மேலும் அறிய

Ben Stokes: அப்போ ஐ.பி.எல்.. என் தந்தையை இறக்கும்போது பார்க்கமுடியல.. மனம் திறந்த பென் ஸ்டோக்ஸ்

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் டெஸ்ட் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மனநல பிரச்னை தொடர்பாக பேசியுள்ளார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ். இங்கிலாந்து-தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி இன்னிங்ஸ் மற்றும் 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் 25ஆம் தேதி தொடங்குகிறது.

இந்நிலையில் இங்கிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தன்னுடைய மனநல பிரச்னை தொடர்பாக வெளியே கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் டெலிகிராஃப் தளத்திற்கு அளித்த பேட்டியில் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். அதில், “இதுபோன்ற ஒரு காரணத்திற்காக நான் மருந்துகள் எடுத்து கொள்வேன் என்று நினைத்து கூட பார்க்கவில்லை. எனினும் இதற்காக நான் வருத்தப்படவில்லை. ஏனென்றால் அந்த சமயத்தில் எனக்கு உதவி தேவைப்பட்டது.

நான் விளையாட வந்தபோதும் இந்த பிரச்னை இன்னும் முடிவிற்கு வரவில்லை. இப்போதும் நான் மருத்துவர்களை சந்தித்து வருகிறேன். அவர்களுடைய அறிவுறுத்தலையும் பெற்று வருகிறேன். கிரிக்கெட் விளையாட்டிலிருந்து சில நாட்கள் நான் ஓய்வு எடுத்த போது கிரிக்கெட் மீது அதிக வெறுப்புடன் இருந்தேன். ஏனென்றால் கிரிக்கெட் விளையாட்டு என்னுடைய தந்தையை நான் எப்போது பார்க்க வேண்டும் என்று தீர்மானித்தது. 

அதாவது நியூசிலாந்தில் இருக்கும் தந்தையை பார்த்துவிட்டு நான் ஐபிஎல் விளையாட சென்றேன். ராஜஸ்தான் ராயல்ஸ் ஐபிஎல் அணிக்காக நான் விளையாடுவது என்னுடைய தந்தைக்கு மிகவும் பிடிக்கும். இதற்கான நான் ஐபிஎல் தொடரில் பங்கேற்க கிளம்பினேன். இதனால் என்னுடைய தந்தை உயிரிழக்கும் போது நான் அவரை பார்க்க முடியவில்லை. இதன்காரணமாக நான் கிரிக்கெட் விளையாட்டை வெறுக்க தொடங்கினேன்” எனக் கூறியுள்ளார். 

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் டெஸ்ட் கேப்டான ஜோ ரூட் விலகிய பின்பு பென் ஸ்டோக்ஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து தற்போது அவர் டெஸ்ட் தொடர்களில் இங்கிலாந்து அணியை வழி நடத்தி வருகிறார். தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பென் ஸ்டோக்ஸ் முதல் இன்னிங்ஸில் 20 ரன்களும் இரண்டாவது இன்னிங்ஸில் 20 ரன்களும் எடுத்தார். 

ஒருநாள் போட்டியில் ஓய்வை அறிவித்திருந்த பென் ஸ்டோக்ஸ்:

31 வயதான 2பென் ஸ்டோக்ஸ் இதுவரை 104 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 2919 ரன்களுடன் 39.44 பேட்டிங் சராசரியாக வைத்துள்ளார். அதேபோல், 74 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். மேலும், நியூசிலாந்து அணிக்கு எதிரான 2019 உலக கோப்பை இறுதிபோட்டியில் இங்கிலாந்து அணி உலகக் கோப்பை வெற்றிக்கு பென் ஸ்டோக்ஸ் முக்கிய காரணமாக இருந்து ஆட்ட நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அந்த அறிக்கையில், "நான் செவ்வாய்க்கிழமை டர்ஹாமில் இங்கிலாந்துக்கான ஒருநாள் கிரிக்கெட்டில் எனது கடைசி ஆட்டத்தை விளையாட இருக்கிறேன். நான் இந்த வடிவத்தில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன். இது ஒரு நம்பமுடியாத கடினமான முடிவாகும். இங்கிலாந்துக்காக எனது நண்பர்களுடன் விளையாடும் ஒவ்வொரு நிமிடத்தையும் நான் விரும்பினேன். வழியில் நாங்கள் நம்பமுடியாத பயணத்தை மேற்கொண்டுள்ளோம்.

இந்த முடிவெடுப்பது எவ்வளவு கடினமானது, இந்த வடிவத்தில் எனது அணி வீரர்களுக்கு இனி 100% என்னால் கொடுக்க முடியாது என்ற உண்மையைக் கையாள்வது கடினம் அல்ல. இங்கிலாந்து சட்டை அணிந்த எவருக்கும் குறைவான தகுதி இல்லை. கடந்த 11 வருடங்களாக என்னைப் போலவே மற்றவர் ஒரு கிரிக்கெட் வீரராக முன்னேறி நம்பமுடியாத நினைவுகளை உருவாக்க வேண்டிய நேரம் இது.

டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு என்னிடம் உள்ள அனைத்தையும் நான் கொடுப்பேன். இப்போது, ​​இந்த முடிவின் மூலம், டி 20 வடிவத்தில் எனது முழு அர்ப்பணிப்பையும் கொடுக்க முடியும் என்று நினைக்கிறேன்.

