England New Test Captain: இங்கிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் அறிவிப்பு
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டியிலும் தோற்றது. இதனால், இங்கிலாந்து அணி மீதும், ஜோ ரூட் மீதும் கடும் விமர்சனங்கள் குவிந்தது.
உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக திகழ்பவர் ஜோ ரூட். இங்கிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டனாக பல வெற்றிகளை தேடித்தந்தவர். இந்த நிலையில், ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டியிலும் தோற்றது. இதனால், இங்கிலாந்து அணி மீதும், ஜோ ரூட் மீதும் கடும் விமர்சனங்கள் குவிந்தது.
இந்த நிலையில், இங்கிலாந்த அணியின் டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்து ஜோ ரூட் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். புதிய கேப்டனாக பென்ஸ்டோக்ஸ் நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதே போல, இங்கிலாந்து கிரிக்கெட்டின் டெஸ்ட் கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் அறிவிக்கப்பட்டுள்ளார்.
With the bat 🏏
— England Cricket (@englandcricket) April 28, 2022
With the ball 🔴
In the field 🤲
Our leader 🧢 pic.twitter.com/knXzk3s62z
30 வயதான ஸ்டோக்ஸ், கவனிக்க வைத்திருக்கும் முக்கிய ஆல்-ரவுண்டர்களில் ஒருவர். கடந்த 2013-14-ம் ஆண்டுகளில் நடைபெற்ற ஆஷஸ் தொடரில் தனது டெஸ்ட் கரியரை ஆரம்பித்தார். இடதுகை பேட்டரான அவர், இதுவரை அவர் விளையாடி இருக்கும் 79 டெஸ்ட் போட்டிகளில் 5061 ரன்கள், 174 விக்கெட்டுகள் எடுத்திருக்கிறார். இந்நிலையில், பென் ஸ்டோக்ஸிற்கு கிரிக்கெட் வட்டாரத்தில் இருந்து வாழ்த்துகள் குவிந்து வருகிறது.
The new England Test captain - one of the finest in this generation, all the best, Ben Stokes.pic.twitter.com/J7hvluYoEv
— Johns. (@CricCrazyJohns) April 28, 2022
Good luck with the best job in world sport @benstokes38 .. I think you are going to make a fine Test skipper .. 👍
— Michael Vaughan (@MichaelVaughan) April 28, 2022
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்