மேலும் அறிய
Gautam Gambhir: கம்பீர் Era-வில் கண்டமாகும் இந்திய அணி! சல்லி சல்லியாக உடைந்த பெருமைகள்
Ind vs Aus: இந்திய அணிக்கு கவுதம் கம்பீர் பயிற்சியாளராக வந்ததில் இருந்து இந்திய அணி பல மோசமான தோல்விகளுக்கு சொந்தாமாகியுள்ளது.

கவுதம் கம்பீர்
Source : PTI
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதன் மூலம் கம்பீர் பயிற்சியின் கீழ் இந்திய அணிக்கு மற்றொரு மோசமான சாதனை கிடைத்துள்ளது.
இந்திய அணி 126:
இந்த போட்டியில் டாசில் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்து வீசுவதாக அறிவித்தது. இதன்படி களமிறங்கிய இந்திய அணியில் அபிஷேக் சர்மா மற்றும் கில் களமிறங்கினர். கில் 5 ரன்னுக்கு நடையைக்கட்ட, அடுத்து வந்த வீரர்களும் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேற 49/5 என்று தடுமாறியது
இதன்பின் ஹர்ஷித் ராணாவும் அபிஷேக் சர்மாவும் ஓரளவு சரிவிலிருந்து மீட்டனர், ராணா 35 ரன்களுக்கு வெளியேறினார். அபிஷேக் 65 ரன்னுக்கு ஆட்டமிழக்க இந்திய அணி 125 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
ஆஸி அணி வெற்றி:
126 ரன்கள் தேவை என்கிற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுகளை இழந்தாலும் 13.2 ஓவர்களில் வெற்றி இலக்கை அடைந்தது. கேப்டன் மார்ஷ் 46 ரன்களும் அடித்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். இந்திய அணி தரப்பில் பும்ரா, வருண், குல்தீப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.
5 ஆண்டுகளுக்கு பிறகு வெற்றி:
ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியா தனது சொந்த மண்ணில் இந்தியாவை ஒரு டி20 போட்டியில் தோற்கடிப்பது இதுவே முதல் முறை. ஆஸ்திரேலியா கடைசியாக 2020 டிசம்பரில் சிட்னியில் இந்தியாவை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்தது. இது இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலியாவின் 12வது வெற்றியாகும்.
கம்பீரின் மோசமான சாதனைகள்:
இந்திய அணிக்கு கவுதம் கம்பீர் பயிற்சியாளராக வந்ததில் இருந்து இந்திய அணி பல மோசமான தோல்விகளுக்கு சொந்தாமாகியுள்ளது.
2024 ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக நடந்த ஒரு நாள் தொடரை 2-0 என்று இழந்தது, 27 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கைக்கு எதிரான தொடரை இழந்த மோசமான சாதனையுடன் தனது பயிற்சியாளர் பயணத்தை கம்பீர் தொடங்கினார்.
- அடுத்தப்படியாக நியூசிலாந்து எதிராக சொந்த மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரில் 0-3 என்று முதல் முறையாக ஒயிட் வாஷ் ஆனது. மேலும் 12 ஆண்டுகளுக்கு பின்னர் உள்ளூரில் டெஸ்ட் தொடரையும் இந்திய அணி இழந்தது.
- ஆஸ்திரேலியாவில் நடந்த பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரை 4-1 என்று இந்திய அணி இழந்தது. 11 ஆண்டுகளாக கையில் இருந்த பார்டர் கவாஸ்கர் கோப்பையை ஆஸ்திரேலியாவிடன் இந்திய அணி பறிக்கொடுத்தது.
- அதன் பின் சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடிலெய்டு மைதானத்தில் நடந்த ஒரு நாள் போட்டியில் தோல்வி அடைந்தது. இதற்கு முன் இந்திய அணி கடைசியாக 2008 பிப்ரவரியில் ஆஸ்திரேலியாவிடம் 50 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. இதன் மூலம் 17 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணி அடிலெய்ட் தோல்வி அடைந்தது.
- இன்று(அக்டோபர் 31) நடந்த இரண்டாவது டி20 போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலம் 17 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணி மெல்போர்ன் மைதானத்தில் தோல்வியை சந்தித்துள்ளது.
இது மட்டும் இல்லாமல் கம்பீர் பயிற்சியாளராக வந்ததிலிருந்து வீரர்களை தேர்வு செய்வது, சரியாக வாய்ப்பு தராமல் இருப்பது என பல்வேறு சர்ச்சைகள் இந்திய அணியை சுற்றி இருந்து வருகிறது.
சமீபத்திய விளையாட்டு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் விளையாட்டு செய்திகளைத் (Tamil Sports News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
கிரிக்கெட்
Advertisement
Advertisement





















