மேலும் அறிய

IND vs AUS: இந்தியா - ஆஸ்திரேலியா 32 ஆண்டுகளுக்கு பிறகு! பார்டர்-கவாஸ்கர் டிராபி 5 டெஸ்ட் போட்டியாக மோதல்!

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர் - கவாஸ்கர் டிராபி இதுவரை 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியாகவே மட்டுமே நடைபெற்று வந்தது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடர் குறித்து புதிய அப்டேட் ஒன்றை கிரிக்கெட் ஆஸ்திரேலியா வெளியிட்டுள்ளது. இது இரு நாட்டு கிரிக்கெட் ரசிகர்களுக்கு இடையே தற்போது நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

பார்டர் - கவாஸ்கர் டிராபி:

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர் - கவாஸ்கர் டிராபி இதுவரை 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியாகவே மட்டுமே நடைபெற்று வந்தது. இந்தநிலையில், ஒப்போது பார்டர் கவாஸ்கர் டிராபியில் நான்கு டெஸ்ட் போட்டிகளுக்கு பதிலாக 5 டெஸ்ட் போட்டிகள் நடத்தப்பட இருக்கிறது. இந்த அதிகாரப்பூர்வ தகவலை கிரிக்கெட் ஆஸ்திரேலியா நேற்று அறிவித்தது.  இதையடுத்து, 1991-92க்கு பிறகு இவ்விரு நாடுகளுக்கும் இடையே 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறுவது இதுவே முதல் முறை. 

இரு அணிகளுக்கு இடையே நடந்த கடைசி நான்கு டெஸ்ட் தொடர்களிலும், ஒவ்வொரு முறையும் வெற்றி பெற்று இந்தியா அதிக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. 2018-19 மற்றும் 2020-21 (2-1) ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வெல்வதும் இதில் அடங்கும். 2018-19ல் ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் ஆசிய அணி என்ற பெருமையை இந்தியா பெற்றது.

32 ஆண்டுகளுக்கு பிறகு..

டெஸ்ட் கிரிக்கெட்டில் 32 ஆண்டுகளுக்கு பிறகு இரு நாடுகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ள நிலையில் இது நிகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் 1991-92ல் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றது.

பார்டர் கவாஸ்கர் டிராபிக்காக விளையாடிய இந்தத் தொருக்கு பிறகு, ஆஸ்திரேலிய அணியின் 2024-25 அட்டவணையின் 5 டெஸ்ட் போட்டிகள் இடம்பெறுவது சிறப்பம்சமாக இருக்கும். இதற்கான திட்டம் வரும் நாட்களில் வெளியிடப்படும் என கிரிக்கெட் ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது. இந்தத் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி பெர்த்தில் நடைபெறவுள்ளது. 

இந்த ஆண்டு இறுதியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடரில் இருந்து இரு அணிகளும் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளன. 2014-15 சீசனுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவால் பார்டர்- கவாஸ்கர் டிராபியை வெல்ல முடியவில்லை.

இதுகுறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) செயலாளர் ஜெய் ஷா, ”கிரிக்கெட் ஆஸ்திரேலியா கிரிக்கெட்டின் அப்டேட்டோடு டெஸ்ட் கிரிக்கெட்டின் செழுமையான பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் பிசிசிஐ உறுதியாக உள்ளது. இது நாம் மிகவும் மதிக்கும் ஒரு வடிவம். பார்டர் கவாஸ்கர் டிராபியை ஐந்து டெஸ்ட் போட்டிகளுக்கு நீட்டிக்க கிரிக்கெட் ஆஸ்திரேலியாவுடனான எங்களது ஒத்துழைப்பு, டெஸ்ட் கிரிக்கெட்டின் முக்கியத்துவத்தை ஊக்குவிப்பதில் எங்களின் கூட்டு அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது” என்றார். 

