாகிஸ்தான்: 148 வெற்றி; தோல்வி 144