மேலும் அறிய

Harbhajan Birthday: ’சிங் இஸ் கிங்’-ஹர்பஜன் சிங் படைத்த 3 முக்கிய சாதனைகள்.. பிறந்தநாள் ரீவைண்ட் !

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் இன்று தன்னுடைய 42வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

இந்திய கிரிக்கெட் அணியின் சிறப்பான சுழற்பந்துவீச்சாளர்களில் ஒருவர் ஹர்பஜன் சிங். இவர் இந்திய அணியில் 1998ஆம் ஆண்டு முதல் முறையாக களமிறங்கினார். 23 ஆண்டுகள் தன்னுடைய கிரிக்கெட் பயணத்தில் அவர் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். இன்று ஹர்பஜன் சிங் தன்னுடைய 42வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 

இந்நிலையில் ஹர்பஜன் சிங் படைத்த 3 சிறப்பான ரெக்கார்டுகள் என்னென்ன?

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஹாட்ரிக் எடுத்த முதல் இந்தியர்:

 டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணிக்காக ஹாட்ரிக விக்கெட் வீழ்த்திய முதல் வீரர் ஹர்பஜன் சிங் தான். இவர் 2001ஆம் ஆண்டு கொல்கத்தாவில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய அணி களமிறங்கியது. அந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் சிறப்பாக பந்துவீசிய ஹர்பஜன் சிங் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அசத்தினார். கில்கிறிஸ்ட், பாண்டிங் மற்றும் வார்ன் ஆகிய மூவரும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க செய்து இந்த ஹாட்ரிக் சாதனையை படைத்தார். 

400 விக்கெட் வீழ்த்திய முதல் இந்திய ஆஃப் ஸ்பின்னர்:

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஹர்பஜன் சிங் ஒரு அசைக்க முடியாத பந்துவீச்சாளராக இருந்தார். இவர்  2011ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 400 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். அப்போது டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 400 விக்கெட் வீழ்த்திய முதல் இந்திய ஆஃப் ஸ்பின்னர் என்ற சாதனையை படைத்தார். அவருக்கு பின்பு ரவிச்சந்திரன் அஸ்வின் தற்போது 400 விக்கெட்களை கடந்து அசத்தியுள்ளார்.


Harbhajan Birthday: ’சிங் இஸ் கிங்’-ஹர்பஜன் சிங் படைத்த 3 முக்கிய சாதனைகள்.. பிறந்தநாள் ரீவைண்ட் !

ஒரு டி20 போட்டியில் 2 மெய்டன் வீசிய முதல் இந்தியர்:

2012ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் ஹர்பஜன் சிங் பங்கேற்றார். அந்தத் தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்தப் போட்டியில் இவர் இரண்டு மெய்டன் ஓவர்கள் வீசி அசத்தினார். அத்துடன் 12 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார். இதன்மூலம் ஒரே டி20 போட்டியில் 2 மெய்டன் ஓவர்கள் வீசிய முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்திருந்தார். அவருக்கு பின்னர் புவனேஸ்வர் குமார், பும்ரா உள்ளிட்ட வீரர்கள் இந்தச் சாதனைப் படைத்திருந்தனர். 

கிட்டத்தட்ட 23 ஆண்டுகள் இந்திய அணியில் விளையாடிய ஹர்பஜன் சிங் 103 டெஸ்ட் போட்டிகள், 236 ஒருநாள் போட்டிகள் மற்றும் 28 டி20 போட்டிகளில் பங்கேற்றுள்ளார். அதில் டெஸ்டில் 417 விக்கெட்களையும், ஒருநாள் போட்டியில் 269 விக்கெட்களையும் மற்றும் டி20 போட்டிகளில் 25 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார். இவர் கடந்த டிசம்பர் மாதம் தன்னுடைய ஓய்வை அறிவித்தார். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்தியர்கள் வரிசையில் ஹர்பஜன் சிங் நான்காவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. கிரிக்கெட் ஓய்விற்கு பின்பு ஹர்பஜன் சிங் தற்போது மாநிலங்களவை எம்பியாக அடுத்த ஆட்டத்தை தொடங்கியுள்ளார். 42வது பிறந்தநாள் கொண்டாடும் அவருக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவிப்போம். 

தலைப்பு செய்திகள்

Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Asia Cup 2027: ஆசிய கோப்பை அட்டவணை - வங்கதேசத்தில் பவுன்சர் பிட்ச்கள் -இந்தியா பயணிக்குமா?
ஆசிய கோப்பை 2027 அட்டவணை - வங்கதேசத்தில் பவுன்சர் பிட்ச்கள் -இந்தியா பயணிக்குமா?
உள்நாட்டு கிரிக்கெட்டில் அதிரடி மாற்றம்: புதுச்சேரி அணியில் களம் இறங்கும் பஞ்சாப் கிங்ஸ் துணை கேப்டன்!
உள்நாட்டு கிரிக்கெட்டில் அதிரடி மாற்றம்: புதுச்சேரி அணியில் களம் இறங்கும் பஞ்சாப் கிங்ஸ் துணை கேப்டன்!
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Maruti Fronx on Discount: செம ஸ்டைலான ஃபிராங்க்ஸ் கார வாங்குற பிளான் இருந்தா உடனே கிளம்புங்க.! அட்டகாச ஆஃபரை அறிவித்த மாருதி
செம ஸ்டைலான ஃபிராங்க்ஸ் கார வாங்குற பிளான் இருந்தா உடனே கிளம்புங்க.! அட்டகாச ஆஃபரை அறிவித்த மாருதி
Alto K10 Price: நடுத்தர மக்களின் செல்லப்பிள்ளை.! லிட்டருக்கு 33 கிமீ மைலேஜ்.! ஆல்டோ K10-ன் விலை இவ்வளவு தானா.?!
நடுத்தர மக்களின் செல்லப்பிள்ளை.! லிட்டருக்கு 33 கிமீ மைலேஜ்.! ஆல்டோ K10-ன் விலை இவ்வளவு தானா.?!
TVK Kanimozhi: ”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
Embed widget