DC-W vs MI-W Live: டெல்லியை வீழ்த்தி டேபிள் டாப்பரை தக்கவைத்துக் கொண்ட மும்பை இந்தியன்ஸ்..!
DC-W vs MI-W, WPL 2023 LIVE Score: மும்பை டெல்லி அணிகள் மகளிர் பிரீமியர் லீக்கில் இன்று மோதிக்கொள்கின்றன. இந்த போட்டி குறித்த லைவ் அப்டேட்டுகளுக்கு ஏபிபி நாடு தளத்தில் இணைந்து இருங்கள்.

Background
DC-W vs MI-W, WPL 2023 LIVE Score: மும்பை டெல்லி அணிகள் மகளிர் பிரீமியர் லீக்கில் இன்று மோதிக்கொள்கின்றன. இரு அணிகளும் தலா இரண்டு போட்டிகளில் விளையாடி இரண்டிலும் வெற்றி பெற்றுள்ளன. புள்ளி பட்டியலில் மும்பை அணி முதல் இடத்திலும், டெல்லி அணி இரண்டாவது இடத்திலும் உள்ளன. இந்த போட்டியில் டெல்லி அணி வெற்றி பெற்றால் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்துக்கு செல்லும் என்பதால், டெல்லி இந்த போட்டியில் மிகவும் ஆக்ரோசமாக இருக்கும். அதேபோல் ஏற்கனவே முதல் இடத்தில் உள்ள மும்பை அணிக்கு அதனை தக்கவைத்துக் கொள்ள ஒட்டுமொத்த பலத்தையும் வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.
இந்த போட்டி நவி மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டில் மைதானத்தில் இன்று (மார்ச் 9) இரவு 7.30 மணிக்கு தொடங்கவுள்ளது.
13 ஓவர்கள் முடிவில்..!
13 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 2 விக்கெட் இழப்பிற்கு 89 ரன்கள் சேர்த்து இருந்தது.
மேத்யூஸ் அவுட்..!
நிலையாக ஆடிவந்த மேத்யூஸ் 31 பந்தில் 32 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆகி வெளியேறியுள்ளார்.




















