Rahul Dravid: பயிற்சியாளர் ஆயிட்டீங்க..கொஞ்சமாவது சிரிங்க! கம்பீருக்கு டிராவிட் வைத்த கோரிக்கை
இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ராகுல் ட்ராவிட் கம்பீரை வாழ்த்தி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்தியா - இலங்கை:
இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. அந்தவகையில் இன்று(ஜூலை 27) முதல் டி20 போட்டி நடைபெற்று வருகிறது. முன்னதாக இந்திய அணியின் பயிற்சியாளராக கெளதம் கம்பீர் பொறுப்பேற்ற பின் நடைபெற்று வரும் முதல் போட்டி இது என்பதால் அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்நிலையில் தான் இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ராகுல் ட்ராவிட் கம்பீரை வாழ்த்தி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், "ஹலோ கௌதம். இந்திய அணியின் பயிற்சியாளராக நமது உலகின் அற்புதமான பணிக்கு உங்களை வரவேற்கிறோம்.
அதிர்ஷ்டம் வேண்டும்:
பார்படாஸ் மற்றும் மும்பையில் என் வாழ்க்கையில் மறக்கவே முடியாத சம்பவங்கள் அமைந்தது. எனது கனவுகளுக்கு அப்பாற்பட்ட வகையில் இந்திய அணியுடன் எனது பணியை முடித்து 3 வாரங்கள் ஆகின்றன. எல்லாவற்றிக்கும் மேலாக இந்திய அணியுடன் என் காலத்தில் நான் செய்த நினைவுகளையும் நட்பையும் பொக்கிஷமாக வைத்திருப்பேன்.
இந்திய அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்கும் உங்களுக்கும் அதையே சொல்கிறேன். உங்களுக்கு முழுவதுமாக ஃபிட்டாக உள்ள வீரர்கள் அனைத்து அணிகளிலும் கிடைப்பார்கள் என்று நான் நம்புகிறேன். அதற்காக வாழ்த்துகிறேன். உங்களுக்கு கொஞ்சம் அதிர்ஷ்டம் கிடைக்க வேண்டும் என்று நான் வாழ்த்துகிறேன். இந்திய கிரிக்கெட்டைப் பற்றி நீங்கள் எந்தளவுக்கு அர்ப்பணிப்பு மற்றும் ஆர்வத்தை கொண்டவர் என்பதை நான் அறிவேன்"என்று கூறியுள்ளார்.
சிரித்து விடுங்கள்:
தொடர்ந்து பேசிய அவர், "இந்த வேலையில் நீங்கள் அனைத்து தரத்தையும் கொண்டு வருவீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். ஒரு பயிற்சியாளராக மற்றொரு பயிற்சியாளரான உங்களுக்கு ஒரு கடைசி விஷயத்தை சொல்கிறேன். அனல்பறக்கும் சூடான நேரங்களில் மூச்சை வெளியேவிடுங்கள். அதுபோன்ற நேரங்களில் கொஞ்சம் கடினமாக இருந்தாலும் ஒருபடி, பின்வாங்கி சிரித்துவிடுங்கள்.
வேறு என்ன நடந்தாலும் அது மக்களை ஆச்சரியமடைய வைக்கும் நீங்கள் சிறந்து விளங்க வாழ்த்துகிறேன். நீங்கள் இந்திய அணியை இன்னும் பெரிய உயரத்திற்கு கொண்டு செல்வீர்கள் என்று நான் நம்புகிறேன்” என்று கூறியுள்ளார்.