Instagram: இன்ஸ்டாவில் அதிக ஃபாலோவர்கள் கொண்ட 2-ஆவது கிரிக்கெட் வீரர் இவர்தான்!
சமூக வலைதளங்களில் இளம் சமுதாயத்தினரால் மிகவும் விரும்பப்படும் ஒன்றாக இன்ஸ்டாகிராம் திகழ்கிறது. இதில் பிரபலங்களும் அக்கவுண்ட் வைத்துள்ளனர்.
சமூக வலைதளங்களில் இளம் சமுதாயத்தினரால் மிகவும் விரும்பப்படும் ஒன்றாக இன்ஸ்டாகிராம் திகழ்கிறது. இதில் பிரபலங்களும் அக்கவுண்ட் வைத்துள்ளனர்.
அவர்களின் சிந்தனைகளையும், அவர்களின் நடவடிக்கைகளையும் இந்த உலகத்துடன் பகிர்ந்து கொள்ள இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தை பயன்படுத்திக் கொள்கின்றனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் விராட் கோலி, தோனி, தவன் உள்பட பெரும்பாலான வீரர்கள் இன்ஸ்டாவில் அக்கவுண்ட் வைத்துள்ளனர். இவர்களில் டி20 மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை இந்திய அணிக்காக வென்று தந்த முன்னாள் கேப்டன் தோனி, 4 கோடிக்கும் அதிகமான ஃபாலோவர்களைக் கொண்ட பிரபலங்களின் பட்டியலில் இணைந்தார்.
இந்தப் பட்டியில் இந்திய அணியின் மற்றொரு முன்னாள் கேப்டன் விராட் கோலி, 22.4 கோடி ஃபாலோவர்களை கொண்டிருக்கிறார். அவர் பிராண்ட் அம்பாசடராக இருக்கும் நிறுவனங்களின் பொருட்களுக்கும் விளம்பரம் செய்ய இன்ஸ்டாகிராமைப் பயன்படுத்திக் கொள்கிறார். இவர் தான் அதிக இன்ஸ்டா ஃபாவோவர்களை வைத்துள்ள கிரிக்கெட் வீரர் ஆவார்.
இவர் தான் இந்திய கிரிக்கெட் வீரர்களில் அதிக ஃபாலோவர்களை இன்ஸ்டாவில் கொண்டுள்ள முதல் இந்திய வீரர் ஆவார். இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கர், கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார். இருப்பினும், இன்ஸ்டாகிராம் அக்கவுண்டில் ஆக்டிவாக இருக்கிறார். அனைத்து வடிவிலான கிரிக்கெட்டிலும் 100 சதங்களை விளாசியுள்ள சச்சின் டெண்டுல்கரை, இன்ஸ்டாகிராமில் 3 கோடியே 71 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர்.
ரோகித் சர்மா
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா 2 கோடியே 58 லட்சம் பேரும், நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணிக்கு கேப்டனாகச் செயல்பட்ட ஹர்திக் பாண்டியா, தென் ஆப்பிரிக்காவின் ஏபி டிவில்லியர்ஸ், யுவராஜ் சிங், வெஸ்ட் இண்டீஸின் கிறிஸ் கெயில், ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் போன்ற முன்னணி வீரர்களை பின்னுக்குத் தள்ளி, இன்ஸ்டாவில் அதிக ஃபாலோவர்களைக் கொண்ட வீரர்களின் பட்டியலில் முன்னேறிக் கொண்டிருக்கிறார்.
குடும்பப் புகைப்படங்கள், பயிற்சியில் ஈடுபடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ஆகியவற்றை ஹர்திக் பாண்ட்யா அதிகம் அப்லோடு செய்வார். சென்னை சூப்பர் கிங்ஸின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா, 2 கோடியே 18 லட்சம் ஃபாலோவர்களை இன்ஸ்டாவில் வைத்திருக்கிறார்.
View this post on Instagram
வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்
இந்தப் பட்டியலில் உள்ள வெளிநாட்டு வீரர்களில் ஏபி டிவில்லியர்ஸும் ஒருவர் ஆவார். உலகம் முழுவதும் ரசிகர்களைக் கொண்டுள்ள ஏபி டிவில்லியர்ஸுக்கு 1 கோடியே 97 லட்சம் ஃபாலோவர்கள் உள்ளனர்.
2007 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் 6 சிக்ஸர்களை அடித்து அசத்திய யுவராஜ் சிங்குக்கு 1.57 கோடி ஃபாலோவர்களும், தற்போதைய இந்திய கிரிக்கெட் அணியின் துணைக் கேப்டனான கே.எல்.ராகுலுக்கு 1.34 கோடி ஃபாலோவர்களும் உள்ளனர்.
நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடருக்கு இந்திய அணியின் கேப்டனாகச் செயல்பட்டுவரும் தவனை இன்ஸ்டாவில் 1.27 கோடி பேர் பின்தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.