மேலும் அறிய

Dwayne Bravo Retirement: "இதுதான் சரியான தருணம்" - ஓய்வு முடிவை அறிவித்தார் ப்ராவோ

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ட்வெய்ன் ப்ராவோ அறிவித்துள்ளார்.

உலகின் தற்கால கிரிக்கெட்டில் தலைசிறந்த ஆல் ரவுண்டர்களில் ஒருவராக திகழ்பவர் ட்வெய்ன் ப்ராவோ. மேற்கிந்திய தீவுகள் அணிக்காக நீண்ட காலமாக ஆடி வரும் ப்ராவோவிற்கு தற்போது 39 வயதாகிறது. அவர் தனது கிரிக்கெட் வாழ்க்கையின் இறுதிகட்டத்தில் ஆடி வருகிறார். இளம் வீரர்களுக்கான வாய்ப்பை வழங்க வேண்டும், அணியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்றால் எப்பேர்பட்ட ஜாம்பவனாக இருந்தாலும் ஒரு கட்டத்தில் ஓய்வை அறிவித்துதான் தீர வேண்டும்.

 இந்த வரிசையில், தற்போது ட்வெய்ன் ப்ராவோவும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தனது ஓய்வை அறிவித்துள்ளார். இந்த உலககோப்பை தொடருன் அவர் ஓய்வு பெறுகிறார். இன்று தனது ஓய்வு முடிவை வெளியிட்டு ப்ராவோ கூறியிருப்பதாவது, “சரியான நேரம் வந்துவிட்டது என நினைக்கிறேன். கிரிக்கெட்டில் நல்ல பயணம் கிடைத்துள்ளது. கடந்த 18 ஆண்டுகளாக மேற்கிந்திய தீவுகள் அணிக்காக பல்வேறு ஏற்றத்தாழ்வுகளை பார்த்துள்ளேன். ஆனால், அவற்றை திரும்பி பார்க்கும்போது என் நாட்டு மக்களுக்காக நான் சிறப்பாக செயல்பட்டிருக்கிறேன் என பெருமை கொள்கிறேன்.

Dwayne Bravo Retirement:

3 ஐ.சி.சி. கோப்பைகளை பார்த்துள்ளேன். அதில் 2 எனது தலைமையிலும், 1 டேரன் ஷமி தலைமையிலும் கிடைத்துள்ளது. மேற்கிந்திய தீவுகள் அணியில் தற்போதுள்ள வீரர்கள், சர்வதேச அளவில் நாட்டின் பெருமையை நிலைநிறுத்தக்கூடியவர்கள். அவர்களை நினைத்து பெருமை கொள்கிறேன். நாங்கள் டி20 உலககோப்பை தொடரில் இருந்து வெளியேறிவிட்டோம். நாங்கள் எதிர்பார்த்தபடி இந்தாண்டு அமையவில்லை. இதற்காக மன்னிப்பு கேட்கமாட்டோம். ஏனென்றால், போட்டி அவ்வளவு கடினமாக இருந்தது. சோர்வடைய மாட்டோம்.”

இவ்வாறு அவர் கூறினார்.

1983ம் ஆண்டு அக்டோபர் 7-ந் தேதி பிறந்த ட்வெய்ன் ப்ராவோ ஏப்ரல் 18-ந் தேதி 2004ம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் போட்டியில் இங்கிலாந்திற்கு எதிராக சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அறிமுகம் ஆனார். அதே ஆண்டு இங்கிலாந்திற்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலும் அறிமுகம் ஆனார்.

Dwayne Bravo Retirement:

ப்ராவோ இதுவரை 40 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ஆடி 2 ஆயிரத்து 200 ரன்களை குவித்துள்ளார். அவற்றில் 3 சதங்கள். 13 அரைசதங்கள் அடங்கும். அதிகபட்சமாக 113 ரன்களை எடுத்துள்ளார். 164 ஒருநாள் போட்டிகளில் ஆடி 3 ஆயிரத்து 606 ரன்களை எடுத்துள்ளார். 112 ரன்களை தனது அதிகபட்ச ரன்னாக வைத்துள்ள ப்ராவோ 2 சதமும் 10 அரைசதமும் அடித்துள்ளார். 90 டி20 போட்டிகளில் ஆடி 4 அரைசதங்கள் உள்பட 1,245 ரன்களை குவித்துள்ளார். சிறந்த பந்துவீச்சாளரான ப்ராவோ டெஸ்ட் போட்டிகளில் 86 விக்கெட்டுகளையும், ஒருநாள் போட்டிகளில் 199 விக்கெட்டுகளையும், டி20 போட்டிகளில் 78 விக்கெட்டுளையும் கைப்பற்றியுள்ளார்.

