மேலும் அறிய

IND Vs AUS 4th T20 LIVE Score: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை வென்றது இந்திய அணி!

India Vs Australia 4th T20 LIVE Score Updates: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4வது டி20 குறித்த லைவ் ஸ்கோர் அப்டேட்களை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

Key Events
IND vs AUS 4th T20 LIVE Score Updates India vs Australia match highlights commentary score Shaheed Veer Narayan Singh Stadium IND Vs AUS 4th T20 LIVE Score: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை வென்றது இந்திய அணி!
சூர்யகுமார் யாதவ் - மேத்யூ வேட்

Background

இந்தியா - ஆஸ்திரேலியா டி-20 தொடர்:

அண்மையில் நடந்து முடிந்த ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணி, தற்போது இந்தியா உடன் 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் விளயாடி வருகிறது. மூத்த வீரர்கள் பலருக்கும் ஓய்வளிக்கப்பட்டு, இளம் வீரர்களுக்கு இந்த தொடரில் பிசிசிஐ வாய்ப்பளித்துள்ளது. விசாகப்பட்டினம் மற்றும் திருவனந்தபுரம் பகுதிகளில் நடைபெற்ற முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று இந்திய அணி, 2-1 என முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான நான்காவது  டி-20 போட்டி இன்று (டிசம்பர் 1) நடைபெறுகிறது.

இந்தியா - ஆஸ்திரேலியா இன்று மோதல்:

அதன்படி, ராய்பூர்  உள்ள ஷஹீத் வீர் நாராயண் சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் போட்டி, இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. இதன் நேரலையை ஸ்போர்ட்ஸ் 18 தொலைக்காட்சி அலைவரிசையிலும், ஒடிடியில் ஜியோ சினிமா செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம். இந்த போட்டியில் வென்று தொடரை 3-1 என கைப்பற்ற சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இளம் இந்திய அணி தீவிரம் காட்டுகிறது. அதேநேரம், தொடரை இழந்துவிடக்கூடாது என ஆஸ்திரேலியாவும் மல்லுக்கட்டுகிறது. இதனால், இன்றைய போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

பலம் - பலவீனங்கள்:

ஐபிஎல் தொடரில் விளையாடிய அனுபவம் வாய்ந்த இளம் வீரர்கள் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர். உள்ளூர் மைதானங்களில் போட்டி நடைபெறுவது அவர்களுக்கு கூடுதல் சாதகமாக உள்ளது. இரண்டு போட்டிகளிலும் பேட்டிங்கில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், இந்திய வீரர்கள் பந்துவீச்சில் ரன்களை வாரி வழங்குகின்றனர். இன்றைய போட்டியில் ரன்களை கட்டுப்படுத்தாவிட்டால், வெற்றி பெறுவது கடினமாக இருக்கும்.  மறுமுனையில், உலகக் கோப்பையில் விளையாடிய அணியை பெரிய மாற்றம் எதுவும் இன்றி ஆஸ்திரேலிய அணி அப்படியே களமிறக்கியுள்ளது. இருப்பினும் அனுபவம் வாய்ந்த பந்துவீச்சாளர்கள் இல்லாமல் இருப்பது, முதல் 2 போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. இன்றைய போட்டியிலாவது அவர்களது பந்துவீச்சு எடுபடுமா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

மைதானம் எப்படி?

கவுகாத்தி மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமானது என்பதால், இன்றைய போட்டியிலும் பேட்ஸ்மேன்கள் ஆதிக்கலாம் செலுத்தலாம். இரண்டாவது பாதியில் பனி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என கூறப்படுகிறது. இந்திய அணி இதுவரை இங்கு 3 டி-20 போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றி, ஒரு தோல்வியை பதிவு செய்துள்ளது. ஒரு போட்டிய்ல் முடிவு எட்டப்படவில்லை. 

உத்தேச அணி விவரம்:

இந்திய அணி:

யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, ரிங்கு சிங், அக்ஷர் பட்டேல், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார், பிரசித் கிருஷ்ணா.

ஆஸ்திரேலியா:

ஸ்டீவன் ஸ்மித், மேத்யூ ஷார்ட்/டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்லிஸ், மார்கஸ் ஸ்டோனிஸ், டிம் டேவிட், ஆரோன் ஹார்டி/மேக்ஸ்வெல், மேத்யூ வேட் (கேப்டன்), சீன் அப்போட், நாதன் எலிஸ், ஜாசன் பெரென்டோர்ப், தன்வீர் சங்கா/ஆடம் ஜம்பா.

22:35 PM (IST)  •  01 Dec 2023

IND Vs AUS 4th T20 LIVE Score: ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி தொடரை வென்றது இந்திய அணி!

20 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி தொடரை 3-1 என்ற கணக்கில் வென்றது இந்திய அணி. அதன்படி, முதல் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்தது. பின்னர், களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் மட்டுமே எடுத்து இந்திய அணியிடம் தோல்வியை தழுவியது.

22:28 PM (IST)  •  01 Dec 2023

IND Vs AUS 4th T20 LIVE Score: 19 ஓவர்கள் முடிவில்!

19 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 144 ரன்கள் எடுத்துள்ளது.

