(Source: ECI/ABP News/ABP Majha)
ICC Test Batting Ranking: ஐ.சி.சி டெஸ்ட் தரவரிசை...ஹிட்மேன் ரோஹித்தை பின்னுக்குத் தள்ளிய ஜெய்ஸ்வால்!
ஐ.சி.சி டெஸ்ட் தரவரிசை பட்டியலில் ரோகித் சர்மாவை பின்னுக்குத் தள்ளி யஷஸ்வி ஜெய்ஸ்வால் முன்னேறியுள்ளார்.
ரோகித்தை பின்னுக்குத் தள்ளிய ஜெய்ஸ்வால்:
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் தொடரை வென்றுள்ளது. இந்த தொடரின் கடைசி டெஸ்ட் போட்டி மார்ச் 7 ஆம் தேதி தொடங்க உள்ளது.
இந்நிலையில் ஐசிசி உலக டெஸ்ட் கிரிக்கெட் பேட்டிங் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 12-வது இடத்தை பிடித்துள்ளார். அதன்படி, இங்கிலாந்து அணிக்கு எதிரான கடந்த 4 டெஸ்ட் போட்டிகளில் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அந்தவகையில் கடந்த 8 இன்னிங்ஸ்களில் 80, 15, 17, 209, 214, 10, 37, 73 உட்பட மொத்தம் 655 ரன்களை 93.57 என்ற அடிப்படையில் குவித்துள்ளார்.
Yashasvi Jaiswal moves to number 12 in ICC Test batters ranking.
— Johns. (@CricCrazyJohns) February 28, 2024
- He is 2nd behind Virat Kohli among Indians, What a growth. 🫡 pic.twitter.com/Bo46JttI0C
கோலிக்கு 9- வது இடம்:
இதன் மூலம் தான் கடந்த முறை 15-வது இடத்தில் இருந்த ஜெய்ஸ்வால் மூன்று இடங்கள் முன்னேறி தற்போது 12 வது இடத்தை பிடித்துள்ளார். முன்னதாக டாப் 10 பேட்டர்கள் பட்டியிலில் ஒரே ஒரு இந்திய வீரர்தான் இருக்கிறார். அதாவது இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 9 வது இடத்தில் இருக்கிறார். கடந்த முறை 7 வது இடத்தில் இருந்த இவர் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் விளையாடாததால் இரண்டு இடம் சரிந்து 9 வது இடத்தை பிடித்துள்ளார்.
அதேபோல் கடந்த முறை 12 வது இடத்தில் இருந்த இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 1 இடம் சரிந்து 13 வது இடத்தில் இருக்கிறார். முன்னதாக இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர் நியூசிலாந்து அணி வீரர் கேன் வில்லியம்சன். அதாவது 893 புள்ளிகளுடன் அவர் முதல் இடத்தை தொடர்ந்து தக்கவைத்துள்ளார். அதேபோல், ஸ்டீவ் சுமித் 818 புள்ளிகளுடன் 2 வது இடத்திலும், ஜோ ரூட் 799 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும், 780 புள்ளிகளுடன் டேரில் மிட்சல் 4 வது இடத்திலும், 768 புள்ளிகளுடன் பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் 5 வது இடத்திலும் உள்ளனர்.
மேலும் படிக்க: Gujarat Giants vs Mumbai Indians: பந்து வீச்சில் மிரட்டிய அமெலியா கெர்...மும்பை அணிக்கு 127 ரன்கள் இலக்கு!
மேலும் படிக்க: Virat Kohli IPL Record: IPL-ல் ஒரு சீரிஸில் அதிக ரன்களை விளாசிய வீரர்! விராட் கோலியின் சாதனை!