IND vs PAK Asia Cup 2022: உலகக் கோப்பை தோல்வி.! பதிலடி கொடுக்குமா இந்தியா? பாகிஸ்தானுடன் இன்று மோதல்! முழு விவரம்!
ஆசிய கோப்பை தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் 14 போட்டிகளில் நேருக்கு நேர் மோதி அதில், இந்தியா 8 போட்டிகளிலும், பாகிஸ்தான் 5 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
இந்தியா-பாகிஸ்தான் போட்டிகள் கொண்ட தொடர் நடப்பது அரிதாகிவிட்டது. சமீப காலமாக இந்தியாவும் பாகிஸ்தானும் ஆசிய கோப்பை மற்றும் ஐசிசி போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகின்றன. இதனால் போட்டி குறித்து பெரும் பரபரப்பும், பில்டப்பும் நிலவி வருகிறது. இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கான டிக்கெட்டுகள் மற்றும் பாஸ்கள் வெளியிட்ட சில மணி நேரங்களிலேயே அனைத்து விற்று தீர்ந்து விடுகின்றனர்.
இதுவரை ஆசிய கோப்பை தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் 14 போட்டிகளில் நேருக்கு நேர் மோதி அதில், இந்தியா 8 போட்டிகளிலும், பாகிஸ்தான் 5 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்திய நிலையில், இந்திய அணி இன்று ஆசிய கோப்பை தொடரில் இன்று பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. இதனால் இந்திய மற்றும் பாகிஸ்தான் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
முன்னதாக, கடந்த ஆண்டு நடைபெற்ற உலககோப்பை டி20 தொடரில் இதுவரை உலககோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியுடன் தோல்வியே சந்திக்காத இந்திய அணி தோல்வியை சந்தித்தது. இதனால் இன்று நடைபெறும் போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி பழி தீர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
The #AsiaCup2022 is a fresh tournament and a new start. We are here for a purpose and we will focus on what we want to achieve from this tournament. Everyone is very excited to be here: #TeamIndia captain @ImRo45 ahead of #INDvPAK. pic.twitter.com/HxfO5ziSJ5
— BCCI (@BCCI) August 27, 2022
தற்போது ட்விட்டரில் #IndvsPak என்ற ஹேஷ்டேக் இந்தியளவில் ட்ரெண்டாகி வருகிறது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆசிய கோப்பை 2022 போட்டி எப்போது நடைபெறும்?
ஆசிய கோப்பை 2022 : இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதும் போட்டி (இன்று) ஆகஸ்ட் 28 ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கிறது.
இடம் : துபாயில் உள்ள துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானம்
நேரம் : இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டி இந்திய நேரப்படி இரவு 7:30 மணிக்கு தொடங்குகிறது. டாஸ் இரவு 7 மணிக்கு போடப்பட இருக்கிறது.
போட்டியை ஒளிபரப்பும் சேனல் :
இந்த போட்டியானது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 3 மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் செலக்ட் எச்டி சேனல்களில் ஒளிபரப்பப்பட இருக்கிறது.
ஆன்லைனில் பார்க்க :
ஆசிய கோப்பை 2022 இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டியை நேரடியாக ஹாட்ஸ்டாரில் பார்க்கலாம்.
இந்தியா vs பாகிஸ்தான் – ஆசிய கோப்பை புள்ளிவிவரங்கள்:
- ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக அதிக ரன் அடித்த இந்திய வீரர் - ரோஹித் சர்மா -328
- ஆசிய கோப்பையில் இந்தியாவிற்கு எதிராக அதிக ரன் அடித்த பாகிஸ்தான் வீரர் - சோயப் மாலிக் - 400
- ஆசியக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அதிக விக்கெட்டு எடுத்த இந்திய வீரர் - ஹர்திக் பாண்டியா - 3
- ஆசிய கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தானுக்கு அதிக விக்கெட்டுகள்: முகமது அமீர் – 8