Watch Video: "3 ஓவர்களுக்குள் அவுட்டாக்குறோம்" : குல்தீப் யாதவுக்கு சவால் விட்ட ரிஷப் பண்ட்! அடுத்து நடந்தது என்ன?
துலீப் டிராபியில் பிரபல சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவை 3 ஓவர்களுக்குள் ஆட்டமிழக்கச் செயவதாக ரிஷப்பண்ட் கூறியதும், அதன்பின்பும் நடந்த சம்பவமும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்தியாவில் பிரபலமான கிரிக்கெட் தொடர்களில் ஒன்று துலீப் டிராபி. பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற துலீப் டிராபிக்கான போட்டியில் இந்திய ஏ அணியும், இந்திய பி அணியும் மோதின.
3 ஓவர்களில் அவுட்டாக்குகிறேன்:
இதில் 261 ரன்கள் இலக்கை நோக்கி இந்தியா ஏ அணி களமிறங்கியது. போட்டியில் 45வது ஓவரின்போது குல்தீப் யாதவ் – ஆகாஷ் தீப் பேட்டிங் செய்து கொண்டிருந்தனர். அப்போது, விக்கெட் கீப்பிங் செய்து கொண்டிருந்த இந்திய பி அணியின் வீரர் ரிஷப் பண்ட் 3 ஓவர்களுக்குள் உன்னை அவுட்டாக்குகிறோம் என்று குல்தீப் யாதவிடம் சிரித்துக் கொண்டே கூறுகிறார்.
Rishabh Pant teasing Kuldeep Yadav😂#DuleepTrophy2024 pic.twitter.com/Pj5swF5l7T
— ẞĀÂD (@saad157614) September 8, 2024
நடந்தது என்ன?
ரிஷப்பண்ட் கூறிய 45வது மற்றும் 46வது ஓவரில் குல்தீப் யாதவ் ஆட்டமிழக்கவில்லை. அப்போது 47வது ஓவரை வாஷிங்டன் சுந்தர் வீசினார். அப்போது, அந்த ஓவரின் 2வது பந்தில் குல்தீப் யாதவ் முஷீர்கானிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். ரிஷப்பண்ட் கூறியதுபோலவே 3 ஓவர்களில் குல்தீப் யாதவை அவுட்டாக்கினர். குல்தீப் யாதவ் 56 பந்துகளில் 1 பவுண்டரியுடன் 14 ரன்கள் எடுத்தார். குல்தீப் யாதவை சொன்னதுபோல 3 ஓவர்களுக்குள் ரிஷப் பண்ட் கூறியதுபோலவே அவுட்டாக்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Rishabh Pant To Kuldeep at 45th over : “agle teen over me tu OUT hai”
— Aryan ⁴⁵ (@NotThatAryann) September 8, 2024
47.1 : Kuldeep Yadav OUT 🤣
Pant : “yeaah out hogya out hogya” pic.twitter.com/tbM8r4ryXE
கே.எல்.ராகுல் 57 ரன்கள் எடுத்து தோல்வியைத் தவிர்க்க போராடியபோதும் அவர் 7வது விக்கெட்டாக வெளியேறினார். ஆகாஷ்தீப் 42 பந்துகளில் 3 பவுண்டரி 4 சிக்ஸருடன் 43 ரன்கள் எடுத்தார். இருப்பினும், இந்திய ஏ அணி 53 ஓவர்களில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 198 ரன்களை எடுத்தது.
முன்னதாக, முதலில் பேட் செய்த இந்திய பி அணி முஷீர்கானின் 181 ரன்களை எடுக்க 321 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய ஏ அணி 231 ரன்களுக்கு அவுட்டானது. இந்திய பி அணி 184 ரன்களுக்கு இரண்டாவது இன்னிங்சில் ஆல் அவுட்டானது. இதையடுத்து, இலக்கை நோக்கி ஆடிய இந்திய ஏ அணியால் இலக்கை எட்ட முடியவில்லை.
வங்கதேச தொடர் விரைவில் தொடங்க உள்ள நிலையில் துலீப் டிராபியில் ஆடிய குல்தீப்யாதவ், ரிஷப்பண்ட், ஆகாஷ்தீப், கே.எல்.ராகுல், சுப்மன்கில், துருவ் ஜோயல், சர்பராஸ்கான் ஆகியோருக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.