WTC Final: இனி இல்லை சாஃப்ட் சிக்னல்கள்.. ஹெல்மெட் கட்டாயம்.. WTC இறுதிப்போட்டியில் புதிய விதி!
சர்வதேச கிரிக்கெட்டில் சாஃப்ட் சிக்னல்கள் எப்போதும் விவாதப் பொருளாக இருந்து வருகிறது. வீரர்களுடன், ரசிகர்களும், முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் சாஃப்ட் சிக்னல்கள் குறித்து தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர்
2021- 2023 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டியானது வருகின்ற ஜூன் 7 முதல் 11 வரை லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது.
கடந்த ஜூன் 1 ம் தேதி முதல் சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு சில புதிய விதிகள் அமலுக்கு வந்துள்ளன. சர்வதேச கிரிக்கெட் விதிகளில் மூன்று முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டு நாளை மறுதினம் தொடங்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிகளில் காணலாம்.
சர்வதேச கிரிக்கெட்டில் சாஃப்ட் சிக்னல்கள் எப்போதும் விவாதப் பொருளாக இருந்து வருகிறது. வீரர்களுடன், ரசிகர்களும், முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் சாஃப்ட் சிக்னல்கள் குறித்து தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து, தற்போது சாப்ட் சிக்னல்கள் தொடர்பான விதிகள் மாறியுள்ளன. இப்போது ஆன்-பீல்ட் அம்பயர்களுக்கு தங்கள் முடிவை மூன்றாவது நடுவரிடம் சாப்ட் சிக்னல் மூலம் அவுட்டா? நாட் அவுட்டா? என்று சொல்ல தேவையில்லை.
அதேபோல், ஐசிசி தற்போது கிரிக்கெட் வீரர்களில் பாதுகாப்பு குறித்தும் புதிய விதியை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
- வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ளும் போது பேட்ஸ்மேன் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும்.
- வேகப்பந்து வீச்சுக்கு எதிராக ஸ்டம்புகளுக்கு எதிராக விக்கெட் கீப்பிங் செய்யும் போது விக்கெட் கீப்பர் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்படும்.
- பேட்ஸ்மேனுக்கு அருகில் பீல்டிங் செய்யும் பீல்டர்கள், கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும்.
WTC இறுதிப் போட்டிக்கான இந்திய அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மான் கில், சேதேஷ்வர் புஜாரா, இஷான் கிஷன், விராட் கோலி, அஜிங்க்யா ரஹானே, கே.எஸ்.பாரத் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், முகமது. ஷமி, முகமது. சிராஜ், உமேஷ் யாதவ், ஜெய்தேவ் உனத்கட்.
WTC இறுதிப் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி:
பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், மார்கஸ் ஹாரிஸ், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுசாக்னே, நாதன் லியோன், மிட்செல் மார்ஷ், டோட் மர்பி, மேத்யூ , ஸ்டீவ் ஸ்மித் (துணை கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், டேவிட் வார்னர்