PAK vs NZ, 1 Innings Highlight: மீண்டும் பந்துவீச்சில் அசத்திய பாகிஸ்தான் : நியூசிலாந்தை 134 ரன்களில் சுருட்டியது
துபாயில் பாகிஸ்தானுக்கு எதிராக முதலில் பேட் செய்து வரும் நியூசிலாந்து அணி 134 ரன்களை மட்டுமே 20 ஓவர்களில் எடுத்துள்ளது.
டி20 உலககோப்பை போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ஷார்ஜாவில் இன்று நடைபெற்று வரும் போட்டியில் பாகிஸ்தானும், நியூசிலாந்தும் நேருக்கு நேர் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர்அசாம் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதன்படி, பேட்டிங்கைத் தொடங்கிய நியூசிலாந்து அணிக்கு மார்டின் கப்திலும், டேரில் மிட்செல்லும் நிதானமான தொடக்கத்தை அளித்தனர்.
அணியின் ஸ்கோர் 36 ரன்களை எட்டியபோது அந்த அணியின் தொடக்கவீரர் கப்தில் 3 பவுண்டரிகளுடன் 17 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து கேப்டன் வில்லியம்சன் களமிறங்கினார். இருவரும் இணைந்து நிதானமாக ஆடினார். ஆனால், டேரில் மிட்செல் 1 பவுண்டரி 2 சிக்ஸருடன் 27 ரன்கள் எடுத்த நிலையில் இமாத்வாசிம் பந்தில் ஆட்டமிழந்தார். அவர் ஆட்டமிழந்த சிறிது நேரத்தில் ஜிம்மி நீஷமும் 1 ரன்னில் ஆட்டமிழந்தார்.
56 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்ததால் 4வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த வில்லியம்சனும், கான்வேவும் பொறுப்புடன் ஆடினர். அணியின் ஸ்கோர் 90 ரன்களை எட்டியபோது எதிர்பாராதவிதமாக கேப்டன் வில்லியம்சன் ரன் அவுட்டானார். அவர் ஆட்டமிழந்த சிறிது நேரத்தில் கான்வேவும் 24 பந்தில் 3 பவுண்டரிளுடன் 27 ரன்கள் எடுத்த நிலையில் ஹரிஷ் ராப் பந்தில் ஆட்டமிழந்தார்.
அடுத்த வந்த வீரர்கள் கிளென் பிலிப்ஸ் 13 ரன்னிலும், விக்கெட்கீப்பர் செய்பர்ட் 8 ரன்னிலும், சான்ட்னர் 6 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனால், ஒரு கட்டத்தில் 170 ரன்களை எட்டுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நியூசிலாந்து 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு134 ரன்களை மட்டுமே எடுத்தது. பாகிஸ்தான் அணியில் ஹரிஷ்ராப் சிறப்பாக பந்துவீசி 4 ஓவர்களில் 22 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இமாத்வாசிம், ஷாகின் அப்ரிடி, முகமது ஹபீஸ் தலா 1 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
தொடர்ந்து 135 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிவரும் பாகிஸ்தான் அணி 6.2 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 34 ரன்களை எடுத்து ஆடி வருகிறது. அந்த அணியின் கேப்டன் பாபர்அசாம் 9 ரன்னில் சவுதி பந்தில் போல்டாகி வெளியேறினார்.
மேலும் படிக்க : SA vs WI, Match Highlights: வெஸ்ட் இண்டீஸை 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று அசத்தியது தென்னாப்பிரிக்கா..
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்