Load More
New Update
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ADMK - AMMK: 10 தொகுதிகள் கேட்கும் தினகரன்.. கேட்கும் இடங்கள் தருவாரா எடப்பாடி பழனிசாமி?
ADMK - AMMK: 10 தொகுதிகள் கேட்கும் தினகரன்.. கேட்கும் இடங்கள் தருவாரா எடப்பாடி பழனிசாமி?
TVK Vijay: “பாதுகாப்பின் அடையாளம் விசில்“; தவெக தலைவர் விஜய் அறிக்கை; என்ன சொல்லியிருக்கார் பாருங்க
“பாதுகாப்பின் அடையாளம் விசில்“; தவெக தலைவர் விஜய் அறிக்கை; என்ன சொல்லியிருக்கார் பாருங்க
TVK Whistle: இணையத்தில் ஒரே விசில் சத்தம்.. சிதறவிடும் தவெக - ஆர்ப்பரிக்கும் விஜய் ரசிகர்கள்!
TVK Whistle: இணையத்தில் ஒரே விசில் சத்தம்.. சிதறவிடும் தவெக - ஆர்ப்பரிக்கும் விஜய் ரசிகர்கள்!
இன்ஸ்டாகிராம் மூலம் பெண்ணுக்கு நிர்வாணப் படம் கேட்டு ஆபாச மிரட்டல் !! இளைஞர் கைது
இன்ஸ்டாகிராம் மூலம் பெண்ணுக்கு நிர்வாணப் படம் கேட்டு ஆபாச மிரட்டல் !! இளைஞர் கைது
ABP Premium

வீடியோ

”விசில் போடு...” TVK கேட்ட அதே சின்னம் நிறைவேறிய விஜய்யின் ஆசை
அதெப்படி திமிங்கலம்..! கால்வாய்க்கு கொசுவலை சென்னை மாநகராட்சி NEW IDEA
கேரளாவை உலுக்கிய தற்கொலை தலைமறைவான ஷிம்ஜிதா தேடுதல் வேட்டையில் போலீஸ்
அதிமுகவில் காளியம்மாள்? நாகை MLA சீட் டிக் அடித்த EPS
”MUSLIM மட்டுமா ஹிஜாப் போடுறோம்?வடமாநில பெண்களும் போடுறாங்க”பெண் கவுன்சிலர் பதிலடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK - AMMK: 10 தொகுதிகள் கேட்கும் தினகரன்.. கேட்கும் இடங்கள் தருவாரா எடப்பாடி பழனிசாமி?
ADMK - AMMK: 10 தொகுதிகள் கேட்கும் தினகரன்.. கேட்கும் இடங்கள் தருவாரா எடப்பாடி பழனிசாமி?
TVK Vijay: “பாதுகாப்பின் அடையாளம் விசில்“; தவெக தலைவர் விஜய் அறிக்கை; என்ன சொல்லியிருக்கார் பாருங்க
“பாதுகாப்பின் அடையாளம் விசில்“; தவெக தலைவர் விஜய் அறிக்கை; என்ன சொல்லியிருக்கார் பாருங்க
TVK Whistle: இணையத்தில் ஒரே விசில் சத்தம்.. சிதறவிடும் தவெக - ஆர்ப்பரிக்கும் விஜய் ரசிகர்கள்!
TVK Whistle: இணையத்தில் ஒரே விசில் சத்தம்.. சிதறவிடும் தவெக - ஆர்ப்பரிக்கும் விஜய் ரசிகர்கள்!
இன்ஸ்டாகிராம் மூலம் பெண்ணுக்கு நிர்வாணப் படம் கேட்டு ஆபாச மிரட்டல் !! இளைஞர் கைது
இன்ஸ்டாகிராம் மூலம் பெண்ணுக்கு நிர்வாணப் படம் கேட்டு ஆபாச மிரட்டல் !! இளைஞர் கைது
TVK Symbol: விஜய்க்கு விசில் சின்னம்.. டிவிகே-விற்கு விசில் போடுவார்களா மக்கள்?
TVK Symbol: விஜய்க்கு விசில் சின்னம்.. டிவிகே-விற்கு விசில் போடுவார்களா மக்கள்?
Dmdk Premalatha : மதில் மேல் பூனையாக தேமுதிக.! பிரேமலதா கேட்ட தொகுதிகள் என்ன.? கப் சிப் ஆன திமுக, அதிமுக
மதில் மேல் பூனையாக தேமுதிக.! பிரேமலதா கேட்ட தொகுதிகள்.? கப் சிப் ஆன திமுக, அதிமுக
Republic Day 2026: குடியரசு தினத்தில் எதிரி நாட்டு தலைவர்: இந்தியாவின் அழைப்பும், ஆட்சி கவிழ்ப்பு சதியும் - மறக்க முடியாத சம்பவம்
குடியரசு தினத்தில் எதிரி நாட்டு தலைவர்: இந்தியாவின் அழைப்பும், ஆட்சி கவிழ்ப்பு சதியும் - மறக்க முடியாத சம்பவம்
iPhone 15 Price Drop India: வாய்ப்ப மிஸ் பண்ணிடாதீங்க.! ஐபோன் 15-க்கு இவ்ளோ தள்ளுபடியா.? அத எப்படி வாங்குறதுன்னு பாருங்க
வாய்ப்ப மிஸ் பண்ணிடாதீங்க.! ஐபோன் 15-க்கு இவ்ளோ தள்ளுபடியா.? அத எப்படி வாங்குறதுன்னு பாருங்க
Embed widget