BANG vs PNG, Match Highlights: உலககோப்பை சூப்பர் 12 சுற்றுக்கு முதல் அணியாக தகுதி பெற்றது வங்கதேசம்
ICC T20 WC 2021, BANG vs PNG: பப்புவா நியூ கினியா அணியை 84 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி உலககோப்பை சூப்பர் 12 சுற்று போட்டிக்கு முதல் அணியாக வங்கதேசம் தகுதி பெற்றுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அல் அமீரகத்தில் இன்று உலககோப்பை டி20 போட்டிகளுக்கான தகுதிப்போட்டியில் குரூப் பி பிரிவில் இடம்பெற்றுள்ள வங்காளதேசம் அணியும், பப்புவா நியூ கினியா அணியும் நேருக்கு நேர் மோதின. இதில் டாஸ் வென்ற வங்காளதேசம் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி, ஆட்டத்தை தொடங்கிய லிட்டன் தாஸ் முதல் ஓவரிலே டக் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார்.
இரண்டாவது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த லிட்டன் தாசும்- முன்னாள் கேப்டன் ஷகிப் அல் ஹசனும் அதிரடியில் இறங்கினர். குறிப்பாக ஷகிப் அல் ஹசன் 3 சிக்ஸர்களை பறக்கவிட்டார். அணியின் ஸ்கோர் 50 ரன்களை எட்டியபோது லிட்டன் தாஸ் 29 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய முஸ்தபிர் ரஹீம் 5 ரன்களில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார். இதையடுத்து, 4வது விக்கெட்டுக்கு களமிறங்கிய வங்கதேச கேப்டன் மஹமுதுல்லா இறங்கியது முதலே அதிரடியில் இறங்கினர். மறுமுனையில் அதிரடி காட்டிக்கொண்டிருந்த ஷகிப் அல் ஹசன் 37 பந்தில் 3 சிக்ஸருடன் 46 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அடுத்து களமிறங்கிய ஆபிப்ஹூசைனும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 28 பந்தில் 3 பவுண்டரி, 3 சிக்ஸருடன் அரைசதம் அடித்த நிலையில் கேப்டன் மஹமுதுல்லா வெளியேறினார். ஆபிப் ஹூசைன் 14 பந்தில் 3 பவுண்டரிகளுடன் 21 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். வங்காளதேச அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் குவித்தது. பப்புவா நியூ கினியா அணி 4 ஓவர்களில் 53 ரன்களை வாரி வழங்கினார்.
182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய பப்புவா நியூ கினியா அணி களமிறங்கியது முதல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த அணியின் தொடக்க வீரர் லேகா சிகா 5 ரன்களிலும், கேப்டன் ஆசாத் வாலா 6 ரன்களிலும், சார்லஸ் அமினி 1 ரன்களிலம், சசிபா 7 ரன்களிலும், சைமன் அடய் ரன் ஏதுமின்றியும் வெளியேறினர். 29 ரன்களுக்குள் பப்புவா நியூ கினியா அணி 7 விக்கெட்டுகளை இழந்தது.
அந்த அணியின் விக்கெட் கீப்பர் கிப்ளின் டோரிகா மட்டும் தனி ஆளாக போராடி அணியை கவுரவமான ஸ்கோரை எட்ட வைத்தார். பிற வீரர்கள் யாரும் அவருக்கு ஒத்துழைப்பு அளிக்காததால் அவரால் ஏதும் செய்ய இயலவில்லை. இறுதியில் பப்புவா நியூ கினியா அணி 19.3 ஓவர்கள் முடிவில் 97 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால், வங்காள தேச அணி 84 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் அவர்கள் குரூப் பி பிரவில் முதல் அணியாக சூப்பர் 12 சுற்றுக்கு வங்காளதேசம் அணி தகுதி பெற்றது.
50 ரன்களை கடக்குமா என்ற பரிதாப நிலையில் இருந்த பப்புவா நியூ கினியா அணியை 97 ரன்கள் வரை எட்டச்செய்த விக்கெட் கீப்பர் கிப்ளின் டோரிகா 34 பந்தில் 2 பவுண்டரி, 2 சிக்ஸருடன் 46 ரன்களை குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த தோல்வி மூலம் பப்புவா நியூ கினியா இந்த தொடரில் இருந்து வெளியேறியது. வங்காளதேச அணி சார்பில் முன்னாள் கேப்டன் ஹகிப் அல்ஹசன் அதிகபட்சமாக 9 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்