மேலும் அறிய

தேர்தல் முடிவுகள் 2024

(Source:  ECI | ABP NEWS)

IND Vs Ban 2nd T20I: தொடரை கைப்பற்றுமா இந்தியா? வங்கதேசம் உடன் 2வது டி20 போட்டியில் இன்று மோதல்..!

IND Vs Ban 2nd T20I: இந்தியா வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 கிர்க்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது.

IND Vs Ban 2nd T20I: இந்தியா வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 கிர்க்கெட் போட்டி, டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.

இந்தியாவில் வங்கதேசம் சுற்றுப்பயணம்:

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி, முதலில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. அதில் அபாரமான திறமையை வெளிப்படுத்திய இந்திய அணி, 2-0 என தொடரை கைப்பற்றியது. இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. குவாலியரில் நடைபெற்ற முதல் போட்டியில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி வென்று, 1-0 என முன்னிலை வகிக்கிறது.

இந்தியா Vs வங்கதேசம் - 2வது டி20 போட்டி:

இந்நிலையில், இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி, உள்ளூர் நேரப்படி இன்று இரவு 7 மணிக்கு டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் தொடங்குகிறது. போட்டியின் நேரலையை தொலைக்காட்சியில் Sports18 Network அலைவரிசையிலும், ஒடிடி செயலியில் ஜியோ சினிமா செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம். தொடரை கைப்பற்ற இந்திய அணியும், தொடரை வெல்லும் வாய்ப்பை நீட்டிக்க வங்கதேசம் அணியும் முனைப்பு காட்டுகிறது. எனவே, இன்றைய போட்டியில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடரை கைப்பற்றுமா இந்தியா?

சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியில் அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்ட்யா மற்றும் ரிங்கு சிங் என இளம் நட்சத்திர வீரர்கள் நிரம்பியுள்ளனர். இதனால் பேட்டிங் லைன் - அப் மிகவும் வலுவாக உள்ளது. அதோடு பந்துவீச்சிலும், ஹர்ஷித் ராணா மற்றும் மயங்க் யாதவ் ஆகியோர் நம்பிக்கை அளிக்கின்றனர். மேலும், உள்ளூர் மைதானத்தில் போட்டி நடைபெறுவது, இந்திய அணிக்கு கூடுதல் பலமாக திகழ்கிறது. முதல் போட்டியில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டதை போலவே, இன்றைய போட்டியிலும் திறமையை வெளிப்படுத்தினால் இந்திய அணியின் வெற்றி உறுதியாகிவிடும்.

நேருக்கு நேர்:

சர்வதேச டி20 போட்டிகளில் இரு அணிகளும் இதுவரை 15 முறை மோதியுள்ளன. இதில் இந்திய அணி 14 முறையும், வங்கதேச அணி ஒரே ஒரு முறை மட்டுமும் வெற்றி பெற்றுள்ளது.

பிட்ச் ரிப்போர்ட்:

அருண் ஜெட்லி மைதானம் என்பது பேட்மேன்களால் மிகவும் விரும்பப்படும் பிட்ச்களில் ஒன்றை கொண்டுள்ளது. இந்த ஆடுகளத்தில் அதிக ஸ்கோரை சந்திப்பது மிகவும் சாத்தியம். எனவே டாஸ் வென்ற பிறகு முதலில் பேட்டிங் செய்வதே புத்திசாலித்தனமான முடிவாக இருக்கும். 

உத்தேச பிளேயிங் லெவன்:

இந்தியா: அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ரிங்கு சிங், ஹர்திக் பாண்ட்யா, ரியான் பராக், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, மயங்க் யாதவ்.

