ICC Test Rankings: 6 ஆண்டுகளில் முதல் முறையாக டெஸ்ட் தரவரிசையில் பெரும் சரிவை சந்தித்த விராட் கோலி- காரணம் என்ன?
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி தற்போது மோசமான பேட்ட்டிங் ஃபார்மில் உள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து அணியுடனான 5வது டெஸ்ட் போட்டியில் நேற்று தோல்வி அடைந்தது. இந்த டெஸ்ட் போட்டிக்கு பிறகு ஐசிசி சர்வதேச டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஜோ ரூட் முதலிடம் பிடித்துள்ளார்.
இந்நிலையில் டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப்பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் 6 ஆண்டுகளுக்கு பிறகு மோசமான பின்னடைவை சந்தித்துள்ளார். விராட் கோலி 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் சர்வதேச டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசைப்பட்டியலில் டாப் -10 இடங்களுக்குள் இருந்து வந்துள்ளார். தற்போது 6 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக டாப் -10 இடத்திற்கு வெளியே விராட் கோலி தள்ளப்பட்டுள்ளார்.
விராட் கோலியின் மோசமான ஃபார்ம்:
விராட் கோலியின் இந்த பின்னடைவிற்கு முக்கிய காரணம் அவருடைய பேட்டிங் ஃபார்ம் தான். விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் சதம் அடித்து 956 நாட்களாகியுள்ளது. கடைசியாக இவர் கடைசியாக 2019ஆம் ஆண்டு ஈடன் கார்டனில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சதம் அடித்திருந்தார். அதன்பின்னர் விளையாடிய ஒரு டெஸ்ட் போட்டியில் கூட சதம் அடிக்கவில்லை.
கடைசி சர்வதேச சதத்திற்கு பின்பு கோலியின் செயல்பாடு:
போட்டிகள் | இன்னிங்ஸ் | ரன்கள் | சராசரி | அரைசதம் | டக் அவுட் | சதம் |
66 | 75 | 2509 | 36.89 | 24 | 8 | 0 |
அதேபோல் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளை பொருத்தவரை அதிலும் விராட் கோலி சமீபத்தில் சதம் அடிக்கவில்லை. கடைசியாக 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் போட்டியில் விராட் கோலி சதம் அடித்தார். அந்தப் போட்டியில் விராட் கோலி 114* ரன்கள் எடுத்தார். அதன்பின்னர் விராட் கோலி சர்வதேச ஒருநாள் போட்டிகளிலும் சதம் அடிக்கவில்லை.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்