Team India Squad: 20 மாதங்களுக்குப் பிறகு அஸ்வின்.. மீண்டும் கேப்டனாக கே.எல். ராகுல்; ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய அணி
India Australia ODI Series Squad: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
![Team India Squad: 20 மாதங்களுக்குப் பிறகு அஸ்வின்.. மீண்டும் கேப்டனாக கே.எல். ராகுல்; ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய அணி IND vs AUS ODI Series Team India Squad Announced R Ashwin Included India vs Australia Series Check Full Players List Team India Squad: 20 மாதங்களுக்குப் பிறகு அஸ்வின்.. மீண்டும் கேப்டனாக கே.எல். ராகுல்; ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய அணி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/29/c5f4445bbcbf7c7230723789eabe7cc61693301812004689_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
India Australia ODI Series Squad: ஆசிய கோப்பையை எட்டாவது முறையாக வென்ற இந்திய அணி, தற்போது நாடு திரும்பியுள்ளனர். ஒருநாள் உலகக் கோப்பை தொடங்குவதற்கு முன்பு, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி சொந்த மண்ணில் விளையாட இருக்கிறது.
வருகின்ற செப்டம்பர் 22ம் தேதி முதல் தொடங்கும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்குப் பிறகு உலகக் கோப்பை போட்டிகள் உடனடியாக நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மோதவுள்ளது.
இதில் முதல் இரண்டு போட்டிகளுக்கு கே.எல். ராகுல் தலைமையில் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 15 பேர் கொண்ட இந்திய அணியில் சீனியர் வீரர்களான கேப்டன் ரோகித் சர்மா, முன்னாள் கேப்டன் விராட் கோலி மற்றும் ஹர்திக் பாண்டியாவுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்கு ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் விளையாடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் முதல் இரண்டு போட்டிகளில் இடம் கொடுக்கப்பட்டுள்ள ருத்ராஜ் கெய்க்வாட்டிற்கு மூன்றாவது போட்டியில் இடம் கொடுக்கப்படவில்லை. மேலும், மூன்றாவது போட்டியில், ஆசிய கோப்பையில் காயம் அடைந்த அக்ஷர் பட்டேல் மூன்றாவது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல் முதல் இரண்டு போட்டிகளில் சேர்க்கப்பட்டுள்ள பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா மூன்றாவது போட்டிக்கான அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
முதல் இரண்டு ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி
கே.எல்.ராகுல் (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா (துணை கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், ஷுப்மன் கில், ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஷர்துல் தாக்கூர், வாஷிங்டன் சுந்தர், ஆர் அஸ்வின், ஜஸ்பிரித் பும்ரா, முகமது. ஷமி, முகமது. சிராஜ், பிரசித் கிருஷ்ணா
மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி
ரோஹித் சர்மா (கேப்டன்), ஹர்திக் பாண்டியா, (துணை கேப்டன்), ஷுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், கேஎல் ராகுல் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஆர் அஷ்வின், ஜஸ்பிரித் பும்ரா, முகமது. ஷமி, முகமது. சிராஜ்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)