IND vs AUS 1st ODI LIVE Score: 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி.. கேப்டன் இன்னிங்ஸ் ஆடிய கே.எல்.ராகுல்..!
IND vs AUS 1st ODI LIVE Score Updates: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டியின் அப்டேட்களை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள ஏபிபி நாடு பக்கத்தில் இணைந்திருங்கள்.
LIVE
Background
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறவுள்ளது. உலகக் கோப்பைக்கு முன்னதாக இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான தொடர் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்தநிலையில், இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான முதல் ஒருநாள் போட்டி மொஹாலியில் இன்று நேருக்கு நேர் மோதுகின்றன. இந்த போட்டியானது இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது. இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு வருகின்ற உலகக்கோப்பை போட்டியை கணக்கில் கொண்டு முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், விராட் கோலி, ஹர்திக் பாண்டியா போன்ற வீரர்களும் ஓய்வில் இருக்கின்றன. இப்படியான சூழலில் முதல் ஒருநாள் போட்டியில் இரு அணிகளும் விளையாடும் 11 பேர் யாராக இருக்கலாம் என்பதை இங்கு பார்க்கலாம்.
இந்திய அணியின் விளையாடும் 11 பேர் யார் யார்..?
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் களமிறங்கலாம். இதற்குப் பிறகு, இஷான் கிஷன் நம்பர்-3 இல் பேட்டிங் செய்ய உள்ளே வருவார் என்றும், மிடில் ஆர்டரில் தற்காலிக கேப்டன் கே.எல்.ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ் போன்ற வீரர்கள் இந்திய அணிக்கு வலு சேர்ப்பார்கள். ரவீந்திர ஜடேஜா ஆல்ரவுண்டராக பின் வரிசையில் நம்பிக்கை அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணியில் விளையாடும் பதினொன்றில் தமிழ்நாடு வீரர் ரவிசந்திரன் அஸ்வினுக்கு வாய்ப்பு கிடைக்கலாம். அதேசமயம் வேகப்பந்து வீச்சாளர்களான முகமது ஷமி மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் விளையாடும் பதினொன்றில் ஒரு பகுதியாக இருக்கலாம். இந்த நேரத்தில், முதல் ஒருநாள் போட்டியில் இந்தியாவின் ப்ளேயிங் லெவனில் முகமது சிராஜ் அமரவைக்கப்படலாம்.
ரவிசந்திரன் அஸ்வின் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் வாய்ப்பை பயன்படுத்தி கொள்வார்களா..?
இந்திய கிரிக்கெட் நிர்வாகம் மற்றும் ரசிகர்களின் பார்வை ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் ரவிசந்திரன் அஸ்வின் மீதுதான் இருக்கும். காயத்தினால் அவதிப்பட்டு வந்த ஷ்ரேயாஸ் ஐயர் நீண்ட நாட்களுக்கு பிறகு ஆசிய கோப்பையில் இந்திய அணிக்கு திரும்பினார். ஆனால் அதிக போட்டியில் அவரால் விளையாட முடியவில்லை. அதே நேரத்தில், ரவி அஸ்வின் கிட்டத்தட்ட 18 மாதங்களுக்குப் பிறகு இந்திய ஒருநாள் அணிக்கு திரும்புகிறார். இந்திய அணியில் காயம் அடைந்த அக்சர் படேலுக்கு பதிலாக ரவிசந்திரன் அஸ்வின் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான ஒருநாள் தொடர் ரவிசந்திரன் அஸ்வினுக்கு மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. ரவிசந்திரன் அஸ்வினின் ஆட்டம் சிறப்பாக இருந்தால், வரும் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெறலாம் என நம்பப்படுகிறது.
ரோஹித் மற்றும் கோலிக்கு ஓய்வு ஏன்..?
ரோஹித் மற்றும் கோலிக்கு ஓய்வு ஏன் என்பது குறித்து ராகுல் டிராவிட் கூறுகையில், “வீரர்களிடம் பேசிய பிறகே ஓய்வு அளிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு வீரர்களும் உலகக் கோப்பைக்கு முன் முழு உடல் மற்றும் மன உறுதியுடன் இருக்க வேண்டும் என்று அணி விரும்புகிறது.” என தெரிவித்தார்.
கணிக்கப்பட்ட இந்திய அணி:
ருதுராஜ் கெய்க்வாட், சுப்மன் கில், இஷான் கிஷன், கேஎல் ராகுல் (கேப்டன்), ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், முகமது ஷமி மற்றும் ஜஸ்பிரித் பும்ரா.
கணிக்கப்பட்ட ஆஸ்திரேலியா அணி:
டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லாபுசாக்னே, அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), கேமரூன் கிரீன், மார்கஸ் ஸ்டோனிஸ், பாட் கம்மின்ஸ், ஜோஷ் ஹேசில்வுட், ஆடம் ஜம்பா மற்றும் தன்வீர் சங்கா.
IND vs AUS 1st ODI LIVE Score: மூன்றுவகைக் கிரிக்கெட்டிலும் இந்தியாதான் டாப்..!
இந்த வெற்றியின் மூலம் ஐசிசியின் ஒருநாள் போட்டிக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி முதல் இடம் பிடித்துள்ளது. ஏற்கனவே டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளின் தரவரிசைப் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பதால், தற்போது மூன்று வகைக் கிரிக்கெட்டிலும் இந்திய அணி முதல் இடத்தில் உள்ளது.
5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி.. கேப்டன் இன்னிங்ஸ் ஆடிய கே.எல்.ராகுல்..!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
IND vs AUS 1st ODI LIVE Score: சூர்யகுமார் யாதவ் அரைசதம்..!
பொறுப்புடன் ஆடிவந்த சூர்ய குமார் யாதவ் 47 பந்துகளில் தனது அரைசதத்தினை எட்டியுள்ளார்.
வெற்றி இலக்கை நெருங்கும் இந்தியா; நெருக்கடி கொடுக்கும் ஆஸ்திரேலியா..!
இந்திய அணி 35 ஓவர்களில் 4 விக்கெட்டினை இழந்து 200 ரன்களை கடந்துள்ளது.
IND vs AUS 1st ODI LIVE Score: இஷான் கிஷன் அவுட்..!
நிதானமாக ஆடி வந்த இஷான் கிஷன் தனது விக்கெட்டினை 18 ரன்கள் சேர்த்த நிலையில் பேட் கம்மின்ஸ் பந்து வீச்சில் இழந்து வெளியேறினார்.