Video : நானும் ஒரு 'டீ' லவ்வர்தான்… 'நோ' சொல்றது கஷ்டம்… தேநீர் மீதான காதலை வெளிப்படுத்திய தோனி!
டீ சாப்புட்றீங்களான்னு கேட்டா கண்டிப்பா 'நோ' சொல்றது ரொம்ப கஷ்டம். இப்போ என்கிட்ட ஏதோ குளோப் ஜாமுன், ஜிலேபி ஏதாவது வேணுமான்னு கேட்டா ரொம்ப ஈஸியா 'நோ.. நோ… வேண்டாம்' ன்னு சொல்லிடுவேன்.
இந்திய கிரிக்கெட் அணிக்கு பல கோப்பைகளை வென்று தந்த நாயகன், ஒரு சிறந்த கேப்டனாக இன்றுவரை அறியப்படும் ஒருவர்தான் மகேந்திர சிங் தோனி. இவருக்கு உலக அளவில் பல ரசிகர்கள் இருந்தாலும் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அதற்கு முழு காரணம் ஐபிஎல் தான். சென்னை சூப்பர் கிங்ஸ் என்னும் அணியை உலக அளவில் பிரபலமடைய செய்தது தோனிதான். மேலும் இந்திய அணிக்காக டி20 மற்றும் ஒருநாள் உலகக்கோப்பை இரண்டையும் வாங்கி கொடுத்த ஒரே கேப்டன் என்ற பெருமையையும் கொண்டுள்ளார். அவரது தலைமையில் இந்திய அணி சாம்பியன்ஸ் ட்ராஃபி உள்ளிட்ட பல கோப்பைகளை குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஒரு ஜாம்பவான் கேப்டனாக வலம் வந்த தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விவசாயம், குடும்பம், என்று நிம்மதியான வாழ்வை வாழ்ந்து வருகிறார். மீண்டும் ஐபிஎல்-லுக்காக ப்ராக்டிஸ் செஷனில் இறங்கியுள்ள அவரது பேட்டியில் இருந்து ஒரு க்ளிப்பிங் சமீபத்தில் வைரலாகி வருகிறது.
'டீ' லவ்வர் தோனி
எங்காவது வெளியில் செல்லும்போது, வெளிநாடுகளுக்கு செல்லும்போது இந்தியாவின் எந்த விஷயம் உங்களுக்கு இப்போது அது கண்டிப்பாக வேண்டும் என்று தோன்ற வைக்கும் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, தோனி, "ரொம்ப பெரிய விஷயம் ஒன்னும் இல்ல. டீ தான். ஏன்னா அந்த டீ, சர்க்கரையோட… கண்டிப்பா நான் விரும்புற விஷயம். மேலும் நான் ஒரு பழைய ஆள் என்பதாலும், அதனை எப்போதும் குடித்து வளர்ந்திருக்கிறேன். ப்ராக்டிஸ்க்கு முன்னாடி டீ குடிக்கலாம், ப்ராக்டிஸ் முடிஞ்சு டீ குடிக்கலாம்ன்னு எப்போவும் டீ குடிக்க தோனிட்டே இருக்கும். ஆமாம், டீ கண்டிப்பா நம் மனதிற்கு நெருக்கமான ஒன்று, ஒருவேளை நாம் அப்படிப்பட்டா தலைமுறையில் இருந்து வந்ததாலோ என்னவோ… டீ மீது அவ்வளவு பிரியம்", என்றார்.
'டீ' நோ சொல்றது கஷ்டம்
மேலும் அதுவே பல இடங்களில் சங்கடத்தை ஏற்படுத்தும் என்று கூறிய அவர், "அதுவே சங்கடமான சூழலையும் தரும். எங்காவது போனாலோ, ஸ்டேடியம் போகும்போதோ, ஜிம் போகும்போதோ, டீ சாப்புட்றீங்களான்னு கேட்டா கண்டிப்பா 'நோ' சொல்றது ரொம்ப கஷ்டம். இப்போ என் கிட்ட ஏதோ குளோப் ஜாமுன், ஜிலேபி ஏதாவது வேணுமான்னு கேட்டா ரொம்ப ஈஸியா 'நோ.. நோ… வேண்டாம்' ன்னு சொல்லிடுவேன். ஆனா டீ வேணுமான்னு கேட்டா, 'நல்லது, கொடுங்க…'ன்னு தான் சொல்லுவேன்", என்று கூறினார்.
View this post on Instagram
ஐபிஎல் 2023
இந்நிலையில், ஐபிஎல் போட்டிக்கு தயாராகும் நோக்கில் சிஎஸ்கே பயிற்சி குழுவில் இணைந்துள்ள தோனி, சென்னையில் இருக்கிறார். எம்ஆர்சி நகரில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்கி இருக்கும் அவர் தினமும் சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். அவரது கேப்டன்சியில் இதுவரை 4 முறை கோப்பையை வென்ற அணி, ஐபிஎல் அணிகளிலேயே அதிக வெற்றி சதவிகிதத்தை பதிவு செய்துள்ளது. மேலும் 11 முறை பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்து அதிக முறை பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்த அணி என்ற பெருமையையும் கொண்டுள்ளது. அதோடு 7 முறை இறுதிபோட்டிக்கு சென்ற சாதனையும் படைத்துள்ளது. இம்முறை பெரும்பாலும் அவர் ஆடும் கடைசி ஐபிஎல் ஆக இருக்கும் என்பதால் அவர் சென்னையில் ஆடுவதை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். அதோடு கோப்பையையும் வெல்ல வேண்டும் என்று பலரும் இப்போதே ஐபிஎல்-லுக்காக இப்போதே காத்திருக்க துவங்கி விட்டனர்.