Glenn Maxwell Century: கிளென் மேக்ஸ்வெல் அதிரடி சதம்... வெற்றி பாதையில் ஆஸ்திரேலியா!
அதிரடி சதம் அடித்த கிளென் மேக்ஸ்வெல்.
![Glenn Maxwell Century: கிளென் மேக்ஸ்வெல் அதிரடி சதம்... வெற்றி பாதையில் ஆஸ்திரேலியா! Glenn Maxwell action century... Australia on the way to victory! Glenn Maxwell Century: கிளென் மேக்ஸ்வெல் அதிரடி சதம்... வெற்றி பாதையில் ஆஸ்திரேலியா!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/07/48a8facc98ddf2e91967fdd22cb4a0191699374021551739_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ஐசிசி உலகக் கோப்பை தொடரின் 39 வது லீக் போட்டி இன்று (நவம்பர் 7) நடைபெற்று வருகிறது. அதன்படி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்டு விளையாடி வருகிறது ஆப்கானிஸ்தான் அணி.
முன்னதாக டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக ரஹ்மானுல்லா குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் சத்ரான் ஆகியோர் களமிறங்கினர். இதில், 25 பந்துகள் களத்தில் நின்ற ரஹ்மானுல்லா குர்பாஸ் 21 ரன்கள் எடுத்து ஜோஷ் ஹேசில்வுட் பந்தில் விக்கெட்டை இழந்து நடையைக் கட்டினார்.
மறுபுறம் தன்னுடைய அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் இப்ராஹிம் சத்ரான். கடைசி வரை களத்தில் நின்ற அவர் 143 பந்துகளில் 8 பவுண்டரிகள் 3 சிக்ஸர்கள் உட்பட மொத்தம் 129 ரன்களை குவித்தார். அதன்படி, இந்த உலகக் கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் வீரர் அடித்த முதல் சதமாக இது பதிவானது.
இதனிடையே, ரஹ்மானுல்லா குர்பாஸ் விக்கெட் இழந்த பின்னர் களமிறங்கிய ரஹ்மத் ஷா 30 ரன்கள் எடுத்தார். அடுத்ததாக களமிறங்கிய அந்த அணியின் கேப்டன் ஹஷ்மத்துல்லா ஷாஹிதி 26 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த வீரர்கள் கணிசமான ரன்களை எடுக்க 45 ஓவர்கள் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 233 ரன்கள் எடுத்தது.
அப்போது களமிறங்கிய ரசித்கான் இப்ராஹிமுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து அதிரடி ஆட்டம் ஆடினார். அதன்படி, 18 பந்துகளில் 2 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் என 35 ரன்கள் அடித்தார். இவ்வாறாக 50 ஓவர்கள் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 291 ரன்களை குவித்தது.
தடுமாறிய ஆஸ்திரேலியா:
பின்னர் 292 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது ஆஸ்திரேலிய அணி. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோர் களமிறங்கினார்கள். இதில், டிராவிஸ் ஹெட்ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
மறுபுறம் டேவிட் வார்னர் 29 பந்துகள் களத்தில் நின்று 3 பவுண்டரிகள் உட்பட 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மிட்ச்சல் மார்ஸ் 24 ரன்களும் மார்னஸ் லாபுசாக்னே 14 ரன்களும் ஆட்டமிழக்க ஜோஷ் இங்கிலிஸ் டக் அவுட் ஆகி வெளியேறினார். இவ்வாறாக 10 ஓவர்கள் முடிவதற்குள் ஆஸ்திரேலிய அணி 49 ரன்கள் மட்டுமே எடுத்து 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
மீட்ட மேக்ஸ்வெல்:
பின்னர், வந்த கிளென் மேக்ஸ்வெல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தவித்த ஆஸ்திரேலிய அணியை மீட்டார். அதன்படி, தொடக்கத்தில் நிதானமாக விளையாடிய அவர் பின்னர், தன்னுடைய அதிர ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 19 வது ஓவருக்கு பிறகு ஆப்கானிஸ்தான் அணியினர் விக்கெட் எடுக்க முடியாமல் திணற ஆரம்பித்தனர். இந்த சூழலை பயன்படுத்திக்கொண்ட கிளென் மேக்ஸ்வெல் 76 பந்துகளில் 100 ரன்களை தொட்டார். தற்போது ஆஸ்திரேலிய அணி வெற்றி பாதையை நோக்கி விளையாடி வருகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)