ICC Mens T20I Team: 2022ம் ஆண்டின் ஐ.சி.சி.யின் சிறந்த டி20 அணி... கோலி, ஹர்திக், சூர்யாவுக்கு இடம்..! ரசிகர்கள் ஹாப்பி..!
ICC Mens T20I Team: 2022ஆம் ஆண்டுக்கான ஐசிசி டி20 ஆண்கள் அணியில் இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர்கள் விராட்கோலி, சூர்யகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் இடம் பிடித்து அசத்தியுள்ளனர்.
ICC Mens T20I Team: 2022ஆம் ஆண்டுக்கான ஐசிசி டி20 ஆண்கள் அணியில் இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர்கள் விராட்கோலி, சூர்யகுமார் யாதவ் மற்றும் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா ஆகியோர் இடம் பிடித்து அசத்தியுள்ளனர்.
2022ம் ஆண்டுக்கான சிறந்த டி20:
2022ஆம் ஆண்டுக்கான டி20 அணியை ஐசிசி வெளியிட்டுள்ளது. ஓவ்வொரு ஆண்டும் மிகச்சிறப்பாக சர்வதேச போட்டிகளில் விளையாடும் வீரர்களை தேர்ந்தெடுத்து ஐசிசி அந்த ஆண்டுக்கான அணி என வெளியிடும். இதில் மிகச்சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்திய வீரர்கள் இடம் பெறுவர். அவ்வகையில் இந்த ஆண்டுக்கான அணியை ஐசிசி வெளியிட்டுள்ளது. அதில், இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேன்கள் விராட் கோலி மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். மேலும், ஆல் - ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவும் இடம் பெற்றுள்ளார்.
விராட் கோலி
2022 ஆம் ஆண்டு விராட் கோலி மீண்டும் பழைய விராட் கோலியை அனைவருக்கும் நிரூபித்த ஆண்டு. அவர் ஆசிய கோப்பையில் இருந்து புயலாக மாறி, ஐந்து ஆட்டங்களில் 276 ரன்கள் எடுத்து இருந்தார். இது இந்த தொடரில் இரண்டாவது அதிக ரன்களை எடுத்தவர் என்ற சாதனைக்கும் சொந்தக்காரரானார். அவர் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக அடித்த மிரட்டலான சதத்தின் மூலம் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அவர் மீது வைக்கப்பட விமர்சனங்களையெல்லாம் முடிவுக்கு கொண்டு வந்தார்.
ஆசிய கோப்பைக்குப் பின்னர் மிகவும் ஆக்ரோஷமாக விளையாட் ஆர்ம்பித்த விராட்கோலி டி20 உலகக்கோப்பையில் மெல்போர்னில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் தனது மிகச்சிறந்த டி20 இன்னிங்ஸ்களில் ஒன்றாக விளையாடினார். அவர் அந்த போட்டியில் அடித்த சிக்ஸர் மிகச்சிறந்த் சிக்ஸர் என ஐசிசியால் அங்கீகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
The ICC Men's T20I Team of the Year 2022 is here 👀
— ICC (@ICC) January 23, 2023
Is your favourite player in the XI? #ICCAwards
சூர்யகுமார் யாதவ்
2022ஆம் ஆண்டு சூர்ய குமார் யாதவுக்கு சிறந்த ஆண்டு என்பதை விட டி20 போட்டி என்றாலே அவருக்கு சர்க்கரைப் பொங்கல் சாப்பிடுவதைப் போல ஆடினார் எனலாம். ஒரு காலண்டர் ஆண்டில் 1000 ரன்களுக்கு மேல் எடுத்த இரண்டாவது பேட்ஸ்மேன் எனும் பெருமையையும் அவர் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இரண்டு சதங்கள் மற்றும் ஒன்பது அரை சதங்கள் உட்பட 1164 ரன்களை அடித்த அதிகபட்ச ரன் எடுத்தவராகவும் MRF டயர்ஸ் ICC ஆடவர் T20I பிளேயர் தரவரிசையில் நம்பர்.1 பேட்ஸ்மேனாகவும் அந்த ஆண்டை முடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஹர்திக் பாண்டியா
2022 ஆம் ஆண்டில், ஹர்திக் பாண்டியா ஆல்-ரவுண்டராக இந்திய அணிக்கு, பேட்டின் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் சிறப்பாக விளையாடினார். மொத்தம் 607 ரன்களும் 20 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.
டி20 உலகக் கோப்பையில் அரையிறுதியில் இங்கிலாந்துக்கு எதிராக 33 பந்துகளில் 63 ரன்கள் எடுத்து இந்தியா சிறந்த ஸ்கோரை எட்ட உதவினார். ஆனாலும் இந்த போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது.
ஐசிசி டி20 ஆண்கள் அணி:
ஜோஸ் பட்லர் (c/wk), முகமது ரிஸ்வான், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், கிளென் பிலிப்ஸ், சிக்கந்தர் ராசா, ஹர்திக் பாண்டியா, சாம் கர்ரன், வனிந்து ஹசரங்கா, ஹாரிஸ் ரவுஃப் மற்றும் ஜோஷ் லிட்டில்.