Ind vs Aus T20: ஃபார்மில் வரும் சூர்யா பசங்க.. அமைதிப்படை ஆஸி பசங்களுடன் மோதல்- இன்று துவங்கும் டி20 தொடர்
ஒரு நாள் தொடரில் ஆஸ்திரேலியா அணி 2-1 என்கிற கணக்கில் வென்றது. இந்த நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் இன்று ஆஸ்திரேலிய தலைநகரான கான்பெராவில் துவங்க உள்ளது.

Ind vs Aus T20: இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் இன்று கான்பெராவில் துவங்க உள்ளது.
ஆஸி தொடர்:
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்க்கொண்டு மூன்று ஒரு நாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஒரு நாள் தொடரில் ஆஸ்திரேலியா அணி 2-1 என்கிற கணக்கில் வென்றது. இந்த நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் இன்று ஆஸ்திரேலிய தலைநகரான கான்பெராவில் துவங்க உள்ளது.
கலக்கும் டாப் ஆர்டர்-கில்லுக்கு ஓய்வு?
இந்த தொடரில் இந்திய அணியின் டாப் ஆர்டர் நல்ல நிலையில் உள்ளது, குறிப்பாக தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மாவின் அதிரடி ஆட்டம், அணிக்கு நல்ல உத்வேகத்தை அளிக்கிறது
இந்திய அணியின் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் அணிக்கு கேப்டனான சுப்மன் கில், கடந்த ஐபிஎல், இங்கிலாந்து டெஸ்ட் தொடர் என தொடர்ந்து விளையாடி வருகிறார். இதனால் அவருக்கு முதல் இரண்டு போட்டிகளில் ஓய்வு அளிக்கப்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. கில் இல்லாத சாம்சன், அபிஷேக் சர்மாவுடன் இணைந்து விளையாடுவார்.
மிடில் ஆர்டர் எப்படி இருக்கு?
மிடில் ஆர்டர் பொறுத்தாவரை திலக் வர்மா, சூர்யக்குமார் யாதவ் உள்ளனர், கடந்த சில போட்டிகளாக சொதப்பி வரும் கேப்டன் சூர்யக்குமார் யாதவ் ஃபார்முக்கு திரும்ப வேண்டிய கட்டாயாத்தில் உள்ளார்.ஹார்திக் பாண்ட்யா இல்லாத நிலையில், ஷிவம் துபே மற்றும் அக்சர் படேல் அணியின் முதன்மை ஆல்ரவுண்டர்களாக இருப்பார்கள். ஷிவம் துபே அதிரடி பேட்டிங் மற்றும் சீம் பந்துவீச்சால் அணிக்கு நல்ல பேலன்ஸ்சை அளிக்கிறார். இதற்கிடையில், அக்சர் படேல் தனது துல்லியமான பந்துவீச்சு மற்றும் பேட்டிங் காரணமாக பின்வரிசையில் நல்ல பங்களிப்பை அளிக்கிறார்
பலமான பந்துவீச்சு:
வேகப்பந்து வீச்சில் அர்ஷ்தீப் சிங் , ஜஸ்ப்ரீத் பும்ராவும், சுழற்பந்து வீச்சில் குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி ஆகியோர் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேனுக்கு தலைவலி கொடுப்பார்கள்.
நேருக்கு நேர்:
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இதுவரை 32 முறை மோதியுள்ளான, இதில் இந்திய அணி 20 முறையும், ஆஸ்திரேலியா 11 முறையும் ஒரு போட்டி கைவிடப்பட்டுள்ளது. கடைசியாக விளையாடிய ஐந்து போட்டிகளில் இந்தியா 4 முறையும் ஆஸி அணி 1 முறையும் வெற்றி பெற்றது.
இந்தியா - அபிஷேக் சர்மா, ஷுப்மன் கில், சூர்யகுமார் யாதவ் (கேட்ச்), ரின்கு சிங், திலக் வர்மா, சஞ்சு சாம்சன், ஜிதேஷ் சர்மா, ஷிவம் துபே, அக்சர் படேல், குல்தீப் யாதவ், வருண் சகரவர்த்தி, நிதிஷ் குமார் ரெட்டி, ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ரனா, வாஷிங்டன் ரனா
ஆஸ்திரேலியா - மிட்செல் மார்ஷ் (c), சீன் அபோட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், மேத்யூ குஹ்னேமன், மிட்செல் ஓவன், ஜோஷ் பிலிப், சேவியர் பார்ட்லெட், தன்வீர் சங்கா, டிம் டேவிட், நாதன் எல்லிஸ், மேத்யூ ஷார்ட்
இந்த ஆஸ்திரேலிய வீரர்கள் ஓரிரு போட்டிகளில் மட்டுமே இடம்பெறுவார்கள்:
மார்கஸ் ஸ்டோய்னிஸ் (போட்டிகள் 1-3), மஹ்லி பியர்ட்மேன் (போட்டிகள் 3-5), பென் டுவார்ஷுயிஸ் (போட்டிகள் 4-5), ஜோஷ் ஹேசில்வுட் (போட்டிகள் 1-2), கிளென் மேக்ஸ்வெல் (போட்டிகள் 3-5),





















