Watch Video: நீள முடி, கட்டுமஸ்தான பாடி.. பழைய தோற்றத்தில் டென்னிஸ் விளையாடிய தோனி.. வைரலாகும் வீடியோ!
சர்வதேச கிரிக்கெட்டிற்கு குட் பை சொன்னாலும் மகேந்திர சிங் தோனி மீதான காதலை ரசிகர்கள் இன்றளவும் எங்கேயும் விட்டு கொடுத்தது இல்லை.
’கிரிக்கெட்டின் கடவுள்’ என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்ததாக இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஃபேவரைட் இருப்பவர் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனிதான். எப்படியான சூழ்நிலையில், தோல்வியை சந்தித்தாலும் கூலாக கையாள்வதுதான் இவரது மிகப்பெரிய பலம். கடைசி கட்டத்தில் ஜெயிக்க முடியாத போட்டிகளில் கூட ஜெயிக்க வைத்ததால் தோனி “கேப்டன் கூல்” என்றே அழைக்கப்படுகிறார்.
யாரும் எதிர்பார்க்காத வகையில் மகேந்திர சிங் தோனி கடந்த 2015ம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். இதனைத் தொடர்ந்து 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாகவும் அறிவித்தார். டி20 போட்டிகளில் இருந்தும் 2019 ஆம் ஆண்டு விலகினார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வுபெற்று கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் ஆகிவிட்டது. இருப்பினும், தற்போது வரை ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தலைமை தாங்கி விளையாடி வருகிறார்.
சர்வதேச கிரிக்கெட்டிற்கு குட் பை சொன்னாலும் மகேந்திர சிங் தோனி மீதான காதலை ரசிகர்கள் இன்றளவும் எங்கேயும் விட்டு கொடுத்தது இல்லை. ஐபிஎல் போட்டிகளில் தோனி விளையாடும் ஸ்டேடியங்களில் அவரது ரசிகர்கள் குவிந்து ஆதரவு அளித்து மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்துகின்றனர். இதன்மூலம், உலகின் அதிக ரசிகர்களை கொண்ட கிரிக்கெட் வீரர்களில் மகேந்திர சிங் தோனியும் ஒருவர் என்று நிரூபணம் ஆகிறது. இந்தநிலையில், தோனியின் புகைப்படம் மற்றும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சமூக வலைதளங்களில் வைரலான வீடியோவில் மகேந்திர சிங் தோனி, பழைய மாதிரியான நீளமான முடியுடன் டென்னிஸ் விளையாடினார்.
MS Dhoni playing tennis 🎾 pic.twitter.com/UzsqqWE2F0
— Johns. (@CricCrazyJohns) February 4, 2024
நீள முடியுடன் தோனி:
இத வைரலான வீடியோவி, டென்னிஸ் மைதானத்தில் தோனி, சிறப்பாக விளையாடினார். இதன்மூலம், மகேந்திர சிங் தோனி சிறந்த உடற்தகுதியுடன் இருக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது. இந்த வீடியோவின் கீழ் தங்களுக்கு பிடித்த வீரரை பழைய தோற்றத்தில் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
Dhoni looks in perfect shape 😍🔥@MSDhoni #MSDhoni #WhistlePodu pic.twitter.com/kxY20TkenA
— DHONIsm™ ❤️ (@DHONIism) February 3, 2024
கடந்த ஆண்டு சாம்பியன் பட்டம்:
மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கடந்த ஆண்டு ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. மகேந்திர சிங் தோனியின் தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 முறை ஐபிஎல் சாம்பியனாகவும், சாம்பியன்ஸ் லீக் பட்டத்தை வென்றுள்ளது. மகேந்திர சிங் தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் தவிர ஐபிஎல் தொடரில் ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார்.
வெற்றிக்கு பிறகு பேசிய மகேந்திர சிங் தோனி, “ஐபிஎல் 2024 சீசனில் தான் விளையாடுவேன். ஓய்வு அறிவிக்க இன்னும் நேரம் உள்ளது.” என்று தெரிவித்திருந்தார்.