மேலும் அறிய

Ind vs Aus 2nd ODI: 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி..!

இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் (IND vs AUS 2nd ODI LIVE Score) டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

LIVE

Key Events
Ind vs Aus 2nd ODI: 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி..!

Background

இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

ஆந்திர மாநிலம் கடப்பாவில் உள்ள ஒய்.எஸ். ராஜ ரெட்டி கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறும் போட்டியில், தொடரை வெல்லும் முனைப்புடன் இந்திய அணி களமிறங்கியுள்ளது. போட்டியின் நேரலையை ரசிகர்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அலைவரிசையிலும், ஹாட் ஸ்டார் செயலியிலும் நேரடியாக கண்டுகளிக்கலாம்.

ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம்: 

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி, 4 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியாவிடம் இழந்தது. அதைதொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.  வான்கடே மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் அஸ்திரேலிய அணி 188 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அதன் பின்னர் களமிறங்கிய இந்திய அணியில் ராகுல் 75 ரன்களுடனும் ஜடேஜா 45 ரன்களுடனும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெறச்செய்தனர். இதன் மூலம்  மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1 -0 என முன்னிலை வகிக்கிறது. 

2வது ஒருநாள் போட்டி:

இந்நிலையில் தான் இரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெறுகிறது. தொடரை இழப்பதை தவிர்க்க ஆஸ்திரேலிய அணியும், இன்றைய போட்டியின் வென்று தொடரை கைப்பற்ற இந்திய அணியும் தீவிரம் வருகிறது. இதனால் இன்றைய போட்டியும் விறுவிறுப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்திய அணி நிலவரம்:

தனிப்பட்ட காரணங்களால் முதல் போட்டியில் விளையாடாத கேப்டன் ரோகித் சர்மா, இன்றைய போட்டியின் மூலம் மீண்டும் அணிக்கு திரும்புவது அணியை மேலும் வலுவடைய செய்துள்ளது.  இதனால், ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்க உள்ளனர். முதல் போட்டியில் ஏமாற்றிய கோலி மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் இன்றைய போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவர் என எதிர்பார்க்கப்படுகிறது. பாண்ட்யா, ராகுல் மற்றும் ஜடேஜா ஆகியோர் நல்ல ஃபார்மில் உள்ளனர். பந்து வீச்சில் முகமது ஷமி, முகமது சிராஜ், ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் உள்ளிட்டோர் சிறப்பாக செயல்பட்டு எதிரணியை திணறடித்து வருகின்றனர்.

ஆஸ்திரேலிய அணி நிலவரம்:

ஆஸ்திரேலிய அணியும் அனைத்து வகையிலும் இந்தியாவுக்கு  நிகரான பலம் வாய்ந்ததாக விளங்குகிறது. கடந்த போட்டியில் அந்த அணியின் பேட்டிங் வரிசை சொதப்பியது தோல்விக்கு முக்கிய கரணமாக கருதப்படுகிறது. இதனால் கேப்டன் ஸ்மித், கிளன் மேக்ஸ்வெல், கேமரூன் கிரீன் ஆகியோரை அந்த அணி அதிகம் நம்பியுள்ளது. பந்து வீச்சில் ஆடம் ஜம்பா, மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் அந்த அணிக்கு நம்பிக்கை அளிக்கின்றனர்.

நேருக்கு நேர்:

இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் ஒரு நாள் போட்டிகளில்  இதுவரை 144 முறை நேருக்கு நேர்மோதியுள்ளன. இதில் 80-ல் ஆஸ்திரேலியாவும், 54-ல் இந்தியாவும் வெற்றி பெற்றுள்ளன. 10 ஆட்டத்தில் முடிவில்லை. 

இந்திய அணி:

சுப்மன் கில், ரோகித் சர்மா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், லோகேஷ் ராகுல், ஹர்திக் பாண்ட்யா , ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், அக்சர் படேல், முகமது சிராஜ், முகமது ஷமி 

ஆஸ்திரேலிய அணி:

டிராவிஸ் ஹெட், ஸ்டீவன் சுமித் (கேப்டன்), மார்னஸ் லபுசக்னே, மிட்செல் மார்ஷ், மார்கஸ் ஸ்டோய்னிஸ், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா, சீன் அப்போட், நாதன் எலிஸ்

17:09 PM (IST)  •  19 Mar 2023

50 ரன்களைக் கடந்த ஆஸி..!

களமிறங்கியது முதல் அதிரடியாக ஆடி வரும் ஆஸ்திரேலிய அணி விக்கெட் இழப்பின்றி 6 ஓவர்கள் முடிவில் 66 ரன்கள் சேர்த்துள்ளது.  

16:39 PM (IST)  •  19 Mar 2023

பேட்டிங்கைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணி.!

118 எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியுள்ளது. 

16:03 PM (IST)  •  19 Mar 2023

இந்தியா ஆல் அவுட்..!

