மேலும் அறிய

IND vs AUS: வேகப்பந்து வீச்சாளர்களின் சொர்க்கபுரி! பெர்த் மைதானம் இதுவரை எப்படி?

இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் முதல் டெஸ்ட் போட்டி நடக்கும் பெர்த் மைதானம் எப்படி? என்பதை கீழே விரிவாக காணலாம்.

நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் இந்திய அணி இழந்த நிலையில்,  ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடருக்காக இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. 4-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை வென்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியும்.

அதிவேக மைதானம் பெர்த்:

இந்த நிலையில், இந்தியா – ஆஸ்திரேலிய அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி வரும் 22ம் தேதி ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் தொடங்குகிறது. உலகின் அதிவேக மைதானங்களில் ஒன்றாக பெர்த் மைதானமும் திகழ்கிறது.

பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழும் பெர்த் மைதானம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சொர்க்கபுரியாக திகழ்கிறது. இந்த மைதானத்தில் 60 ஆயிரம் ரசிகர்கள் வரை அமர்ந்து போட்டியை ரசிக்கலாம். பெர்த் மைதானத்தில் கடந்த 2018ம் ஆண்டு முதல் டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று வருகிறது.

4 போட்டியிலும் வெற்றிக்கொடி:

பெர்த் மைதானத்தில் இதுவரை 4 டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த அணியே 4 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளது. ஆஸ்திரேலியா தான் ஆடிய 4 போட்டிகளிலும் முதலில்  பேட் செய்து 4 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

இந்த போட்டியில் முதலில் பேட் செய்யும் அணி சராசரியாக 456 ரன்களை குவித்துள்ளது. இரண்டாவது இன்னிங்சில் பேட் செய்யும் அணி 250 ரன்களை சராசரியாக குவித்துள்ளது. 3வது இன்னிங்சில் சராசரியாக 218 ரன்கள் எடுக்கப்பட்டுள்ளது. 4வது இன்னிங்சில் சராசரியாக 183 ரன்கள் எடுக்கப்பட்டுள்ளது.

பெர்த்தில் இந்தியா எப்படி?

அதிகபட்சமாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய அணி 598 ரன்கள் எடுத்ததே அதிகபட்சம் ஆகும். அந்த போட்டியில் லபுசேனே, ஸ்டீவ் ஸ்மித் இரட்டை சதம் அடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. குறைந்தபட்சமாக பாகிஸ்தான் அணி 89 ரன்களுக்கு ஆல் அவுட்டானது மோசமான சாதனையாக உள்ளளது.

2018ம் ஆண்டு இதே மைதானத்தில் இந்திய அணி ஆடிய போட்டியில் இந்திய அணி அதிகபட்சமாக 283 ரன்களை எடுத்தது. அந்த இன்னிங்சில் கேப்டனாக இருந்த கோலி 123 ரன்களை எடுத்தார். அந்த போட்டியில் இந்திய அணி 146 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினாலும், அந்த தொடரை அதன்பின்பு இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

வேகம், சுழல் யார்? யார்?

இதுவரை பெர்த் மைதானத்தில் ஆஸ்திரேலிய அணி தோல்வியை தழுவியே இல்லை என்ற வரலாற்றை இந்திய அணி மாற்றுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியில் ஹேசல்வுட், ஸ்டார்க், போலந்து ஆகியோர் வேகப்பந்து வீச்சாளர்கள் ஆவார்கள். நாதன் லயன் முக்கிய சுழற்பந்துவீச்சாளர் ஆவார்கள்.