வங்கதேசம்: லிட்டன் தாஸ், டான்சித் ஹசன் தமீம், நஜ்முல் ஹொசைன் சாண்டோ (கேப்டன்), தவ்ஹித் ஹிரிடோய், மஹ்முதுல்லா, ஜாக்கர் அலி, மெஹிதி ஹசன் மிராஸ், ரிஷாத் ஹொசைன், முஸ்தபிசுர் ரஹ்மான், தஸ்கின் அகமது, தன்சிம் ஹசன் சாகிப்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain Updates: மக்களே தயாரா..! 10 மாவட்டங்களில் இன்று வெளுக்கப் போகும் கனமழை - வானிலை மையம் எச்சரிக்கை
TN Rain Updates: மக்களே தயாரா..! 10 மாவட்டங்களில் இன்று வெளுக்கப் போகும் கனமழை - வானிலை மையம் எச்சரிக்கை
Chennai Power Shutdown: சென்னையில் இன்று ( 09.10.24 ) மின் தடை - எங்கெங்கு தெரியுமா ?
Chennai Power Shutdown: சென்னையில் இன்று ( 09.10.24 ) மின் தடை - எங்கெங்கு தெரியுமா ?
Rasi Palan Today, Oct 9: மேஷத்துக்கு பிரயாணம்; ரிஷபத்துக்கு செலவு! - உங்கள் ராசிக்கான இன்றைய பலன்
RasiPalan: மேஷத்துக்கு பிரயாணம்; ரிஷபத்துக்கு செலவு! - உங்கள் ராசிக்கான இன்றைய பலன்
Udhayam Theatre : வேட்டையன் படத்துடன் மூடப்படும் உதயம் தியேட்டர்...மண்ணோடு மண்ணாகப் போகும் அத்தனை நினைவுகள்
Udhayam Theatre : வேட்டையன் படத்துடன் மூடப்படும் உதயம் தியேட்டர்...மண்ணோடு மண்ணாகப் போகும் அத்தனை நினைவுகள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jammu & Kashmir Election Results : சொல்லி அடித்த ராகுல்! மண்ணை கவ்விய பாஜக!மோடி சறுக்கியது எப்படி?Thalavai Sundaram Removed From ADMK:  தளவாய் சுந்தரம் நீக்கம்!எடப்பாடி  அதிரடி..பாஜகவுடன் நெருக்கமா?Haryana election result : சொதப்பிய காங்கிரஸ் ப்ளான்! தோல்விக்கான 5 காரணங்கள்! தட்டித் தூக்கிய BJPHaryana election result | மண்ணைக் கவ்விய காங்கிரஸ்!காலரை தூக்கும் பாஜக!ஷாக்கில் ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain Updates: மக்களே தயாரா..! 10 மாவட்டங்களில் இன்று வெளுக்கப் போகும் கனமழை - வானிலை மையம் எச்சரிக்கை
TN Rain Updates: மக்களே தயாரா..! 10 மாவட்டங்களில் இன்று வெளுக்கப் போகும் கனமழை - வானிலை மையம் எச்சரிக்கை
Chennai Power Shutdown: சென்னையில் இன்று ( 09.10.24 ) மின் தடை - எங்கெங்கு தெரியுமா ?
Chennai Power Shutdown: சென்னையில் இன்று ( 09.10.24 ) மின் தடை - எங்கெங்கு தெரியுமா ?
Rasi Palan Today, Oct 9: மேஷத்துக்கு பிரயாணம்; ரிஷபத்துக்கு செலவு! - உங்கள் ராசிக்கான இன்றைய பலன்
RasiPalan: மேஷத்துக்கு பிரயாணம்; ரிஷபத்துக்கு செலவு! - உங்கள் ராசிக்கான இன்றைய பலன்
Udhayam Theatre : வேட்டையன் படத்துடன் மூடப்படும் உதயம் தியேட்டர்...மண்ணோடு மண்ணாகப் போகும் அத்தனை நினைவுகள்
Udhayam Theatre : வேட்டையன் படத்துடன் மூடப்படும் உதயம் தியேட்டர்...மண்ணோடு மண்ணாகப் போகும் அத்தனை நினைவுகள்
Haryana Result: ஹாட்ரிக் வெற்றியை பதித்த பாஜக.!அதிர்ச்சியில் ராகுல்: காங்கிரஸ் தோல்விக்கு முக்கியமான 2 காரணங்கள் ?
ஹாட்ரிக் வெற்றியை பதித்த பாஜக.!அதிர்ச்சியில் ராகுல்: காங்கிரஸ் தோல்விக்கு முக்கியமான 2 காரணங்கள் ?
savitri jindal: பாஜகவிலிருந்து நீக்கம்: சுயேட்சையாக போட்டியிட்டு வென்ற நாட்டின் பணக்கார பெண்: யார் இவர் ?
பாஜகவிலிருந்து நீக்கம்: சுயேட்சையாக போட்டியிட்டு வென்ற நாட்டின் பணக்கார பெண்: யார் இவர் ?
MACE Telescope: உலகிலேயே மிக உயரமான தொலைநோக்கி: இந்திய அணுசக்தி துறை அசத்தல்: பயன்கள் என்ன தெரியுமா?
உலகிலேயே மிக உயரமான தொலைநோக்கி: இந்திய அணுசக்தி துறை அசத்தல்: பயன்கள் என்ன தெரியுமா?
Admk Human Chain Protest: திமுக அரசு 2026 சட்டமன்ற தேர்தலில் வீட்டிற்கு அனுப்பப்படும் - செம்மலை
திமுக அரசு 2026 சட்டமன்ற தேர்தலில் வீட்டிற்கு அனுப்பப்படும் - செம்மலை
Embed widget