கிரிக்கெட் ஆஸ்திரேலியா தலைவர் மைக் பேர்ட் கூறுகையில், ”இரு நாடுகளுக்கு இடையேயான கடுமையான போட்டியை கருத்தில் கொண்டு, பார்டர் கவாஸ்கர் டிராபி தற்போது ஐந்து டெஸ்ட் போட்டிகளாக உயர்த்தப்பட்டதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.” என்றார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அநீதி; தஞ்சை அரசுப்பள்ளியில் ஆசிரியை குத்திக்கொலை- பாடம் நடத்தும்போது நேர்ந்த துயரம்- அதிர்ச்சிப் பின்னணி!
அநீதி; தஞ்சை அரசுப்பள்ளியில் ஆசிரியை குத்திக்கொலை- பாடம் நடத்தும்போது நேர்ந்த துயரம்- அதிர்ச்சிப் பின்னணி!
அன்று மருத்துவர்! இன்று ஆசிரியை! அடுத்தடுத்த துயரத்தால் ஆளுங்கட்சிக்கு தலைவலி
அன்று மருத்துவர்! இன்று ஆசிரியை! அடுத்தடுத்த துயரத்தால் ஆளுங்கட்சிக்கு தலைவலி
CBSE Boards 2025: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு; சிபிஎஸ்இ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
CBSE Boards 2025: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு; சிபிஎஸ்இ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
பள்ளிக்குள் புகுந்து ஆசிரியையை கத்தியால் குத்திக் கொன்ற வாலிபர் கைது: பின்னணி என்ன?
பள்ளிக்குள் புகுந்து ஆசிரியையை கத்தியால் குத்திக் கொன்ற வாலிபர் கைது: பின்னணி என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

AR Rahman on Divorce : ”இப்படி பண்ணிட்டியே சாய்ரா..சுக்குநூறா உடைஞ்சுட்டேன்” மனம் திறந்த AR.ரஹமான்AR Rahman Saira Divorce Reason : ”வலியும், வேதனையும் அதிகம்”ஏ.ஆர் - சாய்ரா பகீர்!BJP Controversy Video |’’நாங்க ஆட்சிக்கு வரலனா..உங்கள சூறையாடிருவாங்க!’’பாஜக மதவெறி வீடியோGym Master Death | காதில் ரத்தம்..பாத்ரூமில் சடலம்..ஜிம் உரிமையாளர் திடீர் மரணம்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அநீதி; தஞ்சை அரசுப்பள்ளியில் ஆசிரியை குத்திக்கொலை- பாடம் நடத்தும்போது நேர்ந்த துயரம்- அதிர்ச்சிப் பின்னணி!
அநீதி; தஞ்சை அரசுப்பள்ளியில் ஆசிரியை குத்திக்கொலை- பாடம் நடத்தும்போது நேர்ந்த துயரம்- அதிர்ச்சிப் பின்னணி!
அன்று மருத்துவர்! இன்று ஆசிரியை! அடுத்தடுத்த துயரத்தால் ஆளுங்கட்சிக்கு தலைவலி
அன்று மருத்துவர்! இன்று ஆசிரியை! அடுத்தடுத்த துயரத்தால் ஆளுங்கட்சிக்கு தலைவலி
CBSE Boards 2025: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு; சிபிஎஸ்இ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
CBSE Boards 2025: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு; சிபிஎஸ்இ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
பள்ளிக்குள் புகுந்து ஆசிரியையை கத்தியால் குத்திக் கொன்ற வாலிபர் கைது: பின்னணி என்ன?
பள்ளிக்குள் புகுந்து ஆசிரியையை கத்தியால் குத்திக் கொன்ற வாலிபர் கைது: பின்னணி என்ன?
இலங்கை அரசின் தொடரும் சதி; தமிழக மீனவர்களை காப்பாற்றுமா தி.மு.க. அரசு?
இலங்கை அரசின் தொடரும் சதி; தமிழக மீனவர்களை காப்பாற்றுமா தி.மு.க. அரசு?
நடுவானில் வந்த மாரடைப்பு! 2 ஆண்டுகளுக்கு பிறகு வீட்டுக்கு வந்த பெண் மரணம் - சோகத்தில் கள்ளக்குறிச்சி
நடுவானில் வந்த மாரடைப்பு! 2 ஆண்டுகளுக்கு பிறகு வீட்டுக்கு வந்த பெண் மரணம் - சோகத்தில் கள்ளக்குறிச்சி
AR Rahman Divorce: டைவர்ஸ்க்குனு தனி APP! ஏ.ஆர்.ரஹ்மானுக்கு விவாகரத்து வாங்கித் தந்த வழக்கறிஞர் யாரு தெரியுமா?
AR Rahman Divorce: டைவர்ஸ்க்குனு தனி APP! ஏ.ஆர்.ரஹ்மானுக்கு விவாகரத்து வாங்கித் தந்த வழக்கறிஞர் யாரு தெரியுமா?
School Leave:  பசங்களா! தமிழ்நாட்டில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை - எங்கெல்லாம் தெரியுமா?
School Leave: பசங்களா! தமிழ்நாட்டில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை - எங்கெல்லாம் தெரியுமா?
Embed widget