IND vs AUS Head to Head Test: டெஸ்ட் வரலாற்றில் 106 முறை மோதல்.. யாருக்கு அதிக வெற்றி..? ட்ராவில் எத்தனை போட்டிகள்?
இதுவரை இரு அணிகளுக்கிடையில் விளையாடிய 106 டெஸ்ட் போட்டிகளில் யார் அதிக வெற்றிகளை பெற்றுள்ளனர் என்பதை இங்கே பார்க்கலாம்.
![IND vs AUS Head to Head Test: டெஸ்ட் வரலாற்றில் 106 முறை மோதல்.. யாருக்கு அதிக வெற்றி..? ட்ராவில் எத்தனை போட்டிகள்? ind vs aus head to head test in 106 matches ind vs aus will play wtc final 2023 at londons kennington oval IND vs AUS Head to Head Test: டெஸ்ட் வரலாற்றில் 106 முறை மோதல்.. யாருக்கு அதிக வெற்றி..? ட்ராவில் எத்தனை போட்டிகள்?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/07/14f47fbdf78702ae3fc9fb01dff7e6f81686118154112109_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்வதற்காக இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று (ஜூன் 7) முதல் களம் இறங்குகின்றன. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த போட்டி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் மதியம் 3 மணிக்கு தொடங்குகிறது. முன்னதாக, இந்த ஆண்டு பிப்ரவரி - மார்ச் மாதங்களில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே பார்டர்- கவாஸ்கர் டிராபி நடைபெற்றது. இந்த தொடரில் இந்தியா வென்றது. இதுவரை இரு அணிகளுக்கிடையில் விளையாடிய 106 டெஸ்ட் போட்டிகளில் யார் அதிக வெற்றிகளை பெற்றுள்ளனர் என்பதை இங்கே பார்க்கலாம்.
ஹெட் டூ ஹெட்:
இந்தியாவுக்கு ஆஸ்திரேலியாவுக்கு இடையே இதுவரை மொத்தம் 106 டெஸ்ட் போட்டிகள் நடந்துள்ளது. இதில், ஆஸ்திரேலியா அணி அதிகபட்சமாக 44 போட்டிகளிலும், இந்திய அணி 32 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. மேலும், 29 போட்டிகள் ட்ராவில் முடிவடைந்துள்ளது. இரு அணிகளுக்கும் இடையே முதல் டெஸ்ட் போட்டி 1947 ம் ஆண்டு நடைபெற்றது.
முன்னதாக, இந்த ஆண்டு பிப்ரவரி - மார்ச் மாதங்களில் பார்டர்-கவாஸ்கர் டிராபி இரு அணிகளுக்கு இடையே நான்கு டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றது. இதில், இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்றது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்தவர் யார்..?
இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கர் 3630 ரன்கள் குவித்துள்ளார். இதில், இவரது அதிகபட்ச ஸ்கோர் 241 நாட் அவுட். மேலும், ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் சச்சின் 11 சதங்கள் அடித்துள்ளார்.
தற்போது ஆக்டிவ் வீரர்கள் பட்டியலில் சேதேஷ்வர் புஜாரா ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அதிகபட்சமாக 2033 ரன்களுடன் முதலிடத்திலும், விராட் கோலி 1979 ரன்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். சதங்களின் அடிப்படையில், கோலி 8 சதங்களுடன் முதலிடத்திலும், புஜாரா 5 சதங்களுடன் 2வது இடத்திலும் இருக்கிறார்.
கணிக்கப்பட்ட இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணி:
இந்தியா - ரோகித் சர்மா (கேப்டன்), ஷுப்மான் கில், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, அஜிங்க்யா ரஹானே, கேஎஸ் பாரத் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், முகமது ஷமி, முகமது சிராஜ், ஷர்துல் தாக்கூர்.
ஆஸ்திரேலியா - டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுசாக்னே, ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், கேமரூன் கிரீன், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ் (கேப்டன்), நாதன் லியான், ஸ்காட் போலண்ட்.
நேரடி ஒளிபரப்பு:
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே நடைபெறும் இந்த இறுதிப் போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் மூலம் டிவியில் நேரடியாக ஒளிபரப்பப்படும். தூர்தர்ஷனில் போட்டியின் நேரடி ஒளிபரப்பு இலவசமாக பார்க்கலாம். இது தவிர, போட்டியை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மூலம் நேரடியாக ஒளிபரப்ப வேண்டும், இதன் மூலம் நீங்கள் மொபைலிலும் இந்த போட்டியை நேரலையில் பார்க்கலாம்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)