Dwayne Bravo Retirement:

ப்ராவோவிற்கு என்று இந்தியாவில் தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தூண்களில் ஒருவராக கடந்த 10 ஆண்டுகளாக ப்ராவோ வலம் வந்துள்ளார். அவர் ஐ.பி.எல். போட்டிகளில் இதுவரை 151 போட்டிகளில் ஆடி 1537 ரன்களையும், 167 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தியுள்ளார். ஒரு ஐ.பி.எல். தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் என்ற சாதனையையும் ப்ராவோ தன்வசம் வைத்துள்ளார். ப்ராவோவின் ஓய்வு மேற்கிந்திய தீவு ரசிகர்கள் மட்டுமின்றி, சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
MP Rahul Gandhi:பாஜக எம்பி.க்கள் எங்களை தடுத்து நிறுத்தினர் - எம்.பி. ராகுல் காந்தி விளக்கம்!
MP Rahul Gandhi:பாஜக எம்பி.க்கள் எங்களை தடுத்து நிறுத்தினர் - எம்.பி. ராகுல் காந்தி விளக்கம்!
IIT Madras: அதிநவீன ஆராய்ச்சி ஆய்வகங்களைப் பார்வையிடலாம்; ஐஐடி சென்னை அழைப்பு!
IIT Madras: அதிநவீன ஆராய்ச்சி ஆய்வகங்களைப் பார்வையிடலாம்; ஐஐடி சென்னை அழைப்பு!
உடைந்தது மண்டை! நாடாளுமன்றத்தில் ரத்தம் வழிய வந்த பா.ஜ.க. எம்.பி. - என்ன நடந்தது?
உடைந்தது மண்டை! நாடாளுமன்றத்தில் ரத்தம் வழிய வந்த பா.ஜ.க. எம்.பி. - என்ன நடந்தது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்PMK MLA Controversy : ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ஆபாசமாக பேசிய பாமக MLA..கதறி அழுத பெண்கள்Aadhav Arjuna slams Amit Shah : ‘’அம்பேத்கர் இல்லனா நீங்க இல்லபாத்து பேசுங்க அமித் ஷா’’-ஆதவ் அர்ஜுனா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
MP Rahul Gandhi:பாஜக எம்பி.க்கள் எங்களை தடுத்து நிறுத்தினர் - எம்.பி. ராகுல் காந்தி விளக்கம்!
MP Rahul Gandhi:பாஜக எம்பி.க்கள் எங்களை தடுத்து நிறுத்தினர் - எம்.பி. ராகுல் காந்தி விளக்கம்!
IIT Madras: அதிநவீன ஆராய்ச்சி ஆய்வகங்களைப் பார்வையிடலாம்; ஐஐடி சென்னை அழைப்பு!
IIT Madras: அதிநவீன ஆராய்ச்சி ஆய்வகங்களைப் பார்வையிடலாம்; ஐஐடி சென்னை அழைப்பு!
உடைந்தது மண்டை! நாடாளுமன்றத்தில் ரத்தம் வழிய வந்த பா.ஜ.க. எம்.பி. - என்ன நடந்தது?
உடைந்தது மண்டை! நாடாளுமன்றத்தில் ரத்தம் வழிய வந்த பா.ஜ.க. எம்.பி. - என்ன நடந்தது?
பல்கலை. துணைவேந்தர் நியமனம்: 13 மாதம் ஆகியும் நிலுவை வழக்கை விசாரிக்க வைக்க முடியவில்லையா? அன்புமணி கேள்வி
பல்கலை. துணைவேந்தர் நியமனம்: 13 மாதம் ஆகியும் நிலுவை வழக்கை விசாரிக்க வைக்க முடியவில்லையா? அன்புமணி கேள்வி
Watch video : நீ பொட்டு வச்ச தங்க குடம்.. நாடு திரும்பிய அஷ்வின்! உற்சாக வரவேற்பு கொடுத்த ரசிகர்கள்
Watch video : நீ பொட்டு வச்ச தங்க குடம்.. நாடு திரும்பிய அஷ்வின்! உற்சாக வரவேற்பு கொடுத்த ரசிகர்கள்
Aerohub: இந்தியாவை திரும்பிப் பார்க்க வைத்த ஸ்ரீபெரும்புதூர்... ‘ஏரோஹப்’ பயன்பாட்டிற்கு வருவது எப்போது ?
இந்தியாவை திரும்பிப் பார்க்க வைத்த ஸ்ரீபெரும்புதூர்... ‘ஏரோஹப்’ பயன்பாட்டிற்கு வருவது எப்போது ?
TVK Vijay: எம்.ஜி.ஆர். ரூட்டா? இல்ல தளபதி தனி ரூட்டா? இடைத்தேர்தலில் விஜய்யின் ப்ளான் என்ன?
TVK Vijay: எம்.ஜி.ஆர். ரூட்டா? இல்ல தளபதி தனி ரூட்டா? இடைத்தேர்தலில் விஜய்யின் ப்ளான் என்ன?
Embed widget