Sri Lanka Vs New Zealand:"ஒரு சூறாவளி கிளம்பியதே" - நியூசிலாந்தை ஓட விட்ட இலங்கை! 15 வருடங்களுக்குப் பிறகு சாதனை
Sri Lanka Vs New Zealand: நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியை 2-0 என்ற கணக்கில் இலங்கை அணி வென்றதோடு கடந்த 15 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக டெஸ்ட் தொடரை கைப்பற்றி சாதனை படைத்திருக்கிறது.
நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியை 2-0 என்ற கணக்கில் இலங்கை அணி வென்றதோடு கடந்த 15 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக டெஸ்ட் தொடரை கைப்பற்றி சாதனை படைத்திருக்கிறது.
தொடரை வென்ற இலங்கை:
இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள நியூசிலாந்து அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்தை 63 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இலங்கை அணி 1-0 என முன்னிலை பெற்றது.இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி கடந்த செப்டம்பர் 26-ம் தேதி தொடங்கியது. முதலில் விளையாடிய இலங்கை அணியில் சண்டிமால் 116 ரன்கள், கமிந்து மெண்டீஸ் 182 ரன்கள் மற்றும் குசால் மெண்டீஸ் 106 ரன்கள் என மூன்றுபேர் சதமடித்து அசத்த 5 விக்கெட்டுக்கு 602 ரன்களை குவித்த இலங்கை அணி டிக்ளேர் செய்தது.
15 ஆண்டுகளுக்குப் பின் சாதனை:
தொடர்ந்து தங்களுடைய முதல் இன்னிங்ஸை விளையாடிய நியூசிலாந்து அணிக்கு, சுழற்பந்துவீச்சில் திணறடித்த பிரபாத் ஜெயசூர்யா விக்கெட் வேட்டை நடத்தினார். 18 ஓவர்களை வீசி 6 ஓவர் மெய்டன்களுடன் 6 விக்கெட்டை வீழ்த்திய பிரபாத், நியூசிலாந்து அணியை 88 ரன்னுக்குள் ஆல்அவுட்டாக்கினார்.
First Test series win for Sri Lanka Vs New Zealand in 15 years.
— Mufaddal Vohra (@mufaddal_vohra) September 29, 2024
- Sanath Jayasuriya making things happen for Sri Lankan cricket! pic.twitter.com/3pCVTtXMCD
நியூசிலாந்து 88 ரன்களுக்கு ஆல்அவுட்டான நிலையில், தொடர்ந்து விளையாடுமாறு இலங்கை அணி கேட்டுக்கொண்டது. follow-on மூலம் இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய நியூசிலாந்து அணி 360 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த வகையில் இலங்கை அணி 154 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
இதன் மூலம் 2-0 என்ற கணக்கில் இலங்கை அணி தொடரை வென்றதோடு கடந்த 15 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக டெஸ்ட் தொடரை கைப்பற்றி சாதனை படைத்திருக்கிறது. நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி உலக டெஸ்ட் சாம்பியன்சிப் புள்ளிப்பட்டியலிலும் முன்னேறியுள்ளது.
அந்த வகையில், 60 புள்ளிகளுடன் இலங்கை அணி மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கு முன்னர் இலங்கை அணி ஆறாவது இடத்தில் இருந்தது. தற்போது நியூசிலாந்து அணி 7 வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அதே நேரம் இந்த பட்டியலில் 86 புள்ளிகளுடன் இந்திய அணி முதல் இடத்தில் இருக்கிறது.
மேலும் படிக்க: IPL 2025 New Rules: 2025 ஐபிஎல்.. ஏலம் முதல் சம்பளம் வரை - புதிய ரூல்ஸ் என்ன?
மேலும் படிக்க: Sunil Chhetri:"ஆல் ஏரியாவுலையும் அண்ணன் தான் மாஸ்" - ஐஎஸ்எல் வரலாற்றில் சுனில் சேத்ரி புதிய சாதனை!