Eoin Morgan Retirement: உலகக்கோப்பை வென்ற தங்கம்.. இரண்டு நாட்டுக்காக ஆடிய சிங்கம்.. ஓய்வை அறிவித்தார் மோர்கன்!
கேப்டனாக மோர்கன் 126 ஒருநாள் போட்டிகளில் தலைமை தாங்கி 76 வெற்றிகளை பெற்றுள்ளார். ஒருநாள் போட்டிகளில் இங்கிலாந்து கேப்டனின் சிறந்த வெற்றி இதுவாகும்.
இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் இயான் மோர்கன் அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்தார்.
மோர்கன் ஓய்வு:
36 வயதான மோர்கன் இதுகுறித்து தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “ அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதை பெருமையுடன்ப் தெரிவித்துக்கொள்கிறேன். நீண்ட ஆலோசனைக்கு பிறகு, இந்த கிரிக்கெட்லிருந்து விலகுவதற்காக சரியான தருணம் இது என்று நம்புகிறேன்
கிரிக்கெட்டுக்கு நன்றி, என்னால் உலகம் முழுவதும் பயணம் செய்து நம்பமுடியாத மனிதர்களைச் சந்திக்க முடிந்தது, அவர்களில் பலருடன் நான் வாழ்நாள் நட்பை வளர்த்துள்ளேன். உலகெங்கிலும் உள்ள உரிமையாளர் அணிகளுக்காக விளையாடுவது எனக்கு பல நினைவுகளை அளித்துள்ளது, அதை நான் என்றென்றும் வைத்திருப்பேன்” என்று பதிவிட்டு இருந்தார்.
— Eoin Morgan (@Eoin16) February 13, 2023
மோர்கன் கிரிக்கெட் வாழ்க்கை:
இயான் மோர்கன் தலைமையில் இங்கிலாந்து அணி கடந்த 2019 ம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையை வென்றது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் சர்வதேச கிரிக்கெட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இவரது சர்வதேச வாழ்க்கையில் 16 சதங்கள் மற்றும் 64 அரைசதங்கள் உட்பட 10,858 ரன்கள் எடுத்துள்ளார்.
மேலும், ஒருநாள் போட்டிகளில் 6,957 ரன்கள் மற்றும் டி20 சர்வதேச போட்டிகளில் 2,458 ரன்கள் எடுத்து இங்கிலாந்துக்காக அதிக ரன் குவித்தவர்கள் பட்டியலிலும் இருக்கிறார்.
🏆 ODI World Cup winner
— England Cricket (@englandcricket) February 13, 2023
🏆 T20 World Cup winner
🎖️ CBE for services to Cricket
Our greatest EVER white-ball captain! 🐐#ThankYouMorgs 👏 pic.twitter.com/RwiJ40DiQS
கேப்டனாக மோர்கன் 126 ஒருநாள் போட்டிகளில் தலைமை தாங்கி 76 வெற்றிகளை பெற்றுள்ளார். ஒருநாள் போட்டிகளில் இங்கிலாந்து கேப்டனின் சிறந்த வெற்றி இதுவாகும்.
2019 ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 17 சிக்ஸர்கள் அடித்ததன் மூலம், ஒருநாள் போட்டியில் ஒரே போட்டியில் அதிக சிக்ஸர்கள் அடித்த உலக சாதனையையும் அவர் படைத்துள்ளார்.
இங்கிலாந்து நாட்டின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இயான் மோர்கன், தனது திறமையான பேட்டிங் மூலம் அந்த அணியின் கேப்டனாக பொறுப்பேற்றார். மோர்கனின் தலைமையின் கீழ் அபாரமாக ஆடிய இங்கிலாந்து அணி கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் போடிக்கான உலககோப்பையை வென்று அசத்தியது. இங்கிலாந்து வென்ற முதல் உலகக் கோப்பையும் அதுதான். இவருக்கு வயது 36.
முதன்முதலில் அயர்லாந்து அணிக்காக இயான் மோர்கன்
கடந்த 2010ம் ஆண்டு அயர்லாந்து அணிக்காக அறிமுகமாகிய மோர்கன், பின்னர் இங்கிலாந்து அணிக்காக விளையாட தொடங்கினார். அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய இரு அணிகளுக்காக மோர்கன் இதுவரை 248 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் ஆடியுள்ளார். அதில், 14 சதங்கள் மற்றும் 47 அரைசதங்களும் அடங்கும். 115 டி20 போட்டிகளில் ஆடி 2,458 ரன்களை குவித்துள்ளார். அவற்றில் 14 அரைசதங்களும் அடங்கும். 83 ஐ.பி.எல். போட்டிகளில் ஆடி 5 அரைசதங்களுடன் 1146 ரன்களை அடித்துள்ளார். மொத்தம் 16 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 2 சதங்களுடன் 700 ரன்களை விளாசியுள்ளார்.
கடந்த 2012 ம் ஆண்டுக்கு பிறகு டெஸ்ட் போட்டியில் ஆடாத மோர்கன் ஒருநாள் போட்டி மற்றும் டி20 போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்தி வந்தார். கடந்த ஜூன் மாதம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்த மோர்கன், தற்போது அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வுபெறுவதாக அறிவித்தார்.