117 ரன்களுக்கு இந்திய அணி ஆல் அவுட் ஆகியுள்ளது. ஆஸ்திரேலிய அணியின் சார்பில் மிட்ஷெல் ஸ்டார்க் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.  

15:19 PM (IST)  •  19 Mar 2023

ஜடேஜா விக்கெட்..!

நிதானமாக ஆடி வந்த ஜடேஜா 39 பந்தில் 17 ரன்கள் சேர்த்த நிலையில் அவுட் ஆகி வெளியேறியுள்ளார். 

14:56 PM (IST)  •  19 Mar 2023

கோலி விக்கெட்..!

அடுத்தடுத்து ஐந்து விக்கெட்டுகளை இழந்த இந்திய அணிக்கு நம்பிக்கையாக இருந்த விராட் கோலி 35 பந்தில் 31 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டை இழந்து வெளியேறியுள்ளார். 

Load More
New Update
Advertisement

தலைப்பு செய்திகள்

New Governors: 5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம் - அப்ப தமிழ்நாட்டுக்கு? குடியரசு தலைவர் அறிவிப்பு
New Governors: 5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம் - அப்ப தமிழ்நாட்டுக்கு? குடியரசு தலைவர் அறிவிப்பு
Christmas Celebration: நாடே உற்சாகம்.. நள்ளிரவில் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை, கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் கோலாகலம்
Christmas Celebration: நாடே உற்சாகம்.. நள்ளிரவில் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை, கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் கோலாகலம்
Tungsten Mining: பணிந்ததா மத்திய அரசு?:  டங்ஸ்டன் சுரங்க இடத்தை மறு ஆய்வு செய்ய பரிந்துரை.!
பணிந்ததா மத்திய அரசு?: டங்ஸ்டன் சுரங்க இடத்தை மறு ஆய்வு செய்ய பரிந்துரை.!
Breaking News LIVE: உலகெங்கும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்! 5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள்!
Breaking News LIVE: உலகெங்கும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்! 5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance | ’’அதிமுக தவெக கூட்டணி! நிச்சயம் ஆட்சியை பிடிக்கும்’’ பற்ற வைத்த அமீர் | AmeerAnnamalai vs Senthil Balaji: டார்கெட் செந்தில்பாலாஜி!அண்ணாமலை பலே ப்ளான்.. OK - சொன்ன மோடி!Vijayadharani Join TVK: தவெகவில் இணையும் விஜயதரணி? பாஜகவிற்கு TATA.. ஸ்கெட்ச் போட்ட விஜய்!TVK Vijay | தவெக-வின் அடுத்த சம்பவம்! 2025-ல் காத்திருக்கும் TWIST இறங்கி அடிக்கும் விஜய்! | Bussy

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
New Governors: 5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம் - அப்ப தமிழ்நாட்டுக்கு? குடியரசு தலைவர் அறிவிப்பு
New Governors: 5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம் - அப்ப தமிழ்நாட்டுக்கு? குடியரசு தலைவர் அறிவிப்பு
Christmas Celebration: நாடே உற்சாகம்.. நள்ளிரவில் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை, கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் கோலாகலம்
Christmas Celebration: நாடே உற்சாகம்.. நள்ளிரவில் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை, கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் கோலாகலம்
Tungsten Mining: பணிந்ததா மத்திய அரசு?:  டங்ஸ்டன் சுரங்க இடத்தை மறு ஆய்வு செய்ய பரிந்துரை.!
பணிந்ததா மத்திய அரசு?: டங்ஸ்டன் சுரங்க இடத்தை மறு ஆய்வு செய்ய பரிந்துரை.!
Breaking News LIVE: உலகெங்கும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்! 5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள்!
Breaking News LIVE: உலகெங்கும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்! 5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள்!
அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முதல் தமிழ் பெண் - குவியும் பாராட்டு
அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முதல் தமிழ் பெண் - குவியும் பாராட்டு
Rasipalan December 25: கும்பத்திற்கு அதிக செலவு; மீனத்திற்கு நண்பர்களின் ஆதரவு- உங்க ராசி பலன்?
Rasipalan December 25: கும்பத்திற்கு அதிக செலவு; மீனத்திற்கு நண்பர்களின் ஆதரவு- உங்க ராசி பலன்?
Thiruppavai 10: ”கும்பகர்ணன் போல தூங்குகிறாயே தோழி”  நகைச்சுவையாக எழுப்பும் ஆண்டாள்..விரிவாக படிக்க
Thiruppavai 10: ”கும்பகர்ணன் போல தூங்குகிறாயே தோழி” நகைச்சுவையாக எழுப்பும் ஆண்டாள்..விரிவாக படிக்க
"செந்தில்பாலாஜி என் வீட்டிற்கு வந்து, என் அம்மா கையில் சாப்பிட்டுள்ளார்": அண்ணாமலை பரபர பேட்டி.!
Embed widget