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் துணைகேப்டன் பும்ரா, பிரசித் கிருஷ்ணா, முகமது ஷமி, முகமது சிராஜ் முக்கிய வேகப்பந்து வீச்சாளர்கள் ஆவார். அஸ்வின், ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் முக்கிய சுழற்பந்துவீச்சாளர்கள் ஆவார்கள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

EVM Tampered: ”தோல்வியடைந்தால் மட்டும் EVMல் மோசடியா; வென்றால் இல்லை” உச்சநீதிமன்றம் காட்டம்? சொன்னது யாரை ? 
EVM Tampered: ”தோல்வியடைந்தால் மட்டும் EVMல் மோசடியா; வென்றால் இல்லை” உச்சநீதிமன்றம் காட்டம்? சொன்னது யாரை ? 
அதிகாரிகளிடம் சரமாரியான கேள்விகளை எழுப்பிய அதிமுக கவுன்சிலர் - சேலத்தில் பரபரப்பு
அதிகாரிகளிடம் சரமாரியான கேள்விகளை எழுப்பிய அதிமுக கவுன்சிலர் - சேலத்தில் பரபரப்பு
DMK VS PMK:
"வேறு வேலை இல்லை" அனல் பறக்கும் அரசியல் களம்.. முதலமைச்சர் கோபத்தின் பின்னணி ?
Fengal Cyclone: நாளை புயல் உருவாகும் - வானிலை மையம் அறிவிப்பு.!  எப்போது?, எங்கு கரையை கடக்கும் ?
நாளை புயல் உருவாகும் - வானிலை மையம் அறிவிப்பு.! எப்போது?, எங்கு கரையை கடக்கும் ?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தெலுங்குல பேச முடியாது.. தமிழ்ல தான் பேசுவேன்”அல்லு அர்ஜுன் THUGLIFEபள்ளியில் சாதியா? PAINT-ஐ எடுத்த அன்பில்! அரசுப் பள்ளியில் அதிரடி”அரசியலில் உன் மகன் காலி!” பழி தீர்த்த DK சிவக்குமார்! கதறும் அமைச்சர் குமாரசாமி!அடிதடியில் இறங்கிய அதிமுகவினர்! செல்லூர் ராஜூ vs டாக்டர் சரவணன்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EVM Tampered: ”தோல்வியடைந்தால் மட்டும் EVMல் மோசடியா; வென்றால் இல்லை” உச்சநீதிமன்றம் காட்டம்? சொன்னது யாரை ? 
EVM Tampered: ”தோல்வியடைந்தால் மட்டும் EVMல் மோசடியா; வென்றால் இல்லை” உச்சநீதிமன்றம் காட்டம்? சொன்னது யாரை ? 
அதிகாரிகளிடம் சரமாரியான கேள்விகளை எழுப்பிய அதிமுக கவுன்சிலர் - சேலத்தில் பரபரப்பு
அதிகாரிகளிடம் சரமாரியான கேள்விகளை எழுப்பிய அதிமுக கவுன்சிலர் - சேலத்தில் பரபரப்பு
DMK VS PMK:
"வேறு வேலை இல்லை" அனல் பறக்கும் அரசியல் களம்.. முதலமைச்சர் கோபத்தின் பின்னணி ?
Fengal Cyclone: நாளை புயல் உருவாகும் - வானிலை மையம் அறிவிப்பு.!  எப்போது?, எங்கு கரையை கடக்கும் ?
நாளை புயல் உருவாகும் - வானிலை மையம் அறிவிப்பு.! எப்போது?, எங்கு கரையை கடக்கும் ?
டங்ஸ்டன் விவகாரம்; அழகர் மலையில் ஒன்று கூடிய அரிட்டாபட்டி 48 தாய் கிராம மக்கள்
டங்ஸ்டன் விவகாரம்; அழகர் மலையில் ஒன்று கூடிய அரிட்டாபட்டி 48 தாய் கிராம மக்கள்
Sabarimala Temple: சபரிமலை கோயிலில் எத்தனை பேர் சாமி தரிசனம்? எவ்வளவு வசூல் தெரியுமா..?
சபரிமலை கோயிலில் எத்தனை பேர் சாமி தரிசனம்? எவ்வளவு வசூல் தெரியுமா..?
தம்பியை கொன்ற அண்ணனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
தம்பியை கொன்ற அண்ணனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
Seeman : “ரஜினியை சந்தித்த நான் சங்கி என்றால் நீங்க என்ன சொங்கியா?” சீமான் ஆவேசம்..!
Seeman : “ரஜினியை சந்தித்த நான் சங்கி என்றால் நீங்க என்ன சொங்கியா?” சீமான் ஆவேசம்..!
Embed widget