Natarajan Srirangam Visit: ஸ்ரீரங்கம் ஆலயத்தில் வழிபாடு செய்த நடராஜன்..! வைரலாகும் புகைப்படங்கள்..
Natarajan Srirangam Visit: திருச்சி, ஸ்ரீரங்கம் ரங்கநாத சாமி ஆலயத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் சாமி தரிசனம் செய்தார்.
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஹைதராபாத் அணியால் அடையாளம் கண்டறியப்பட்டு இந்திய அணிக்காக டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் ஆடி அசத்தியவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த நடராஜ். காயம் காரணமாக இந்திய அணிக்கு ஆடும் வாய்ப்பை சமீபகாலமாக இழந்தாலும், மீண்டும் அணியில் இடம்பிடிக்க போராடி வருகிறார்.
Had a great time in Trichy !! How can I miss this beautiful #Srirangam #RanganathaswamyTemple # Blessed pic.twitter.com/wSqHxEW9sy
— Natarajan (@Natarajan_91) August 28, 2022
இந்த நிலையில், நடராஜன் திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம் ரங்கநாதசாமி ஆலயத்தில் சுவாமி தரிசனம் செய்தார். திருச்சியில் சுவாமி தரிசனம் செய்த புகைப்படங்களை நட்ராஜ் தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். கடந்த 3 சீசன்களாக ஹைதரபாத் அணியின் தவிர்க்க முடியாத வீரராக வலம் வருகிறார். இதுவரை அவர் 35 ஐ.பி.எல். போட்டிகளில் ஆடி 38 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
டெத் ஓவர் ஸ்பெலிஷஸ்டாக வலம் வரும் நடராஜ் இடது கை வேகப்பந்து வீச்சாளர். சேலத்தைச் சேர்ந்த நடராஜனின் திறமையால் இந்திய அணியில் அவருக்கு இடம் கிடைத்தது. அவர் இந்திய அணிக்காக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 1 டெஸ்ட் போட்டியில் ஆடியுள்ளார். அந்த போட்டியில் இந்திய அணிக்காக 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
அதேபோல, 2 ஒருநாள் போட்டிகளில் ஆடி 3 விக்கெட்டுகளையும், 4 டி20 போட்டிகளில் ஆடி 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். நடராஜன் கடைசியாக இந்திய அணிக்காக இங்கிலாந்து அணிக்கு எதிராக கடந்தாண்டு மார்ச் மாதம் டி20 போட்டியில் ஆடினார். அதன் பின்னர், அவர் இந்திய அணிக்காக ஆட வாய்ப்பு கிடைக்கவில்லை. நடராஜன் விரைவில் இந்திய அணிக்காக ஆடுவார் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர்.
ஐ.பி.எல். போட்டிகளில் ஹைதரபாத் அணிக்காக மட்டுமின்றி பஞ்சாப் அணிக்காகவும் ஆடியுள்ளார். திண்டுக்கல் டிராகன்ஸ், லைகா கோவை கிங்ஸ், தமிழ்நாடு அணிக்காக ஆடியுள்ளார்.
மேலும படிக்க : IND vs PAK Asia Cup 2022: உலகக் கோப்பை தோல்வி.! பதிலடி கொடுக்குமா இந்தியா? பாகிஸ்தானுடன் இன்று மோதல்! முழு விவரம்!
மேலும் படிக்க : Virat Kohli 100th T20I : பாட்ஷாவாக மாறுவாரா கோலி? காத்திருக்கும் ரசிகர்கள்! இன்று 100வது போட்டி! எகிறும் எதிர்பார்ப்பு