மேலும் அறிய

IND vs AUS 2nd Test: மீண்டும் சூறாவளியாய் மிரட்டிய ஜடேஜா.. 113 ரன்களுக்கு சுருண்ட ஆஸி., இலக்கை ஈஸியாக எட்டுமா இந்தியா?

IND vs AUS 2nd Test Day 3 Highlights: இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின், இரண்டாவது இன்னிங்ஸில் அஸ்திரேலிய அணி 113 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது.

இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின், இரண்டாவது இன்னிங்ஸில் அஸ்திரேலிய அணி 113 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. டெல்லியில் நடைபெறும் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி, 62 ரன்கள் முன்னிலை பெற்று இருந்தது. ஹெட் 39 ரன்களுடனும், மார்னஸ் லபுசக்னே 16 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

மூன்றாவது நாள் ஆட்டம்: 

மூன்றாவது நாள் ஆட்டம் தொடங்கியதுமே, இருமுனைகளிலும் சுழற்பந்து வீச்சால் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு இந்திய அணி கடும் நெருக்கடி கொடுத்தது. இதனால், ஹெட் 43 ரன்களுக்கும், லபுசக்னே 35 ரன்களுக்கும் அட்டமிழந்தனர். அவர்களை தொடர்ந்து வந்த ஸ்மித் 9 ரன்களிலும், ரென்ஷா 2 ரன்களிலும் ஆட்டமிழக்க,  கம்மின்ஸ் மற்றும் ஹேண்ட்ஸ்கோம்ப் ஆகியோர் ரன் ஏதும் எடுக்காமலும் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். அடுத்தடுத்து வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, 113 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக ஜடேஜா 7 விக்கெட்டுகளையும், அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

முதல் இன்னிங்ஸ்:

டெல்லியில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய அந்த அணி 263 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக கவாஜா 81 ரன்களையும், ஹேண்ட்ஸ்கோம்ப் 72 ரன்களையும் சேர்த்தனர். இந்திய அணி சார்பில் ஷமி 4 விக்கெட்டுகளையும், அஸ்வின் மற்றும் ஜடெஜா தலா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி, 262 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி தரப்பில் அதிரடியாக விளையாடிய அக்சர் படேல்  74 ரன்களை சேர்க்க, அவருக்கு உறுதுணையாக கோலி 44 ரன்களையும், அஸ்வின் 37 ரன்களையும், ரோகித் சர்மா 32 ரன்களையும் சேர்த்தனர். ஆஸ்திரேலிய தரப்பில் சிறப்பாக பந்துவீசிய நாதன் லயன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினர். தொடர்ந்து ஒரு ரன் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, இந்திய அணியின் சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 113 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. இதையடுத்து 115 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியுள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் பார்டர் கவாஸ்கர் தொடரை இந்திய அணி மீண்டும் கைப்பற்றுவது உறுதியாகிவிடும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fire Accident: சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து - 3 பேர் உயிரிழப்பு, மீட்பு பணிகள் தீவிரம்

Kalki 2898 AD Collection: ஹாலிவுட் ரேஞ்சில் வெளியான 'கல்கி 2898 AD' - இரண்டாம் நாள் வசூல் என்ன?

Kalki Movie Leaks : பிட்டு பிட்டாக படத்தை வெளியிட்ட நெட்டிசன்ஸ்! கலக்கத்தில் கல்கி படக்குழு!

CIBIL Score: லோன் வாங்க திட்டமா? வலுவான CIBIL ஸ்கோர் ஏன் அவசியம்? உங்களுக்கு கிடைக்கும் 5 நன்மைகள் என்ன?

ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fire Accident: சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து - 3 பேர் உயிரிழப்பு, மீட்பு பணிகள் தீவிரம்
Fire Accident: சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து - 3 பேர் உயிரிழப்பு, மீட்பு பணிகள் தீவிரம்
Kalki 2898 AD Collection: ஹாலிவுட் ரேஞ்சில் வெளியான 'கல்கி 2898 AD' - இரண்டாம் நாள் வசூல் என்ன?
Kalki 2898 AD Collection: ஹாலிவுட் ரேஞ்சில் வெளியான 'கல்கி 2898 AD' - இரண்டாம் நாள் வசூல் என்ன?
Kalki Movie Leaks : பிட்டு பிட்டாக படத்தை வெளியிட்ட நெட்டிசன்ஸ்! கலக்கத்தில் கல்கி படக்குழு!
Kalki Movie Leaks : பிட்டு பிட்டாக படத்தை வெளியிட்ட நெட்டிசன்ஸ்! கலக்கத்தில் கல்கி படக்குழு!
CIBIL Score: லோன் வாங்க திட்டமா? வலுவான CIBIL ஸ்கோர் ஏன் அவசியம்? உங்களுக்கு கிடைக்கும் 5 நன்மைகள் என்ன?
CIBIL Score: லோன் வாங்க திட்டமா? வலுவான CIBIL ஸ்கோர் ஏன் அவசியம்? உங்களுக்கு கிடைக்கும் 5 நன்மைகள் என்ன?
Bihar: ஆத்தாடி! 9 நாட்களில் 5வது சம்பவம், கட்டிக் கொண்டிருக்கும்போதே இடியும் பாலங்கள் - பீகாரில் தொடரும் பீதி!

Breaking News LIVE: ரூபாய் 5 கோடி மோசடி! தெலங்கானா வாலிபர் சென்னை போலீசாரால் கைது

School Holiday: தொடர் கனமழை எதிரொலி - நீலகிரியில் 2 தாலுகாக்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

Vodafone Recharge: நாங்கனா சும்மாவா..! வோடாஃபோன் நிறுவனமும் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பு

Embed widget