ICC Champions Trophy : பாகிஸ்தான் பெயரை போட முடியாது! விளையாட்டிலும் அரசியலா? பிசிசிஐ கிளப்பிய புதிய சர்ச்சை..
ICC Champions Trophy : ஐசிசியின் விதிகளின்படி போட்டியை நடத்தும் நாட்டின் பெயரை ஜெர்சியில் இட வேண்டும் ஆனால் அவ்வாறு போட பிசிசிஐ மறுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்னதாக பிசிசிஐ ஐசிசியிடம் புதிய கோரிக்கையை வைத்துள்ளது .
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி:
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் வருகிற பிப்ரவரி 19 ஆம் தேதி தொடங்கி நடைப்பெறவுள்ளது. முன்னதாக இந்த தொடரை ஹைபிரிட் மாடல் முறையில் நடத்த வேண்டும் என்று இந்தியாவின் போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தது. இதை கோரிக்கைகளை ஐசிசி ஏற்றுக்கொண்டது. பாதுக்காப்பு குறைப்பாடு இருப்பதாக கூறி பிசிசிஐ இந்த கோரிக்கையை வைத்திருந்தது.
ஜெர்சியில் பாக்.. பெயர் வேண்டாம்?
இந்த நிலையில் இந்திய அணி தாங்கள் அணியும் ஜெர்சியில் தொடரை நடத்தும் நாடான பாகிஸ்தானின் பெயரை அச்சிடப்போவதில்லை என்று கூறியதாக தகவல் வெளியானது. இது குறித்து பேசிய பாக் கிரிக்கெட் வாரிய அதிகாரி ஒருவர்.. ”பிசிசிஐ விளையாட்டில் அரசியல் செய்கிறது, இது விளையாட்டிற்கு நல்லதல்ல, இந்திய அணி பாகிஸ்தானுக்கு வர மறுத்துவிட்டனர், தற்போது கோப்பை அறிமுக விழாவில் அவர்களது கேப்டன் ரோகித சர்மாவும் கலந்துக்கொள்ள மாட்டார் என்று கூறப்படுகிறது. ஜெர்சியில் பாகிஸ்தான் என்று போட அவர்கள் விரும்பவில்லை என்று கூறியுள்ளனர். இந்த விஷயத்தில் ஐசிசி பாகிஸ்தானுக்கு ஆதரவாக நல்ல முடிவை எடுக்கும் என்று நம்புகிறேன் என்றார்.
ஐசிசியின் விதிகளின்படி போட்டியை நடத்தும் நாட்டின் பெயரை ஜெர்சியில் இட வேண்டும், அவர் செய்யாமல போனால் அது விதிமீறல் ஆகும், ஒரு வேளை இந்தியா இவ்வாறு செய்யாமல் போனால் இந்திய அணி மீது ஐசிசி கடுமையான நடவடிக்கை எடுக்க நேரிடும் என்று தெரிகிறது.
இதையும் படிங்க: IND vs ENG 1st T2O: முதல் டி20! இங்கிலாந்தை பொளக்குமா இந்தியா? சூர்யா படையை சுளுக்கு எடுப்பார்களா பட்லர் பாய்ஸ்?
துபாய்க்கு மாற்றம்!
இதற்கிடையில் கோப்பை அறிமுக விழா மற்றும் கேப்டன்களின் செய்தியாளர் சந்திப்பை துபாய்க்கு மாற்ற பிசிசிஐ சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசியிடம் புதிதாக கோரிக்கை ஒன்றையும் கோரிக்கை வைத்திருக்கிறது என்று தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

