Watch Video:"தல போல வருமா" - பண்ணை வீட்டில் ஜாலி மூட்! தோனியின் வைரல் வீடியோ
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி அமெரிக்காவில் விடுமுறையை கழித்து விட்டு இந்தியா வந்துள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி தனது பண்ஂணை வீட்டில் பைக் ஓட்டிச் செல்லும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
மீண்டும் களமிறங்கும் தோனி:
ஐபிஎல் சீசன் 18 அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் எம்.எஸ்.தோனி விளையாடுவதற்கான வாய்ப்புகள் உருவாகி உள்ளது. அதாவது, ஐபிஎல் 2008 இல் நிறுவிய ஒரு விதியை மீண்டும் கொண்டு வர ஐபிஎல் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
அதன்படி, குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற இந்திய வீரர்கள், அன்-கேப்ட் பிளேயராக ஏலத்தில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர். இந்த விதி முந்தைய காலத்தில் ஒருபோதும் பயன்படுத்தப்படவில்லை, 2021 இல் நீக்கப்பட்டது. இருப்பினும், அணி உரிமையாளர்களின் நீண்ட விவாதத்தை தொடர்ந்து, அந்த விதி மீண்டும் அமலுக்கு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
வைரல் வீடியோ:
புதிய விதியின் அடிப்படையில், ஐந்து முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் விரும்பினால், அணியின் முன்னாள் கேப்டன் தோனியை ஒரு அன்-கேப்ட் வீரராக தக்க வைத்துக் கொள்ளலாம். இது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்த நிலையில் தான் தல தோனி தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Thala Dhoni back in Ranchi and reunited with his bike 💛#MSDhoni #WhistlePodu
— WhistlePodu Army ® - CSK Fan Club (@CSKFansOfficial) September 27, 2024
🎥 Epic_g7/IG pic.twitter.com/6arv5C5QNF
அதன்படி, தனது குடும்பத்துடன் அமெரிக்காவில் இருந்த தோனி இந்தியா திரும்பியுள்ளார். தனது சொந்த ஊரானா ராஞ்சிக்கு வந்த பின்னர், அவர் ராஞ்சியில் உள்ள தனது பண்ணை வீட்டின் சாலையில் பைக்கில் செல்வது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இந்த வீடியோவை ரசிகர் ஒருவர் தான் எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டிருக்கிறார். தோனி பைக்கை ஓட்டிச் சென்ற சாலையின் அருகே விண்டேஜ் கார் ஒன்றும் நிற்கிறது. இந்த வீடியோ பார்த்து ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
மேலும் படிக்க: IPL 2025 New Rules: 2025 ஐபிஎல்.. ஏலம் முதல் சம்பளம் வரை - புதிய ரூல்ஸ் என்ன?
மேலும் படிக்க: Sunil Chhetri:"ஆல் ஏரியாவுலையும் அண்ணன் தான் மாஸ்" - ஐஎஸ்எல் வரலாற்றில் சுனில் சேத்ரி புதிய சாதனை!