மேலும் அறிய

MS Dhoni: அடுத்த சீசனில் தோனி..? அதிரடியாக சொன்ன சி.எஸ்.கே CEO!

இதுவரை தோனி அடுத்து சீசனில் விளையாடுவாரா மாட்டாரா என்பது குறித்து எந்த ஒரு முடிவையும் எங்களுக்கு அறிவிக்கவில்லை என்று சி.எஸ்.கே அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் கூறியுள்ளார்.

ஐ.பி.எல் சீசன் 17:

கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கிய ஐபிஎல் சீசன் 17 இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ப்ளே ஆப் சுற்றுக்கு செல்லாமல் வெளியேறியது. அந்த வகையில் சென்னை அணி ஐபிஎல் வரலாற்றில் மூன்றாவது முறையாக ப்ளே ஆப் சுற்றுக்கு செல்லாம் வெளியேறி சி.எஸ்.கே ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 

முன்னதாக கடந்த சீசன் வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்த தல தோனி அப்பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக ருதுராஜ் கெய்க்வாட் அணியின் கேப்டனாக நியமிக்கிப்பட்டார். இவரது தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தாங்கள் விளையாடிய 14 போட்டிகளில்  7 போட்டிகளில் வெற்றி பெற்று 7 போட்டிகளில் தோல்வி அடைந்தது.

சொந்த ஊருக்குச் சென்ற தோனி:

இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளை முடித்து விட்டு எம்.எஸ்.தோனி சில நாட்களுக்கு முன் ராஞ்சிக்கு தன் குடும்பத்தினருடன் புறப்பட்டுச் சென்றுவிட்டார். இந்த சீசன் தான் அவர் விளையாடும் கடைசிசீசனாக இருக்கும் என்ற தகவல் வெளியானது.

ஆனால் இது தொடர்பாக சென்னை அணி நிர்வாகமோ எம்.எஸ்.தோனியோ எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலையும் அறிவிக்கவில்லை. இதனால் தோனி 2025 ஆம் ஆண்டு நடைபெறும் ஐபிஎல் சீசனிலும் விளையாடுவாரா என்று எதிர்பார்ப்பு மீண்டும் எழுந்துள்ளது. 

அடுத்து சீசனில் தோனி விளையாடுவார்:

இது குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் பேசியிருக்கிறார். அதில், ”இதுவரை தோனி அடுத்து சீசனில் விளையாடுவாரா மாட்டாரா என்பது குறித்து எந்த ஒரு முடிவையும் எங்களுக்கு அறிவிக்கவில்லை. எங்களை பொறுத்தவரை தோனி எந்த முடிவை எடுக்கிறாரோ அதற்கு நாங்கள் 100% துணை நிற்போம்.

இதுவரை அப்படித்தான் எங்களுடைய அணி இருக்கிறது. தோனி என்ன முடிவு எடுக்கிறார் என்று அவருக்கு மட்டும் தான் தெரியும். அவர் எது செய்தாலும் நாங்கள் கேட்போம். என்னை பொறுத்தவரை நூறு சதவீதம் தோனி அடுத்த சீசனில் விளையாடுவார் என்று நினைக்கின்றேன். ரசிகர்களும் அதைத்தான் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் இது எங்களுடைய கருத்து தான்” என்றார்.

தோனியின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது:

தொடர்ந்து பேசிய அவர், “அடுத்த சீசனிலும் ருதுராஜ் தான் கேப்டனாக இருக்கப் போகிறார். ஏனென்றால் ருதுராஜ் தேர்வு செய்தது தோனியும் பயிற்சியாளர் பிளமிங்கும் தான் இந்த சீசன் தொடங்குவதற்கு முன்பு இருவரும் ருதுராஜ் கேப்டன் என்று முடிவு செய்துவிட்டார்கள். ருதுராஜ் நடப்பு தொடரில் சிறப்பாகவே செயல்பட்டு இருக்கிறார். அவருக்கு சீனியர் வீரர்களும் உறுதுணையாக இருக்கின்றார்கள். கேப்டன்ஷிப் பதவியில் இருந்தும் அது அவருடைய பேட்டிங்கை பாதிக்கவில்லை.

இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த விஷயமாக இருக்கிறது. இதில் சிஎஸ்கேவில் எதிர்காலம் ருதுராஜ் தலைமையில் தான் இருக்கின்றது. ஆனால் இது எளிதான காரியம் கிடையாது. ஏனென்றால் தோனி என்ற ஜாம்பவானின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. அந்த பொறுப்பை ருதுராஜ் மேற்கொள்ளும் போது நிச்சயம் கடும் நெருக்கடிகள் ஏற்படும் என்று”கூறியுள்ளார் காசி விஸ்வநாதன்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORTNellai dmk issue | ”உன் சாதிக்கு பதவியா? கொன்னு போட்ருவோம்” கதறும் திமுக பேரூராட்சி தலைவிGirl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Sabarimala Temple: சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? -  கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? - கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
“என்னை காதலி” ...  பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
“என்னை காதலி” ... பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
Embed widget