அதிரடி ஆட்டத்தால் ஐசிசி டி-20 தரவரிசையில் 108 இடங்கள் முன்னேறிய தினேஷ் கார்த்திக்
அதிரடியால் ஐசிசி டி-20 தரவரிசையில் 108 இடங்கள் முன்னேறி உள்ளார் தினேஷ் கார்த்திக். டாப் 10 இடங்களில் இஷான் கிஷனும், 21வது இடத்தில் விராட் ஹோலியும், 18 & 19 இடங்களில் ரோஹித் மற்றும் ஸ்ரேயஸ் உள்ளனர்.
அதிரடி ஆடத்தால் ஐசிசி டி-20 தரவரிசையில் 108 இடங்கள் முன்னேறி உள்ளார் தினேஷ் கார்த்திக். டாப் 10 இடங்களில் இஷான் கிஷனும், 21வது இடத்தில் விராட் ஹோலியும், 18 மற்றும் 19 இடங்களில் ரோஹித் மற்றும் ஸ்ரேயஸ் உள்ளனர்.
தினேஷ் கார்த்திக் 87வது இடம்
தென்னாப்பிரிக்காவுடனான டி-20 தொடரினை இந்திய அணி முடித்துள்ள நிலையில் சர்வதேச கிரிகெட் கவுன்சில் ஐசிசி டி-20 வீரர்களின் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் தென்னாப்பிரிகாவுடனான தொடரில் மிச சிறப்பாக ஆடிய மிடில் ஆர்டர் பேட்ஸ்மென் தினேஷ் கார்த்திக் 108 இடங்கள் முன்னேறி, 87வது இடத்தில் உள்ளார். ஐபிஎல்லில் மிகச் சிறப்பாக விளையாடிய தினேஷ் கார்த்திக் இந்திய அளவில் மட்டுமில்லாமல், சர்வதேச அளவிலும் கவனம் ஈர்த்தார். இதானால் தென்னாப்பிரிக்காவுடனான டி-20 தொடரில் இந்திய அணியில் இடம் பெற்றார். தொடரில் மிகச் சிறப்பாக அதிரடி காட்டிய தினேஷ் கார்த்திக் தற்போது ஐசிசி தரவரிசையில் 108 இடங்கள் முன்னேறி 87வது இடத்தில் உள்ளார். அவரது இந்த அதிரடியான ஆட்டம் தொடரும் பட்சத்தில் எதிர்வரும் டி-20 உலகக்கோப்பையில் இந்திய அணியில் இடம் பெற அதிக வாய்ப்பு உள்ளது.
Players are jostling for spots in the latest @MRFWorldwide T20I men's player rankings 📈
— ICC (@ICC) June 22, 2022
More 👉 https://t.co/ksceq8SPGY pic.twitter.com/1pFif8wMNH
இஷான் கிஷன், விராட்
தென்னாப்பிரிக்க தொடரில் அதிரடியாக விளையாடி மொத்தம் 206 ரன்கள் விளாசிய இடக்கை பேட்ஸ்மேன் இஷான் கிஷன் 7வது இடத்தில் உள்ளார். டாப் பத்து இடங்களில் உள்ள ஒரே இந்திய வீரர் இஷான் கிஷன் மட்டும் தான். தென்னாப்பிரிக்க தொடரில் இடம் பெறாத இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் ஹோலி 21வது இடத்திலும், தற்போதைய கேப்டன் ரோகித் 18வது இடத்திலும், ஸ்ரேயஸ் 19வது இடத்திலும் உள்ளனர்.
முதல் இரு இடங்களில் பாகிஸ்தான் வீரர்கள்
ஐசிசி வெளியிட்டுள்ள டி-20 தரவரிசைப் பட்டியலில் முதல் இரு இடங்களில் பாகிஸ்தான் வீரர்கள் பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோர் உள்ளனர். 818 புள்ளிகளுடன் முதல் இடத்தில் பாபர் அசாமும், 794 புள்ளிகளுடன் முகமதி ரிஸ்வான் இரண்டாவது இடத்திலும் உள்ளனர். டாப் பத்து இடங்களில், 7வது இடத்தில் உள்ள இந்திய வீரர் இஷான் கிஷன் 703 புள்ளிகளுடன் உள்ளார்.
பவுலர்களின் தரவரிசை
ஐசிசி வெளியிட்டுள்ள பவுலர்களுக்கான தரவரிசைப்பட்டியலில் முதல் இடத்தில் இங்கிலாந்தின் ஹசல் வுட் 792 புள்ளிகளுடன் உள்ளார். முதல் பத்து இடங்களில் எந்த ஒரு இந்திய வீரரும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்