ஜோஸ் பட்லர் மற்றும் துணைப் பணியாளர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வெற்றியைப் பெற வாழ்த்த விரும்புகிறேன். கடந்த ஏழு ஆண்டுகளில் வெள்ளை-பந்து கிரிக்கெட்டில் நாங்கள் பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளோம். மேலும் எதிர்காலம் பிரகாசமாக இருக்கிறது. நான் இதுவரை விளையாடிய 104 ஆட்டங்களையும் நேசித்தேன், எனக்கு இன்னும் ஒன்று கிடைத்துள்ளது, மேலும் எனது கடைசி ஆட்டத்தை டர்ஹாமில் உள்ள எனது சொந்த மைதானத்தில் விளையாடுவது ஆச்சரியமாக இருக்கிறது.

எப்போதும் போல், இங்கிலாந்து ரசிகர்கள் எப்போதும் எனக்கு ஆதரவாக இருக்கிறார்கள், தொடர்ந்து இருப்பார்கள். நீங்கள் உலகின் சிறந்த ரசிகர்கள். செவ்வாய்கிழமை வென்று தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரை சிறப்பாக அமைக்க முடியும் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

தலைப்பு செய்திகள்

IND Vs ENG T20: 20 வருடங்களில் இல்லாத மோசமான தோல்வி..! இங்கிலாந்திடம் வீழ்ந்த இந்தியா - 76 ரன்களுக்கு ஆல்-அவுட்
20 வருடங்களில் இல்லாத மோசமான தோல்வி..! இங்கிலாந்திடம் வீழ்ந்த இந்தியா - 76 ரன்களுக்கு ஆல்-அவுட்
Dhoni Kohli: GOAT ரொனால்டோ ஆட்டத்தை நேரில் ரசித்த LEGENDS தோனி, கோலி
Dhoni Kohli: GOAT ரொனால்டோ ஆட்டத்தை நேரில் ரசித்த LEGENDS தோனி, கோலி
தொடர் தோல்வியில் இந்தியா! வெற்றிப்பாதைக்கு திரும்புவது எப்போது? கம்பீருக்கு முற்றும் நெருக்கடி
தொடர் தோல்வியில் இந்தியா! வெற்றிப்பாதைக்கு திரும்புவது எப்போது? கம்பீருக்கு முற்றும் நெருக்கடி
T20 Womens World Cup Final: டி20 உலகக்கோப்பை யாருக்கு? இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இன்று மல்லுகட்டு! சம்பவக்காரிகள் யார்? யார்?
T20 Womens World Cup Final: டி20 உலகக்கோப்பை யாருக்கு? இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இன்று மல்லுகட்டு! சம்பவக்காரிகள் யார்? யார்?

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chief Minister Vijay : கரூரில் சிஎம் விஜய் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் என்ன.? எங்கெல்லாம் செல்கிறார்- பயண திட்டம் இதோ
கரூரில் சிஎம் விஜய் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் என்ன.? எங்கெல்லாம் செல்கிறார்- பயண திட்டம் இதோ..
Senthil Balaji: செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமின் கிடைத்தது எப்படி? திமுக பரபரப்பு விளக்கம்
Senthil Balaji: செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமின் கிடைத்தது எப்படி? திமுக பரபரப்பு விளக்கம்
TVK Alliance: ப.சிதம்பரம் மட்டும் வேண்டாம்.. விஜய் நோ சொல்வதன் காரணம் என்ன?
TVK Alliance: ப.சிதம்பரம் மட்டும் வேண்டாம்.. விஜய் நோ சொல்வதன் காரணம் என்ன?
TVK Alliance: திருமா, சிதம்பரம், வைகோவுக்கு நோ.. விஜய் கைகாட்டப்போகும் அவர் யார்?
TVK Alliance: திருமா, சிதம்பரம், வைகோவுக்கு நோ.. விஜய் கைகாட்டப்போகும் அவர் யார்?
CM Vijay: விஜயை அதிர்ச்சியில் ஆழ்த்திய வீடியோ.. மருத்துவமனைக்கு ஓடோடி செல்ல காரணம் இதுவா?
CM Vijay: விஜயை அதிர்ச்சியில் ஆழ்த்திய வீடியோ.. மருத்துவமனைக்கு ஓடோடி செல்ல காரணம் இதுவா?
Senthil Balaji: கிடைத்தது முன்ஜாமீன்.. வெளியே வருவாரா செந்தில் பாலாஜி.. காத்திருக்கும் போலீசார்!
Senthil Balaji: கிடைத்தது முன்ஜாமீன்.. வெளியே வருவாரா செந்தில் பாலாஜி.. காத்திருக்கும் போலீசார்!
AIADMK: பிணவறையில் அதிமுக.. உங்களுக்கு இதெல்லாம் தேவை தான்.. தேமுதிக பார்த்தசாரதி விளாசல்!
AIADMK: பிணவறையில் அதிமுக.. உங்களுக்கு இதெல்லாம் தேவை தான்.. தேமுதிக பார்த்தசாரதி விளாசல்!
TN Weather Update: வெளுக்கப்போகும் கனமழை.. தமிழ்நாட்டில் எங்கெல்லாம்? - வானிலை மையம் தகவல்!
TN Weather Update: வெளுக்கப்போகும் கனமழை.. தமிழ்நாட்டில் எங்கெல்லாம்? - வானிலை மையம் தகவல்!
Embed widget