ICC Test Rankings 2024: ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசை - இந்திய கேப்டன் ரோகித் சர்மா முன்னேற்றம்
ஐசிசி உலக டெஸ்ட் கிரிக்கெட் பேட்டிங் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் இந்திய அணியின் கேப்டன் இரண்டு இடங்கள் முன்னேறியுள்ளார்.
ஐசிசி உலக டெஸ்ட் கிரிக்கெட் பேட்டிங் பட்டியல்:
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி, முதல் போட்டியில் இந்திய அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து அணி. இரண்டாவது போட்டியில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனிடையே, இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 15 ஆம் தேதி குஜராத் மாநிலம் ராஜ்கோட் சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில், பிப்ரவரி 23 ஆம் தேதி ராஞ்சியில் உள்ள ஜே.எஸ்.சி.ஏ சர்வதேச மைதானத்தில் நான்காவது டெஸ்ட் போட்டி தொடங்கியது.
இதில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை வென்றது. அந்தவகையில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியது. இதன் மூலம் 3-1 என்ற கணக்கில் தனது சொந்த நாட்டில் நடைபெறும் டெஸ்ட் தொடரை இந்திய அணி வென்றுள்ளது. இதனிடையே இந்த டெஸ்ட் தொடரின் கடைசி போட்டி ஹிமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் மார்ச் 7 ஆம் தேதி நடைபெற உள்ளது.
ரோகித் சர்மா முன்னேற்றம்:
Rohit Sharma moves to Number 11 in the ICC Test batters ranking.
— Johns. (@CricCrazyJohns) March 6, 2024
- Captain is leading the team by example. pic.twitter.com/Vl1ZfTN2bj
இந்நிலையில் ஐசிசி உலக டெஸ்ட் கிரிக்கெட் பேட்டிங் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 12 வது இடத்தில் இருந்து இரண்டு இடங்கள் முன்னேறி 10 வது இடத்தை பிடித்துள்ளார். அந்தவகையில் கடந்த 8 இன்னிங்ஸ்களில் 80, 15, 17, 209, 214, 10, 37, 73 உட்பட மொத்தம் 655 ரன்களை 93.57 என்ற அடிப்படையில் குவித்துள்ளார். அதேபோல், 727 புள்ளிகளுடன் 10 வது இடத்தில் இருக்கிறார்.
இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கடந்த முறை 1 இடம் சரிந்து 13 வது இடத்தில் இருந்தார். இந்நிலையில் தற்போது வெளியாகி உள்ள பட்டியலில் 2 இடங்கள் முன்னேறி 720 புள்ளிகளுடன் 11 வது இடத்தை பிடித்துள்ளார். இந்திய அணியின் மற்றொரு வீரரானா விராட் கோலி ஒரு இடம் முன்னேறி 8 வது இடத்தை பிடித்து உள்ளார். அதன்படி, 744 புள்ளிகளை அவர் பெற்றுள்ளார். முன்னதாக இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர் நியூசிலாந்து அணி வீரர் கேன் வில்லியம்சன்.
அதாவது 870 புள்ளிகளுடன் அவர் முதல் இடத்தை தொடர்ந்து தக்கவைத்துள்ளார். அதேபோல் மூன்றாவது இடத்தில் இருந்த இங்கிலாந்து அணி வீரர் ஜோ ரூட் 1 இடம் முன்னேறி இரண்டாவது இடத்தில் உள்ளார். ஆஸ்திரேலிய அணி வீரர் ஸ்டீவ் சுமித் ஒரு இடம் சரிந்து 789 புள்ளிகளுடன் 3 வது இடத்தில் இருக்கிறார். நான்காவது இடத்தில் 771 புள்ளிகளுடன் டேரில் மிட்சல் 4 வது இடத்திலும், 768 புள்ளிகளுடன் பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் 5 வது இடத்திலும் உள்ளனர்.
மேலும் படிக்க: Virat Kohli IPL Record: IPL-ல் ஒரு சீரிஸில் அதிக ரன்களை விளாசிய வீரர்! விராட் கோலியின் சாதனை!
மேலும் படிக்க: Watch Video: என்ன ஹீரோயிசமா? சர்பராஸ் கானை கண்டித்த ரோகித் சர்மா - நடந்தது இதுதான்!