ICC Cricket World Cup Aus vs Pak: அதிரடி சரவெடி! பாகிஸ்தானை பந்தாடிய வார்னர் மற்றும் மிட்செல் மார்ஷ்!
ஆஸ்திரேலிய வீரர்கள் டேவிட் வார்னர் மற்றும் மிட்செல் மார்ஷ் ஆகியோர் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அதிரடியாக சதம் விளாசினர்.
உலகக் கோப்பை தொடர் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. அதன்படி, இன்று (அக்டோபர் 20) நடைபெறும் 18 வது லீக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன.
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் ஆஸ்திரேலிய வீரர்கள் இரண்டு பேர் சதம் அடித்துள்ளனர்.
சிக்ஸர் மழை பொழிந்த வார்னர் மற்றும் மிட்செல்:
முன்னதாக, டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர் மற்றும் மிட்செல் மார்ஷ் ஆகியோர் களமிறங்கினர்.
சிக்ஸர் மழை:
பாகிஸ்தான் அணியின் பந்துகளை இருவரும் இணைந்து பறக்க விட்டனர். இவர்களின் பார்ட்னர்ஷிப்பை பிரிப்பதற்கு பாகிஸ்தான் அணிக்கு 33.5 ஓவர்கள் தேவைப்பட்டது. 259 ரன்கள் வரை டேவிட் வார்னர் மற்றும் மிட்செல் மார்ஷ் பார்ட்னர்ஷிப் அமைத்தது. இதில், 124 பந்துகள் களத்தில் நின்ற டேவிட் வார்னர் ரசிகர்களுக்கு வான வேடிக்கை காட்டினார் என்று தான் சொல்ல வேண்டும்.
அந்த அளவிற்கு அவர் பாகிஸ்தான் அணி வீரர்களின் பந்துகளை சிக்ஸர் மழை பொழிய வைத்தார். அதன்படி, மொத்தம் 9 சிக்ஸர்களை பறக்க விட்ட அவர் 14 பவுண்டரிகளுடன் மொத்தம் 163 ரன்களை குவித்தார். மறுபுறம் மிட்செல் மார்ஷ் தன்னுடைய அதிரடியை வெளிபடுத்தினார். அவரும் 9 சிக்ஸர்களை பறக்கவிட்டார். மொத்தம் 108 ரன்கள் களத்தில் நின்ற அவர் 10 பவுண்டரிகள் உட்பட மொத்தம் 121 ரன்களை குவித்தார்.
இது இந்த உலகக்கோப்பைத் தொடரில் பார்ட்னர்ஷிப் அமைத்து தொடக்க ஆட்டக்காரர்கள் அடித்த அதிக ரன்களாக பார்க்கப்படுகிறது.
திணறிய பாகிஸ்தான்:
மிட்ச்செல் மார்ஷ் விக்கெட்டை எடுக்க முடியாமல் திணறிய பாகிஸ்தான் அணி 33 வது ஓவரில் தான் அவரை அவுட் ஆக்கியது. அதேபோல், டேவிட் வார்னர் 42 வது ஓவர் வரை களத்தில் நின்றார். அவர் விக்கெட் இழந்த போது ஆஸ்திரேலிய அணியின் ரன் 325 ஆக இருந்தது.
அதனை அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி வீரகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க தற்போது 50 ஓவர்கள் முடிவில் 367 ரன்களை எடுத்துள்ளது.
மேலும் படிக்க: PAK vs AUS: பெங்களூருவில் ஆதிக்கம் செலுத்துமா ஆஸ்திரேலியா? பந்தாடுமா பாகிஸ்தான்..? இன்றைய உலகக்கோப்பை போட்டி!
மேலும் படிக்க: AUS vs PAK ODIs Stats: அதிக ரன்னில் பாண்டிங், விக்கெட்டில் அக்ரம் முதலிடம்.. ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் டாப் 10 லிஸ்ட்!